படத்துல இருக்குறது என்னன்னு தெரியுதா? விபூதி (திருநீறு) தான் அது. சுமார் 40 வருசத்துக்கு முன்னால,
எங்க ஐயா (அம்மாவோட அப்பா) எங்க மாமாவுக்கு கொஞ்சம் விப்பூதி கொடுத்தாராம். அதை அவர் பத்திரமா வச்சிருந்து 6 வருஷம் முன்னால எங்க அண்ணன் கப்பல் வேலைக்குப் போகும்போது, மடலில் இருந்து கொஞ்சம் விபூதி எடுத்து அதோடு இந்த விப்பூதி கொஞ்சம் கலந்து "தைரியமா போயிட்டு வாங்க, எப்பவாவது பயமா இருந்தா இந்த விபூதிய எடுத்து பூசிக்குங்க, அய்யா கொடுத்தது" என்று சொல்லி கொடுத்தாராம். ஒரு இரண்டு வருஷம் முன்னாடி நான் வேலைக்காக முதன் முதலாக மும்பை போனபோது எங்க அண்ணன் இந்த விபூதியில் இருந்து கொஞ்சம் எடுத்து அதோடு வீட்டில் சாமி முன்பு இருந்த விபூதி கொஞ்சம் கலந்து ஒரு பேப்பரில் மடித்து "அய்யா கொடுத்த விபூதியாம் இது, நான் வேலைக்கு போறப்ப மாமா கொடுத்தாங்க, அதுல கொஞ்சத்த இதுல வச்சுருக்கேன், வேனுங்குறப்ப எடுத்து பூசிக்க" என்று சொல்லி என்னிடம் கொடுத்தார். எங்க அய்யாவையே இதுவரை பார்த்திராத எனக்கு, கையில் உள்ள திருநீறில் ஒரு சில துகள்கள் அவர் கைபட்டது என்று நினைக்கும் போதும், பூசிக்கொள்ளும் போதும் ஏதோ அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய உணர்வு வரும்.
சில நேரங்களில் சமய அடையாளங்கள் என்பதையும் மீறி ஆத்மதிருப்திக்கு இதுபோன்ற விஷயங்கள் ரொம்பவும் தேவைப்படுகிறது.
சில நேரங்களில் சமய அடையாளங்கள் என்பதையும் மீறி ஆத்மதிருப்திக்கு இதுபோன்ற விஷயங்கள் ரொம்பவும் தேவைப்படுகிறது.
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?
02/22/09, 1.20PM:

உலகமே எதிர்பார்க்கும் ஆஸ்கார் விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளன. முன்பு எப்பொழுதையும் விட இந்த முறை இந்தியர்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நாம் அதிகம் எதிர்பார்க்கும் Slumdog Millionaire பட குழுவினருக்கும் குறிப்பாக A.R.Rahmanக்கு விருது பெற வாழ்த்துக்கள்.
Update: 02/22/09, 9.00PM:
Picture Courtesy: NDTV
8 விருதுகளை தட்டிச்சென்ற Slumdog Millionaire பட குழுவினர்க்கும், உலகஅரங்கில் இந்தியாவிற்கு பெருமை தேடிதந்த 'Madras Mozart' A.R.Rahmanக்கும், 'Sound Wizard' Resul Pookuttyக்கும் வாழ்த்துக்கள்.

தமிழ் சேனல்களை பொறுத்தவரை புது விதமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் விஜய் டிவி எப்போதுமே நம்பர் ஒன். ஜோடி நம்பர் ஒன், காபி வித் அணு, நீயா நானா, பாடும் ஆபீஸ், கலக்கப் போவது யாரு
என்று பல நிகழ்ச்சிகளை இதற்க்கு உதாரணமாக சொல்லலாம். எத்தனையோ புதிய நிகழ்ச்சிகள் வந்திருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்னாள் ஒளிபரப்பான யூகி சேதுவின் நையாண்டி தர்பார் இன்றைக்கும் எனக்கு பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று. இது போன்ற நிகழ்ச்சிகளின் வெற்றியை நமக்கு அடையாளம் காட்டுவதே மற்ற டிவிக்களில் (காப்பியடிக்கப்பட்டு) வரும் இதே போன்ற நிகழ்ச்சிகள்தான். இந்த வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பது கோடம்பாக்கம் ஸ்kool. மேடைகளில் மிம்மிக்கிரி செய்யும் கலைஞர்கள் அதிகம் பயன்படுத்திய கான்செப்ட் தான் கதை. ஒரு காலேஜ்ல ரஜினி, கமல், விஜயகாந்த் எல்லாம் படிக்கிறாங்க என்று பல குரல்களில் பேசிக்காட்டுவார்கள், இங்கு அதையே நாடகமாக ஆக்கியிருக்கிறார்கள். வகுப்பின் ஆசிரியராக சுவாமிநாதனும், மாணவர்களாக ராசுக்குட்டி, சின்ன கவுண்டர், மமீதா, ஆண்ட்ரியா, வீராசாமி, சவுண்டு மணி, பில்லா, Prestige பத்மநாபன் மற்றும் பலர். எல்லோருமே கலக்கலாக இமிடேட் செய்தாலும் ஹய்-லைட் பில்லாவாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் தான். அஜித் ஸ்டைலில் அவர் பேசுவதும் பின்னணி இசையில் பில்லா தீம் மியூசிக் வருவதும் பெர்பெக்ட் காமெடி. இந்த நிகழ்ச்சியின் வெற்றியே மொக்கை வசனங்கள்தான். சும்மா சொல்லக்கூடாது அந்தக்கால "Prestige"பத்மநாபனில் இருந்து இந்தகால மமிதா வரை அனைவரும் ஒரேமாதிரி மொக்கை போடுகிறார்கள். கூடிய சீக்கிரம் கோலிவூட் காலேஜ், ஜாலி கிளாஸ் என்ற பெயரில் மற்ற சேனல்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக