பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. நடனத்தில் தேர்ச்சி பெற்ற இவர் 1980-ம் ஆண்டுகளில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் நடித்த டிஸ்கோ டான்சர் படம் மிக பிரபலமானது.
இதைத் தொடர்ந்து நடனம் சம்பந்தப்பட்ட பெரும்பாலான படங்களில் நடித்து புகழ் பெற்றார். தனது நடனத்தில் மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகளை இந்திய கலாசாரத்துடன் சேர்த்து புகுத்திருந்தார். அது ரசிகர்களின் மத்தியில் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது.
இவர் மராத்தி டெலிவிஷனில் மைக்கேல் ஜாக்சனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார். அப்போது மைக்கேல் ஜாக்சன் சாகவில்லை. ரசிகர் களின் இதயத்தில் வாழ்கிறார். அவருக்கு எப்போதும் அழிவில்லை என்று உருக்கமாக கூறினார்.
மேலும் அவர் கூறும்போது மைக்கேல்ஜாக்சன் மீதும் குத்துச்சண்டை வீரர் முகமது அலி மீதும் எனது மிகுந்த அன்பும், ஈடுபாடும் உண்டு. எனவே, எனது மகனுக்கு "மிமொ" என்று பெயர் சூட்டினேன்.
"மி" என்பதற்கு மைக்கேல் ஜாக்சன் பெயரையும், "மொ" என்பதற்கு மொகமது அலி பெயரையும் சேர்த்து அவனுக்கு மிமொ" என்று பெயர் சூட்டினேன். அவன் சிறந்த டான்சராக விளங்குகிறான்.
மைக்கேல் ஜாக்சனின் நடனத்தை நான் ஆடியதை பெரும்பாக்கியமாக கருதுகிறான். அவருக்கு நான் இணையானவன் அல்ல. நான் இதுவரை அவரை சந்தித்து பேசியது இல்லை. அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை.
ஆனால் அவர் மீது எனக்கு அளவு கடந்த அன்பும், மரியாதையும் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக