நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பு நிமலர்நீ றணிதிரு மேனிவரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே. -திருஞானசம்பந்தர்.
சிவபெருமானின் வலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்கின்றன. அவர் பாம்பணிந்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். திருநீறு அணிந்த திரு மேனியர். மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபக்கொடி உடையவர். சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
இராவணன் பற்றிய கதையில்; திருகோணமலையில் உள்ள கோணேசர் ஆலயத்தைப் புரட்டி எடுக்க முற்பட்டதாக ஒரு கிளைக்கதையுண்டு.
சிறந்த சிவபக்தையான இராவணனின் தாயார் வயது முதிர்ந்த நிலையிலும் மலையேறும் சிரமத்தைச் சகிக்காத இராவணேசன் ;கோணமாமலையைப் புரட்டி ;அரண்மனைக்கருகே வைத்து தாயாரின் சிரமம் போக்க முற்பட்டு, வெட்டித் தோளைக் கொடுத்து அசைக்க முற்பட்ட போது; மலை ஆடியதால் உமையவளின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவனார்; பெருவிரலால் அழுத்தியபோது;அதனுள் சிக்குண்ட இராவணேசன்; இசையிலும் வல்லோன் ஆகையால் சாம கானம் பாடி மகிழ்வித்ததால் விடுபட்டான்.
இதனால் திருக்கோணேஸ்வரத்துக்கு 'தெட்சண கைலாயம்' எனும் சிறப்புப் பெயரும் உண்டு.
அந்த வெட்டப்பட்ட பகுதியென பிரதான மலையில் இருந்து பிரியும் பகுதியை; "இராவணன் வெட்டு "என அழைத்து பல்லாயிரக் கணக்கானோரால் விருப்பிப் பார்க்கச் செல்லும் இடமாகத் திகழ்கிறது।
பின்வரும் கம்பராமாயணம்பாடல், மண்டோதரி புலம்பலாக கம்பரால் எழுதப்பட்டது।
"வெள்ளெருக்கம் சடைமுடியான் வேற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி - இழைத்தவாறே
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியைக் மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்குதோ என உடல் புகுந்து தடவியதே ஒருவன் வாளி!!!"
வெள்ளெருக்கம் பூவை விரும்பி அணிகின்ற சிவனார் உறையும் திருக்கோணேசர் மலையை ,புரட்ட முற்பட்ட தெய்வீகத் தன்மை திகழும் பராக்கிரமமான இராவணனின் உடலில், எள் இருக்கக் கூட இடமில்லா வண்ணம் அம்புகள் இழைத்தது போல் துளைத்துச் சல்லடையாக்கியுள்ளனவே!!!ஏன்??? மண்டோதரியின் சிந்தனையாக கம்பர் கூறுகிறார்; தேன் ஒழுகும் மலர்களை அணியும் சீதாப்பிராட்டி மேல் கொண்ட காதல் இவன் உடலில்;இங்கிருக்கோ?எங்கிருக்கோ? என உச்சி முதல் உள்ளங்கால் வரை இராமபாணம் துளைத்துத் துளைத்து தேடியுள்ளது.அதனாலன்றோ!!
அழகான கற்பனை..."நான் ரசித்த வர்ணனைகள்" எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசனும்; இப்பாடலை வெகுவாக சிலாகித்து எழுதியுள்ளார்.மிக அழகாக
இந்தக் காட்சியை ,நாலு வரியில் கம்பர் அடக்கியுள்ளார்.முதல் படித்த போதே மனதில் ஆழமாகப் பதிந்த பாடல்.
******இன்று சிவராத்திரி தினம்; ஈழத்தில் புகழ் பெற்ற திருக்கேதீஸ்வரம்; திருக்கோணெஸ்வரம்; நகுலேஸ்வரம்; முனீஸ்வரம்,காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் போன்ற சிவன் கோவில்களுடன் ஏனைய சிவன் கோவில்களிலும் போர்ச்சூழலிலும் ; மிகச் சிறப்பாக வழிபாடு நடைபெறும்.எம்பெருமான் இன்னருள் பரவட்டும்.
குறிப்பு: கோணேசர் கோவில், இராவணன் வெட்டுப்படம் இணையத்திலும்; வெள்ளெருக்கம் பூப் படம் குமரனில் "கூடல்" தளத்தில் இருந்தும் எடுக்கப்பட்டன.நன்றி

கோவையில் கல்லூரி அளவில் நடந்த கவிதை போட்டியில் இவர் கவிதை முதல் பரிசு பெற, பரிசை கொடுத்தவர் நம்ம தலை சுஜாதா.
நிறைய கவிதைகள் எழுதுங்க , இலக்கியத்தில் சிறந்த விளங்க இவர் வாழ்த்த , பதிலுக்கு அம்மிணி 'எனக்கு சினிமாக்கு பாட்டெழுதனும்,பெரிய ஆளா வரணும் னு 'பதில் சொன்னாங்களாம்'(கற்றதும் பெற்றதும்).
கவுதம் படங்கள் தவிர அவருக்கு மற்ற டைரக்டர்கள் வாய்ப்பு தர வில்லை(இப்போ தான் பேரரசுவே எல்லா பாட்டையும் எழுதுறாறே!!
உங்க அப்பா பேரு ரங்கமணி
அம்மா பேரு தங்கமணி
ரெண்டு பேரும் சேர்ந்து புட்டா கோவில் மணிடோய்'
என்ன லிரிக்ஸ்....
)
தனக்கு காதல் பாடல்கள் மட்டுமில்லாமல் மற்ற பாடல்களும் வருமென நிரூபித்த பாடல் 'கற்க கற்க (VV)'. எளிமையான வரிகள், புதுபுது வார்த்தைகள், விரசமில்லா பாடல்கள் இது தான் தாமரையின் பலம்.
இதோ அவரது லிரிக்ஸில் ஒரு பாடல்.
வசீகரா என் நெஞ்சினிக்க - உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ச்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
(வசீகரா...........)
தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக