செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30

அண்ணன் பைத்தியகாரன் அவர்களால் அனைவரும் கதை எழுத ஆரம்பிச்சாச்சு, சரக்கு உள்ளவங்க கதை எழுதுறாங்க நாம என்னா செய்வது?அட்லீஸ் ஊக்கம் கொடுக்கலாம்சிறு கதை எழுதுவர்களுக்கு. எப்படி ஊக்கம கொடுக்கலாம் என்றுதான் இந்த பதிவு.

பார்த்தீங்கன்னா பல பேர் கதையை எல்லாம் படிக்க நேரம் இல்லை அப்புறம் எப்படி பின்னூட்டம் போடுவது என்று போடுவதே இல்லை, அப்படி செய்தால் கதை எழுதும் ஆசிரியர் மனம் என்ன பாடு படும். இதோ சில ரெடிமேட் டெம்ளேட்ஸ்

சிறு கதைக்கு என்றால்

1) எதிர் பாராத முடிவு:) அருமை

2) நல்ல திரும்பம்:) எதிர் பார்கவே இல்லை.

3) சின்ன கதையாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.

4) //--------------------------------// இந்த வரி மிக அருமை ( ------குள் எதை வேண்டும் என்றாலும் காப்பி பேஸ்ட் செஞ்சுக்குங்க, ஆனால் முடிந்தது or முற்றும் என்ற வரியை காப்பி பேஸ்ட் செஞ்சி அருமை என்று சொல்லிடாதீங்க அடி விழும்).

5) சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.

6) ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!


7) யூத் விகடனில் ஒரு பக்கம் உண்டு!

போட்டிக்கான் கதையாக இருந்தால் வேலை மிக சுலபம்.

1) வாழ்த்துக்கள்

2) போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

3) நிச்சயம் வெற்றி பெற போகும் கதை.

4) கலக்கல் கதை! வெற்றி நிச்சயம்.

5) இப்படி எல்லாம் கதை எழுதினா நாங்க எல்லாம் போட்டியில் கலந்துக்க முடியாது போலவே!!!

6):))) அருமை



7) இதுதான் கதை! இதுமட்டுமே கதை!



8) எனக்கு இல்ல சொக்கா எனக்கு இல்ல!




தொடர் கதைக்கு என்றால்

1) ரொம்ப அருமை! மிக இயல்பாக இருக்கிறது!

2) அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங் !!! ( எத்தனை பாகம் எழுதினாலும் இவர் படிக்க போவது இல்லை என்பது வேறு விசயம்)

3) வாரம் ஒரு முறைதானா? :(((( [ வாரம் ஒரு முறைதானே!!! என்று போட்டுவிட கூடாது கவனம் தேவை]

4) ஹீரோ டயலாக சூப்பர் , ஹீரோயின் டயலாக் சூப்பர்

5) நல்ல எழுத்து நடை!

6) கடைசி வரியில் அடுத்த பாகத்துக்கான் எதிர்பார்பை தூண்டி விட்டு விடுகிறீர்கள்!

7) சீக்கிரம் தொடருங்கள்!!! [ நிஜ கருத்து சீக்கிரம் முடியுங்கள் ]

8)//-------------------------------// நான் ரசித்த வரிகள்

9) கதை போல் இல்லை சொந்த அனுபவமோ!!!

10) தேர்ந்தெடுத்த கதை ஆசிரியர் கதை போல இருக்கு.

11) அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதவும்!!! [ ரொம்ப பெருசா எழுதி இருக்க சின்னதா எழுதுய்யான்னு அர்த்தம்]

12) தொடரும் என்ற வரிக்கு முதல் வரியை காப்பி செய்து, என்ன இப்படி முடித்து விட்டிர்கள் சீக்கிரம் தொடருங்கள்.

13) முடிவை அறிய ஆவலாக உள்ளேன் தனிமடலிலாவது சொல்லவும்!!!

14) முந்தைய பாகங்களை தேடி தேடி படித்தேன் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது உங்கள் தொடர். [ முதல் பாகத்துக்கு இந்த பின்னூட்டம் சரி வராது]

15) மிகவும் விறு விறுப்பாக இருக்கிறது.

16) யாராவது அருமை என்று பின்னூட்டத்தில் சொல்லி இருந்தால் காப்பி பேஸ்ட் செஞ்சு ரிப்பீட்டேய் போடலாம்:)
ச்சின்னப்பையன் அண்ணே புதுசா கேள்வி பதில் தொடர் ஒண்ணை ஆரம்பிச்சிருக்காரு. அந்தக் கேள்வியைப் படிச்சி ஃபீல் ஆன ஒரு அப்பாவி ரங்கமணி (ரங்கமணினாலே அப்பாவி தானேனு உண்மையை எல்லாம் சொல்லப்படாது) எனக்கு தனிமடல்ல பதில் அனுப்பினாரு. அதான் உங்களோட பகிர்ந்துக்கலாம்னு

உங்க மூக்கு உங்களுக்கு பிடிக்குமா?
சி.மூ.உ.மு வா இல்லை சி.மூ.உ.பி யா?
அது என்னனு கேக்கறீங்களா? சில்லு மூக்கு உடையறதுக்கு முன்னாடியா இல்லை பின்னாடியானு சொல்லலையே? அது ஒண்ணுமில்லை சீரியல் பாக்கற நேரத்துல கிரிக்கெட் மாட்ச் பார்க்கலாம்னு சேனல் மாத்தற ஒரு சின்ன சண்டைல சில்லு மூக்கு உடைஞ்சிடுச்சி. என் பல்லு அளவுக்கு சில்லு ஸ்ட்ராங்கா இல்லைனு ரொம்ப ஃபீல் ஆகிட்டாங்க. அப்பறம் அவுங்க ஃபீல் ஆனதைப் பார்த்து நாடகமே பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். மூக்கு இப்பவும் நல்லா இருக்கறதா தங்கமணி சொல்றாங்க.

உங்க பக்கத்துலே யாரு இருக்கறதுக்காக வருத்தப்படறீங்க?
இந்த மாதிரி கேள்வி எல்லாம் பப்ளிக்ல கேக்கப்பிடாது. சொல்லிப்பிட்டேன்

கண்ணாடி முன்னாடி நின்னு உங்க பற்களை எண்ணியிருக்கீங்களா? எவ்வளவு தேறுது?
போன வாரம் எண்ணத சொல்றதா இல்லை இன்னைக்கு எண்ணதை சொல்றதா?

(திருமணமான ஆண்களுக்கு மட்டும்) நீங்க கடைசியா சிரித்தது எப்போது?
நேத்துக் கூட சிரிச்சனே!
ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்த மாமனார், மாமியார் நேத்து ஊருக்கு போறோம்னு சொன்னவுடனே தான். அப்ப தான் முந்தின கேள்வில கேட்ட கவுண்ட்ல ஒண்ணு குறைஞ்சது.

சுடுதண்ணீரில் குளிக்க விருப்பமா அல்லது ஜில் தண்ணீரிலா?
கேஸ்க்கு அலைஞ்சதுல இருந்து ஜில் தண்ணில குளிக்கறது தான் விருப்பம்.

படிக்கட்டில் ஏறும்போதும் இறங்கும்போதும் - ஒவ்வொரு படிகளாக போவீர்களா அல்லது இரண்டிரண்டு படிகளாக தாண்டிப் போவீர்களா?
தனியா வீட்டை விட்டு வெளியே போகும் போது நாலு நாலு படியா தாண்டி போவேன். வீட்டுக்கு வரும் போது ஒண்ணு ஒண்ணா...

இட்லிக்கு எதை தொட்டுக்கொண்டு சாப்பிட பிடிக்கும்? (தரையை / சுவற்றை தொட்டுக் கொள்வேன் என்று அறுக்க வேண்டாம்!!).
எது செய்யறதுக்கு சுலபமா இருக்கோ அதைத் தொட்டுக்கொண்டு சாப்பிடறது தான்.

மோதிரம் போட்டுப்பீங்களா? எந்த விரலில் போட்டுப்பீங்க?
தங்கமணி விரல்ல தான் :)

உங்க தலையில் வகிடு எந்தப்பக்கம் எடுப்பீங்க? இடது, வலது அல்லது நடு?
பூரிக் கட்டைல அடி விழும் போது எந்த பக்கம் விழுதோ அதுக்கு எதிர்பக்கம். அப்ப தானே மறைக்க முடியும்.

எந்த விரலில் நகம் கடிக்க அதிகம் விரும்புவீர்கள்?
ஆபிஸ்ல பக்கத்து சீட்ல உக்கார்ந்திருக்க மல்லு ஃபிகர் விரல்ல இருக்குற நகங்களைத் தான். 

இந்த தொடரை யார் வேணும்னாலும் தொடரலாம்.



தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது
இராமாயணம்.
இராவணன் உருவில்
பக்க்ஷே இருக்க
ராமனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
தமிழர்கள்
கூழு, சுண்டலு, வேர்கடலை, வத்தகறி, வடுமாங்கா, சுண்ட கஞ்சி,சுட்ட வாழை, மக்காச்சோளம், நீர்மோரு, பேட்டரித்தண்ணி, இளநீ, இராத்தொக்கு, உப்புகண்டம், பழைய சோறு, டிகிரி காப்பி, இஞ்சி மரப்பா, கடலை முட்டாய், கமர்கட்டு, வெள்ளரிக்காய், எளந்தப்பழம், குச்சி ஐசு, கோலி சோடா, முறுக்கு, பஞ்சு முட்டாய், கரும்பு சாறு, மொளகா பஜ்ஜி, எள்ளு வடை, பொரி உருண்டை, ஜிகிருதண்டா, ஜீராத் தண்ணி, ஜவ்வு மிட்டாய், கீர வடை, கிர்ணிபழம், அவிச்ச முட்டை, ஆஃபாயில்,பள்ளிமுட்டாய், பப்பாளி, பொகையில, போதைபாக்கு, புண்ணாக்கு..


இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு

அண்ணன், அண்ணி, நாத்தனாரு, மாமியாரு, மாமனாரு, ஓரகத்தி, சக்காளத்தி, தம்பிகாரன், தங்கச்சி, சித்தப்பன், பெரியப்பன், பாட்டன், முப்பாட்டன், பேத்தி, கொள்ளுப்பேத்தி, பேரன், கொள்ளுப்பேரன், பொண்டாட்டி, வெப்பாட்டி, நல்ல புருசன், கள்ளப்புருசன், மச்சினிச்சி, மாமனாரு, கொழுந்தனாரு,கொழுந்தியா, மூதாரு, பாட்டி, போட்டி, அக்காப்பொண்ணு, அத்தைப் பொண்ணு, காதலன், காதலி, டாவு, டைம்பாஸு, தாய்மாமன், பங்காளி, தம்பிபுள்ள, தத்துபுள்ள, சகல,சம்பந்தி, முறை மாமன், முறைப் பொண்ணு, தலைச்சன் புள்ளை, இளைய புள்ளை,மூத்த தாரம், இளையதாரம், தொடுப்பு, ஒன்னு விட்டது, ரெண்டு விட்டது, ரத்த சொந்தம், மத்த சொந்தம், ஜாதிக்காரன், பொண்ணு எடுத்தவன், பொண்ணு தந்தவன்...

இதெல்லாம் டூப்பு, நண்பந்தான் டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, நண்பந்தான் டாப்பு

சோகம், அழுகை, சோம்பல், காதல் தோல்வி, கடுப்பு, எக்ஸாம் பெயிலியர், எரிச்சல், வெறுப்பு, வேதனை, கோபம், பிரிவு, நஷ்டம், பட படப்பு,பழிவாங்கல், பாவம், போட்டுக்கொடுத்தல், பொறாமை, கிண்டலு, எளப்பம், எச்ச புத்தி, இறுமாப்பு, சகுனி வேலை, சதிச்செயல் ,கோல்மூட்டல், குறுக்குப்புத்தி, ஒட்டுக்கேட்டல், ஓரவஞ்சனை, பொய், புளுகுமூட்டை, டகுல் வேலை, டப்பாங்குத்து, அரக்கத்தனம், பீலா, பில்டப்பு, பிசாத்து,கொள்ளிக்கண்ணு, குசும்பு, சின்னத்தனம், சிண்டுமுடி, அல்லக்கை, அல்பம், டேருமாரு, டிமிக்கி, ஊள உதார், ஒப்பாரி, ஜால்ரா, ஜக்கடித்தல்,திருட்டுத்தனம், தில்லுமுல்லு, சண்டித்தனம்..

இதெல்லாம் டூப்பு, ஜாலிதான் டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, ஜாலிதான் டாப்பு



குப்புசாமி, கோவிந்தசாமி, முன்சாமி, முத்துசாமி, கிருஷ்ணசாமி, மாடசாமி, மயில்சாமி, வேலுசாமி, வீராசாமி, கண்ணுசாமி, கருப்பசாமி, மலைச்சாமி, பழனிசாமி, குருசாமி, கோட்டசாமி, சின்னசாமி, பெரியசாமி, ஆறுசாமி, அழகுசாமி, அப்பாசாமி, கொண்டசாமி, வேட்டசாமி, வெங்கடசாமி, தங்கசாமி, பெருமாள்சாமி, நாரயணசாமி, சிவசாமி, சீனுசாமி, சடையசாமி, சந்திராசாமி, வெள்ளசாமி, குயில்சாமி, குமாரசாமி, கோதண்டசாமி, அங்குசாமி, துரைசாமி, பொன்னுசாமி, அய்யாசாமி, அண்ணசாமி, நல்ல சாமி..



இதெல்லாம் டூப்பு, கந்தசாமி டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, கந்தசாமிதான் டாப்பு

[தலைப்புக்கு மன்னிக்கனுங்க,..தோரணை சமீபத்துலதான் பார்த்தேன். அந்த effectலதாங்க வெச்சுட்டேன்]

அப்புறம் கேட்கிறபோது தப்பு ஒன்னும் தெரியலீங்க. ஆனா, தட்டச்சும்போது தெரிஞ்சது. ஒன்னு மட்டும் ரிப்பீட்டு ஆவுது. அது ???? இது வேறையான்னு கேட்கறீங்களோ?

கருத்துகள் இல்லை: