செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30



More than a Blog Aggregator

by Poornima

ஒவ்வொரு காதலும் முறியும்போதெல்லாம் வருத்தமாய் மட்டுமே இருந்தது.
இந்தக் காதல் முறியும்போதென்னவோ பயமாயிருக்கிறது!

ஆர்குட்டிலும் சரி என் பிளாகிலும் சரி,
புகைப்படத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறேன்.

எல்லோரும் ஏன் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
எனக்கும் நிலையாய் ஒரு படத்தைப்போட ஆசை தான்.


சரி! உடனே பதில் சொல்!
எப்போது நீ என்னிடம் வருவாய்?
உன் புகைப்படத்தை எனக்குரியதென சொல்லிப்போட, அனுமதி தருவாய்?

சொல்லாத காதல் சுகமானது.

சொல்லாமலேயே விடப்பட்ட காதல் அல்ல.

சொல்லாமலிருந்தாலும் கூட புரிந்துகொள்ளப்படுகிற காதல் !
இந்த வாரம் என் இசைப்பதிவுகளில் - முருகர் பாடல்கள்

பாடல்: விளையாட இது நேரமா
ராகம்: ஷன்முகப்பிரியா
தாளம்: ஆதி






பாடல்: தீப ஜோதியாய்


சினிமா இயக்குனர்கள் படம் தொடங்கும்முன்பே செய்யும் முதல்காரியம் பிலிம் சேம்பருக்குபோய் 'டைட்டிலை' பதிவு செய்வதுதான். அந்த 'பழக்கதோஷத்தில்' ,கட்சி ஆரம்பிக்கும் முன்பே தனது கட்சியின் பெயரை அறிவித்துஇருக்கிறார் நடிகர் எஸ். வி. சேகர்.

அகில இந்திய ஆர்ய முன்னேற்றக்கழகம் - இதுதான் அந்தப்பெயர். இந்திய அரசியல் வரலாற்றில், முதல் முறையாக(?) பிராமணர்களுக்காக தொடங்கபோகும் ஒரு சாதிக்கட்சி. கட்சிபெயரை பார்த்தால் சாதிக்கட்சி மாதரி தெரியவில்லை. எதோ நடிகர் ஆர்யாவின் ரசிகர்மன்றம்போல இருக்கிறது. சிறுத்தை, புலி,சிங்கம் என்று சேர்த்தால்தானே இளைஞர்களுக்கு சமுதாய 'உணர்வு' வரும்?

கட்சிபெயரை அறிவித்துவிட்டு அவர் ஒரு பேருரை ஆற்றினார்.

"பிராமணர்கள் பொருளாதாரத்தில் நலிந்து உள்ளனர். அவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம், ஒவ்வொரு கட்சியும் தலா 5 தொகுதிகளை பிராமணர்களுக்கு ஒதுக்க முன்வந்தால் நாங்கள் கட்சி தொடங்க அவசியம் இருக்காது. எனவே கட்சி ஆரம்பிப்பதும், ஆரம்பிக்காததும் தமிழக அரசியல் கட்சிகள் கையில் இருக்கிறது.

தந்தை பெரியார் சொன்னது போல் எல்லா சமூகத்தினருக்கும் சமமான பங்களிப்பு வேண்டும். பிராமணர்களுக்காக நான் துவங்கிய அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. பண பலமும், ஆட்கள் பலமும் சரியாக அமைந்தால் கட்சி துவங்குவேன்.

12 தொகுதிகளில் ஜெயிக்க கூடிய அளவு நாங்கள் உள்ளோம். குறைந்தது 5 எம்.எல்.ஏ.க்களாவது எங்கள் சமூகத்தின் சார்பில் சட்ட மன்றத்துக்கு செல்ல வேண்டும். அதற்கு ஆதரவான கட்சிகளுடன் இணைந்து செல்லவும் தயாராக இருக்கிறோம்"

என்றவர், ஹைலைட்டாக "தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில் உள்ளனர். இலவச கலர் டி.வி. பெட்டிகூட தர மறுக்கிறார்கள். புது கட்சி துவங்கினால் அது ஆர்யர்கள் முன்னேறத்துக்காகவும், ஆர்ய-திராவிட ஒற்றுமைக்காகவும் பாடுபடும்" என்று பஞ்ச் வைத்தார் சின்ன கேப்டன்(!).

கட்சியின் சின்னத்தில் தேசிய கொடியின் வண்ணங்களும், ராஜாஜி உட்பட்டோரின் படங்களும் இருக்கும் என்றார் ('ஜெ' வுக்கு இடம் உண்டா?).

விரைவில், 'இனமான சிங்கம் எஸ். வி. சேகர் அழைக்கிறார், அலை கடலென அணி திரள்வீர்' என்ற டிவி விளம்பரத்துடன், மயிலாப்பூரில் விரைவில் ஒரு மாநாடு நடத்துவார் (பிரியாணிக்கு பதில் தயிர்சாதம்?). ' அவாள்' ல பாதிப்பேர் அமெரிககாவில் இருகிறார்கள். அலைகடல் கூட்டத்திற்கு எப்படி 'ஆள்' தேற்றுவார் என்று தெரியவில்லை.

'யார்' வந்தாலும் சேர்த்துகொள்ளும் பாஜகவுடன் கூட்டணிஅமைத்து, வரும் சட்டமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் போட்டியிடகூடும்.

சு.சாமி, சோ, சங்கர மடத்தினர் போன்றோர் 'வெளியில் இருந்து' ஆதரவு அளிக்க வாய்ப்புகள் அதிகம்.

சாதிக்கட்சிகளுடன் கூட்டணி என்பதையெல்லாம் 'ஓல்டு பேஷனாக்கி' , தமிழக அரசியலில் தனது 'இலவசங்களால்' புது 'டிரெண்டை' செட் செய்துவிட்டார் நம் 'சதாபிஷேக தலைவர்(??)'. இந்த யுகத்தில் சாதிக்கட்சி தொடங்கவிரும்பும் எஸ். வி. சேகர், அவரது நாடக பாணியில் சொல்வதானால்,
ஒரு அய்யோ பாவம்.

பலமுறை எழுப்பபட்ட , விடைதெரியாத மெகா 'பாரத' கேள்விகள் இரண்டு.

பரமஏழையாய் பிறந்த ஒருவர், பிராமிணர் என்ற ஒரே காரணத்துக்காக அரசின் உதவிகளுக்கு புறக்கணிக்கபடுவது, சரியா?

சகலவசதிகளுடன் பிறந்த ஒருவர், தனக்கான இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை பயன்படுத்துவதை சரி என்பதா? இல்லை தவறு என்பதா?

இந்த முரண்பாடுகளுக்கு, மாற்றுத்திட்டங்கள் எந்த அளவுக்கு சாத்தியம்?
- இன்பா


இன்பா எழுதும் போஸ்டுக்கு மஞ்சள் கமெண்டே தேவையில்லை :-)

Tamilish - தமிழ்


ரொம்ப நாள் கழித்து மீண்டும் ஒலிப்புதிர். இரண்டு பாடல்களை மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. ஒன்று சுலபம்.

Tamilish - தமிழ்

கருத்துகள் இல்லை: