திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்பார்த்தபடியே முடிவடைந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் அனேகமாக தெளிவாக தெரிந்துவிட்டது. காங்கிரசு கூட்டணி பல இடங்களில் முன்னணி பெற்று உள்ளது. தமிழகத்தில் திமுக-காங்கிரசு ஓபன் கூட்டணி, தேமுதிக-காங்கிரசு பினாமி கூட்டணி வெற்றி பெற்றுள்ளன. எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாகவே அடிதடி-அதிரடி-சரவெடி அழகிரி அண்ணே, லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். வீரத் தளபதி கந்துவட்டி மைனர் ஜே. கே. ரித்தீஷ் 60,000 வோட்டு வித்தியாசத்தில் வெற்றி. செலவழித்த தொகைக்கு ஏற்ப வோட்டு வித்தியாசம். ஈழப் பெருச்சாளி வைகோ மண்ணை கவ்வி விட்டார். பாமகவுக்கு கோமணத்துணி கூட மிஞ்சவில்லை.

தமிழகத்தில் நவரசங்களும் கலந்தோடுகிறது. குறிப்பாக, ஈழத்திற்கு பலி வாங்கும் வகையில் பாடம் கற்பிக்க தேர்தல் களத்தில் இறங்கி குருதி சிந்திய தோழர்களும், உணர்வாளர்களும் பேரதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். ஈழத்து குருதியில் கை நனைத்து வோட்டுப் பொறுக்க களம் இறங்கிய சூத்திரதாரி தா.பாண்டியன் கட்சியும், இரட்டை இலையும், பிற போலித் தமிழ்த் தேசிய வியாதிகளும் வாயடைத்துப் போயுள்ளனர். மக்களுக்கு உணர்வு மங்கிவிட்டது, மக்கள் காசு வாங்கிக் கொண்டு வோட்டு போட்டு விட்டனர் என்று பல்வேறு புலம்பல்கள்.

ஆனால், இவையெல்லாவற்றையும் விட பேருண்மை ஒன்று உள்ளது. அது இந்த தேர்தலில் மக்கள் கற்றுக் கொடுத்துள்ள பாடம். யாருக்கு? தேர்தலின் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்ய முடியும் என்று ஊரை ஏமாற்றி வந்தவர்கள், தானும் ஏமாந்து மக்களையும் ஏமாற்ற முயன்றவர்கள் இவர்களுக்குத்தான் பாடம் கற்பித்துள்ளனர் மக்கள். ஈழம், தொழில் மந்தம், பொருளாதார கொள்கையின் தோல்வி, விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, மின்வெட்டு இவற்றை மீறி காங்கிரசு போன தடவையை விட அதிக இடங்களில் வெற்றி பெறுள்ளது. எனில், இவை குறித்து மக்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தமா? இவையெல்லாம் மக்களின் ஜீவாதார பிரச்சினைகள் இல்லை என்று அர்த்தமா? இல்லை, மாறாக, தேர்தல் முடிவுகள் இந்த பிரச்சினைகளின் மீது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதுதான் அர்த்தம்.

எந்த அயோக்கியன் வந்தாலும் இதைத்தான் செய்யப் போகிறான் எனும் போது, மாற்று வழி எதுவும் புலப்படவில்லை எனும் போது, யார் அதிக பணம் கொடுக்கிறானோ, யார் நம்ம சாதிக்காரனோ, யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு வோட்டு போட்டு விட்டு போய்விடுவோம் என்பதைத்தான் மக்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். ஈழத்து ரத்தத்திற்கு பதில் சொல்லும் தேர்தல் இது என்று தேர்தலில் போராடிய பெதிக தோழர்களே, உணர்வாளர்களே இதோ இதுதான் உங்களுக்கான பாடம். மக்களுக்கு இந்த தேர்தலின் மீது அப்படி எந்தவொரு மயக்கமும் இல்லை. இந்த தேர்தல் ஜனநாயகத்தின் மோசடி முகத்தை மக்கள் நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களது பிரச்சினை எல்லாம் மாற்று அரசியல் ஒன்று வலுவாக, நம்பிக்கையூட்டும் வகையில் இல்லாததுதான்.

தோழர்களே, உண்மையான தீர்வை நோக்கித்தான் நமது பயணம் எனில் மக்கள் மத்தியில் மாற்று அரசியலுக்கான நம்பிக்கையை விதைப்போம். இல்லையேல் அதுவரை மக்கள் நமது சந்தர்ப்பவாத தேர்தல் நம்பிக்கைகளில் பகடை உருட்டவே செய்வார்கள். உணர்வு மங்கி போயுள்ளது மக்களுக்கல்ல தோழர்களே, நமக்குத்தான். விலை போனது மக்கள் அல்ல தோழர்களே, நாம்தான் சரியான அரசியல் மீது நம்பிக்கையின்றி விலை போய் விட்டோம். தமிழகத்தின் தலைவிதியை இப்படியெல்லாம் மாற்றிவிட முடியாது தோழர்களே. இதோ மக்கள் இந்த தேர்தலில் செவிட்டில் அறைந்தது போல நமக்கு இந்த உண்மையையே உணர்த்தியுள்ளனர்.

அசுரன்

தமிழ்சசி எழுதிய ஒரு கட்டுரையில் ப்ரோக்னோஸ்டிக்சேஜ் என்ற தோழர் இட்டுள்ள ஒரு பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தோழர் ப்ரோக்னோஸ்டிக்சேஜ்க்கு நன்றிகள்.


கோடீசுவர வேட்பாளர்கள்! கோவணத் துணியோடு மக்கள்!!



தலைகீழாகத்தான் இருக்கு உலகம்
காதலில் இருக்கையில்.

In Love, World is upside down!

மாட்டுக்கும் மனுசனுகும்
மவுசும் பவுசும்.

Chennai Sangamam 2009


எதிர்காலம் விற்பனைக்கு
நிகழ்காலம் கட்டணம்

Fortunately Unfortunate!

பாதியைக் காணோமேன்னுட்டு வருந்தறவன் இறந்தகாலம் தாண்டறதில்லை.
மீதி இருக்கேன்னுட்டு குஜாலாகறவன் தேங்கி நிக்கறதில்லை!

Those Early days... mmm...

மசினகுடியில் ஒரு மப்புகுடி... பாட்டிலு அவுட்டாப் ஃபோகஸ்ல இருக்கறதுக்கு காரணம்.. ஹிஹி...

Batchelors meet


ஹேங் ஓவர்..
கூழானாலும் குளித்துக் குடி
குவாட்டரானாலும் அளவாய் அடி

Hangover!!!


அடையார் இரட்சகர்...

Ghandinagar Church, Adyar


ரேபனுக்கா? கோல்கேட்டுக்கா?

Close-Up or Ray-Ban ?!


மதுரை தெப்பக்குளத்தினுள் ஒரு அமேசான் காடுகள்...

Madurai Temple Pool - A Google view :)


கட உள்...

Madurai Temple Statue

தனிமையில் தனி மயில்...

Loneliness in the Crowd

எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!!

எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!!
தூரிகைகளின் துயரப்பதிவுகள், 07 மார்ச், தியாகராயா பள்ளி, தி. நகர், சென்னை.




தூரிகைகளின்_துயரப்பதிவுகள்



ம.செ, மதன் மற்றும் மாருதி...

Maa Se, Madhan & Maaruthi

1000 பேர் சாவு... போர்... எல்லாமே நமக்கு திடுக்கிடும் "செய்திகள்!"

1000 Dead... War... All just NEWS!!!

ஓவியம் என்னவோ முடிஞ்சது.. சொன்ன சேதி போய்ச்சேருமா?

Painting Completed... Will the Message reach?!

துயரத்தின் வெளிப்பாடு வண்ணங்களில்...

Colors of Emotions...


பரிட்சைதான்... மார்க்குக்கு இல்லாம உணர்வுக்காக...

This time not just for Marks...

அழிவினைப் பற்றிய உருவாக்கம்...

Creativity on Genocide...

நம்பிக்கையிழந்த கருப்பும் சிவப்பும் மற்றும் "வெளுப்பும்"!

Faded Black, Red & White...

அப்பா அங்கிட்டு வரையறாரு.. என்னால முடிஞ்சது இங்கிட்டு...

I can reflect Daddy's feelings..

தூரிகைகளின் துயரப்பதிவுகள்... சில உங்கள் பார்வைக்கு...

தூரிகைகளின் துயரப்பதிவுகள்...


More than a Blog Aggregator

by அப்பாவி இந்தியன்
இன்று பல பதிவர்கள் கலைஞர் ஏதோ செய்ய கூடாத தவறை செய்து விட்டதை போல் பதிவெழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆம் எனக்கு கூட கலைஞர் இலங்கை பிரச்சினையில் எடுத்த சில முடிவுகளில் உடன்பாடு இல்லை. ஆனால் ஒட்டு மொத்தமாக அவர் ஏதோ இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர் போலவும், இப்போது அங்கே நடந்து கொண்டிருக்கும் காட்டுமிராண்டித்தனமா தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கு அவர் தான் காரணம் போலவும் பதிவு எழுதுபவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இன்று கலைஞர் ஆட்சி நடப்பதால் தான் தமிழகத்தில் இப்படி இலங்கை தமிழர்களுக் ஆதரவாக போராட்டம் நடத்த முடிகிறது. 'அம்மா' ஆட்சியிலிருந்தால் இலங்கை தமிழர்களை பற்றி நினைத்தவுடனே 'உள்ளே' தூக்கி போட்டுவிடுவார்கள். இன்று இலங்கை தமிழர்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் தலைவர்கள் 'அம்மா' ஆட்சியிலிருந்தால் வாயை திறப்பார்களா? கலைஞர் இலங்கை தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தவர் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.


More than a Blog Aggregator

by அப்பாவி இந்தியன்
சமீபத்தில் ராம சேனா என்ற அமைப்பினர் மங்களூரில் ஒரு பாரில் புகுந்து அங்கிருந்த பெண்களை தாக்கியது நினைவிருக்கலாம். அந்த பிரச்சனை மிக பெரியதாக விசுவரூபமெடுத்துள்ளது. அந்த அமைப்பினர் சமீபத்தில் காதலர் தினத்தை கொண்டாடகூடாது, அப்படி கொண்டாடினால், கொண்டாடுபவர்களை தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்திருந்தனர். அதற்கு பதிலடியாக "Consortium of Pubgoing, Loose and Forward Women" என்ற அமைப்பினர் ராம சேன அமைப்பினர்க்கு "பிங்க்" நிற ஜட்டி அனுப்பிவைத்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளனர். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை?
http://thepinkchaddicampaign.blogspot.com/
தமிழ்மணம் கொஞ்ச காலமாகவே இரட்டை முகம் காட்டி வருகிறது......





இதில் யாருக்கு எந்த முகம் பிடிக்குதோ தெரியலை.........





எனக்கு மட்டும் பழைய கிளாசிக் முகம் [முகப்புதான்] பிடிக்குது....






புது முகம் [முகப்பு] ஏனோ ஈர்க்கவில்லை....








ஒருவேளை அந்த பழைய முகப்பு இருக்கும் போதுதானே எழுதத் தொடங்கினேன்.



உங்களுக்கு?


டிஸ்கி:இந்த இடுகைக்கு 'சூடு' வைப்பாங்களா?:((((

கருத்துகள் இல்லை: