ஞாயிறு, 28 ஜூன், 2009

2009-06-28

பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர்
கு. இராமகிருட்டிணன், பெரம்பலூர் மாவட்ட பெரியார் திராவிடர் கழக செயலாளர் லட்சுமணன், ம.தி.மு.க கோவைமாவட்ட மாணவரணிச் செயலாளர் புதூர்சந்திரசேகர் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த தமிழக அரசைக்கண்டித்தும், தமிழுணர்வாளர்களை விடுதலை செய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் 26-6-2009 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் இல.அங்ககுமார் தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் துரைசாமி,ராசு,அகிலன்,கார்த்திகேயன்,வழக்கறிஞர்கந்தசாமி,பாரதிவாசன்,மயில்சாமி,முத்துக்குமார்,மனிதநேயப்பாசறை சக்திவேல்,தென்மொழி துரையரசனார்,இயற்கை வாழ்வகம்முத்துச்சாமி,உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


.
' தி ஹிந்து ' ஆங்கில நாளிதழில் நமது ஆரம்ப சுகாதார நிலையம் பற்றிய செய்தி ( ஒரு பக்க அளவுக்கு )மார்ச் 1 , 2008 ல் வெளியானது .



More than a Blog Aggregator

by பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்
வெம்பாக்கம் ஒன்றியம் சித்தாத்தூர் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சித்தாத்தூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது . அரசாணை நகல் இதோடு இணைக்கப்பட்டுள்ளது .






More than a Blog Aggregator

by பிரியமுடன்.........வசந்த்
வியர்வை




விழித்தது முதல்
விழிதூங்கும் வரை
ஒரு முறையேனும்
வந்துவிடுகிறாய் நீ

உழைப்பவனுக்கு நீ
விருதாகவும்
சுவையாகவும்

உறக்கத்தில் வாழ்பவனுக்கு நீ
கானல் நீராகவும்
உவர்ப்பாகவும்

கண்முழி பிதுங்கும் கூட்டத்திலும்
வருகிறாய்
கனவில் கண்ட பயத்தினாலும்
வருகிறாய்

உன்னை விரும்புவனுக்கு
இயற்க்கை காற்று பரிசாய்
வருகிறது

உன்னை விரும்பாதவனுக்கு
செயற்க்கை காற்று காசை
கரைக்கிறது

ஆசையாய் சேர்க்கும்
அசையா சொத்துக்கள்
மத்தியில்
ஆசையாய் சேரும்
அசையும் சொத்து நீ

உன்னை மறைக்க உண்டு
பல வாசனை திரவியங்கள்
ஆனால் அவற்றுக்கு இல்லை
உன் போல் வாசனைகள்

தண்ணீருக்கும் உண்டு
கண்ணீருக்கும் உண்டு வறட்ச்சி
திரட்ச்சியாய் வரும்
உனக்கில்லை வறட்ச்சி...

ச்சீசீ....
என்று சொல்பவனுக்கும்
வருவாய் சீதனமாய்....

துளித்துளியாய் வருகிறாய்...
துடைக்க துடைக்க வருகிறாய்...



விட்டமின்கள்






தாயின் பாசம்
அன்பு எனும் A விட்டமின்...

தந்தையின் நேசம்
பாசம் எனும் B விட்டமின்...

நண்பனின் நட்பு
சிந்தனை எனும் C விட்டமின்...

ஆசிரியரின் ஆக்கம்
எண்ணம் எனும் E விட்டமின்...

கட்டியவளின் கரிசணை
காதல் எனும் K விட்டமின்...

மகனின் பரிவு B1 ஆக ...
மகளின் கனிவு B6 ஆக...
சமூகத்தின் மதிப்பு b12 ஆக...
காதலி கால்சியமாய்...

ஆக மொத்தம் வாழ்க்கையே

சத்துள்ள உறவுகளினால்

பெற்ற ஆரோக்கிய வாழ்க்கை....



தமிழை தக தக வெனும் மின்ன செய்யும்

கவிதை ஊற்றும்,

என்னை எழுத தூண்டியவருமான

கவியுலக அரசி தமிழரசிக்கு இப்படைப்புகள்

சமர்ப்பணம்

இவண்
பிரியமுடன் வசந்த்



ஒரு டஜன் படங்கள் வரும் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது.
இந்த வருடத்தின் தமிழ்‌த் திரையுலகின் லாப நஷ்டத்தை தீர்மானிக்கும் மாதமாக ஜூலை இருக்கும் என்பதே விநியோகஸ்தர்கள், திரையரங்கு உ‌ரிமையாளர்களின் கணிப்பு.

ஜூலை 3ஆ‌ம் தேதி பா.விஜய்யின் ஞாபகங்கள் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து உன்னை கண் தேடுதே, கரண் நடித்திருக்கும் மலையன், பசுபதி, வடிவேலு நடித்திருக்கும் ஏ.‌ஜி.மூர்த்தியின் வெடிகுண்டு முருகேசன், ஜெய்யின் வாமனன், விஜயகாந்தின் எங்கள் ஆசான், சிந்தனை செய், ராசி அழகப்பனின் வண்ணத்துப் பூச்சி ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன.

இவற்றுடன் கந்தசாமி உள்பட மேலும் பல படங்கள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவன், சதா நடித்திருக்கும் நான் அவள் அது படத்தையும் ஜூலையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சஞ்சய் ராம் தனது லிங்கம் தியேட்டர்ஸ் சார்பில் எடுத்திருக்கும் பூவா தலையா படத்தையும் ஜூலையில் வெளியிட முடிவு செய்துள்ளார். ஆக, அதிக திரைப்படங்கள் வெளியாகும் மாதமாக ஜூலை இருக்கும் என எதி‌ர்பார்க்கலாம்.

செந்தழல் ரவி க்கு அறிமுகம் எதுவும் பெருசாக தேவையில்லை, ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறார்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை அவரிடம் கேளுங்கள்...

கருத்துகள் இல்லை: