தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக ஜூலை 13ம் தேதி போராட்டம் நடத்தப்படுமென்று புதுவையில் நடைபெற்ற இந்து முன்னணி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்து முன்னணியின் புதுவை மற்றும் தமிழக மாநில செயற்குழு கூட்டம் சாரம் அன்னை இல்லத்தில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன்ஜி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் சனில்குமார், மாநில அமைப்பாளர் முருகானந்தம், பொதுச் செயலாளர்கள் மூர்த்தி, சுப்பிரமணியன், மாநில துணைத் தலைவர்கள் ஜெயக்குமார், பூசப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சமீபகாலமாக கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களில் இந்து அல்லாதவர்களை ஊழியர்களாக நியமிக்கும் பழக்கத்தினை திமுக அரசு செய்து வருவது நிறுத்தப்பட வேண்டுமென்றும், கேரளாவைப் போன்று திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சுவாமி தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாதென்று வலியுறுத்தப்பட்டது.
இலங்கையில் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சமமான வாழ்வை மத்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 13ம் தேதி தமிழகம் முழுவதும் பேராட்டம் நடத்தப்படுமென்றும், மேலும்அரசின் நபார்டு திட்டத்தினை தனியார் பள்ளிகளில் செயல்படுத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவை மட்டுமின்றி பல்வேறு தீர்மானங்களும் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளின் அசுர வளர்ச்சிக்கு அங்குள்ள ஆளுங்கட்சியான சிபிஐ (எம்) கட்சியினர் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட வன்முறை நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பதை நாம் இங்கே மறந்துவிட முடியாது. ஒரு காலத்தில் மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை அரசியல் வாதங்கள் அல்லது அரசியல் சார்ந்த எதிர்ப்பு என்பது அறிவார்ந்த விஷயங்களின் அடிப்படையில் அமைந்த விவாதங்களாக இருந்த காலம் போய்விட்டது. இப்போது அங்கும் நம்முடைய ஊரைப்போலவே வாதங்களை எல்லாம் அடி உதை கவனித்துக் கொள்கிறது. தடி எடுத்தவன் தண்டல் காரன். பலத்தை நிரூபிக்கிறவன் அறிவாளி.
ராகவன் தம்பி
9910031958

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக