அவ்வாறு நாடு திரும்பாதவர்களுக்குப் பதிலாகப் புதியவர்களை நியமிப்பது குறித்துக் கூட்டமைப்பினர் ஆராய்ந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, சிவாஜிலிங்கம்,கஜேந்திரன், என்.கே.ராஜலிங்கம் ஆகியோர் நீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியுள்ளனர்.
இவர்களில் சிலருக்கு நாடாளுமன்றத்தில் விடுமுறை பெற்றுக் கொடுப்பதில் இங்கிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.
விடுமுறை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் அவர்களுக்கு விடுமுறை வழங்கக் கூடாது எனவும் நாடாளு மன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியிருந்ததுடன், நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக வெளிநாடுகளில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திய அத்தாட்சிப் பத்தி ரத்தை கொடுத்து விடுமுறை பெற வேண்டிய நிலைக்குக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தள்ளப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே வெளிநாடு சென்று நீண்டகாலமாக நாடு திரும்பாதவர்கள் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு கூடி ஆராய்ந்திருப்பதுடன், உடனடியாக நாடு திரும்பாதவர்களுக்குப் பதிலாகப் பொருத்தமானவர்களை நியமிக்கத் தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையிலேயே கூட்டமைப்பு இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளது.
தூக்க மருந்து
-----------------
துக்கத்தை உறைய வைத்து
துயரத்தைக் குறைத்து வைக்கும்
துரோகத்தை மறக்க வைத்து
பழிப்படலம் முடித்து வைக்கும்
சித்தெறும்பு நேரத்தை
புலிப்பாய்ச்சல் பாய வைக்கும்
மருந்தாகத் தாயாக
மாறுகின்ற தூக்கத்தின்
துணை கொண்டு வாழ்ந்திருந்து
தொடங்கிடுக புது வாழ்வு
--------------------------------நாகேந்திர பாரதி
---------------------------------------------------------------------
தூக்க மருந்து
-----------------
துக்கத்தை உறைய வைத்து
துயரத்தைக் குறைத்து வைக்கும்
துரோகத்தை மறக்க வைத்து
பழிப்படலம் முடித்து வைக்கும்
சித்தெறும்பு நேரத்தை
புலிப்பாய்ச்சல் பாய வைக்கும்
மருந்தாகத் தாயாக
மாறுகின்ற தூக்கத்தின்
துணை கொண்டு வாழ்ந்திருந்து
தொடங்கிடுக புது வாழ்வு
--------------------------------நாகேந்திர பாரதி
---------------------------------------------------------------------
நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு புதிய அம்சங்களை தந்து வருகிறது. அந்த வகையில் மனிதனின் வாழ்க்கையில் ஒரு குடும்ப உறுப்பினரைபோல் ஆகி விட்ட டி.வி தொழில்நுட்பத்தில் இப்போது அதி உயர்வகை தொழில்நுட்பமாக இருந்து வருவது எல்.சி.டி என்னும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய எல்.சி.டி டிவிக்கள்.
டி.வி தொழில்நுட்பத்தை பொருத்தவரை முதலில் சாதாரனவகை டிவிக்கள் வந்தன, இவைகள் பெரும்பாலும் மிக அதிக கனத்துடன் கூடியதாக இருக்கும்,அடுத்ததாக பிளாட் என்று சொல்லப்படுகின்ற டி.விக்கள் வந்தன இந்தவகை டி.விக்கள் முன்பக்கம் தட்டையாக பார்ப்பதற்கு நல்ல வடிவமைப்புடன் இருக்கும்.அதற்கு அடுத்த படியாக 'ஸ்லிம்' என்று சொல்லப்படுகின்ற டி.விக்கள்.வந்தன.இந்த வகை டி.விக்கள் அதிக கனம் இல்லாமல் எடை குறைவாக இருக்கும், அதற்கு அடுத்தபடியாக "பிளாஸ்மா" என்று அழைக்கப்படுகின்ற தொழில்நுட்பத்தில் டிவி.க்கள் வந்தன, இந்த வகை டி.விக்கள் மிக அகன்ற திரையுடன் காட்சியளிக்கும், சாதாரண வைகை டி.வியுடன் ஒப்பிடும் பொது இதன் திரைக்காட்சிகள் அற்புதமாக இருக்கும்.பிளாஸ்மாவின் முன்னேற்றமாக இப்போது சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் தொழில்நுட்பம் தான் எல்.சி.டி.
மிக எடை குறைவான, அகன்ற திரையுடன், அதிநுட்பமான புள்ளிகள் இல்லாத திரைக்காட்சிகளை கலர்புல்லாக காட்டக்கூடிய டி.வியாக இந்த வகை டிவிக்கள் சந்தையில் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன, இந்த வகை டிவிக்கள் சந்தையில் அறிமுகமான பொது அதிக விலையில் விற்கப்பட்டது. ஆனால் பல்வேறு நிறுவனங்களும் இதில் போட்டி போட்டதால் இதன் விலை படிப்படியாக குறைந்து இப்போது 13,000 ரூபாய் விலையிலேயே எல்.சி.டி டிவிக்கள் கிடைக்கின்றன.
இந்த தொழில்நுட்பம் அறிமுகமானபோது பிளாஸ்மா வகை டிவிக்கள் விற்பனை குறைந்தது,மேலும் பிளாஸ்மாவுடன் ஒப்பிடும்போது எல்.சி.டி தொழில்நுட்பம் உயர்ந்ததாக உள்ளது.
ஆனால் இப்போது எல்.சி.டி தொழில்நுட்பத்தையும் தூக்கி சாப்பிடும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டது, அதுதா எல்.ஈ.டி தொழில்நுட்பம் இனி சந்தையில் இந்த வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் டி.விக்கள் தான் போட்டியில் களமிறங்கும்.
இந்த வகை டி.விக்களில் அகன்ற திரை, படங்களை மிகத்துல்லியமாக காட்டும்
(high resulation picture engine, இன்டர்நெட் டி.வி,யு.எஸ்.பி போர்ட்,Wireless LAN Adaptor Support ,100/200Hz என்ற வேகத்தில் செல்லக்கூடிய திரைக்காட்சிகள் போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகள் உண்மையிலேயே உங்களின் வாழ்க்கையை இன்னும் பரவசப்படுத்துவதாக அமையும் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்தியாவை பொறுத்தவரை "சாம்சங்" நிறுவனம் தான் முதல் முறையாக இந்த வகை டி.விக்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் விலை மட்டும் மிக மிக அதிகமாக உள்ளது. எல்.ஈ.டி டிவிக்களின் ஆரம்ப விலை 1,25000 ( ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம்) என்ற அளவில் உள்ளது. இது அறிமுகப்படலம் என்பதால் விலை அதிகமாக உள்ளது, போட்டி நிலவும் போது விளையும் தானாக குறைந்து விடும். அதுவரை பொறுத்திருப்போமே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக