லாஸ் ஏஞ்சலெஸ்: மைக்கேல் ஜாக்சனுக்கும், எனக்கும் இடையே பிறந்ததாக கருதப்படும் எனது இரு குழந்தைகளுக்கும் உண்மையான தந்த மைக்கேல் ஜாக்சன் அல்ல. செயற்கை முறையில் கருத்தரித்தே இந்தக் குழந்தைகளை நான் பெற்றேன் என்று கூறியுள்ளார் ஜாக்சனின் 2வது மனைவியான டெபோரா ரோ.
டெபோரா ஒரு நர்ஸ் ஆவார். மைக்கேல் ஜாக்சனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது அவரைக் கவனித்துக் கொள்வதற்காக வந்தவர். ஜாக்சன், டெபோரா மீது காதல் கொண்டு அவரை மணந்து கொண்டார்.
இந்தத் தம்பதிக்கு பாரீஸ் மற்றும் பிரின்ஸ் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்தக் குழந்தைகள் இருவரும் ஜாக்சன் வசமே இருந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ஜாக்சன் தந்தை அல்ல. செயற்கை முறையில் கருத்தரித்தே இவர்களைப் பெற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் டெபோரா.
இதுகுறித்து டெபோரா அளித்துள்ள பேட்டியில், இரு குழந்தைகளையும் அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து பெறப்பட்ட விந்தனுவைக் கொண்டு செயற்கை முறையில் கருத்தரித்தே நான் பெற்றேன்.
இருவருக்கும் தந்தை மைக்கேல் இல்லாவிட்டாலும் கூட நான்தான் தாய். எனவே இருவரையும் நானே வளர்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் டெபோரா.
பாடப்படாத 200 பாடல்கள்..
இதற்கிடையே, மைக்கேல் ஜாக்சன் தானே எழுதி, இசையமைத்த 200 பாடல்களை வைத்து விட்டுச் சென்றுள்ளாராம்.
இவை ஒருமுறை கூட பாடப்படாதவை. இவை தனக்குப் பின்னால் தனது குழந்தைகளுக்காக இருக்கட்டும் என கூறி வந்தாராம் ஜாக்சன்.
கொழும்புவில் ஒரு மூத்த 'இன்டர் நியூஸ்' பெண் பத்திரிகையாளர் கடந்த புதனன்று கடத்தப்பட்டு, பல மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டு, பின்னர் 45 நிமிட விசாரணைக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் ஊடக சமுதாயத்தினரிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் அமைந்துள்ள 'இன்டர் நியூஸ்' அரசு சார்பற்ற ஒரு சர்வதேச சுதந்திரமான ஊடகமாகும். உலகெங்கும் இது தகவல்களைப் பரப்புகிறது. கொழும்பில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் நிருபர் கிருஷ்ணி இஃபாம் 13 ஆண்டுகளாக இந்தப் பணியில் இருந்து வருகிறார்.
கொழும்பு நகரின் எல்லையில் அடையாளம் தெரியாத நபர்கள் இவரைக் கண்ணைக் கட்டிக் கடத்தி சென்று 3 மணிநேரப் பயணத்திற்குப் பின் கண்டி நகருக்குக் கொண்டுபோயிருக்கிறார்கள்.
அங்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதற்குப்பின் அவர் எழுதிய கட்டுரைகளைப் பற்றிக் கேள்விகள் கேட்டுள்ளனர். 'வீரகேசரி' பத்திரிகையின் முன்னாள் நிருபரான இவரைப் பின்னர் கண்டி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டுப் பயணச் செலவுக்காக ரூ.200ஐ கையில் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இவர், தான் கடத்தப்பட்டதைப் பற்றிக் காவல்துறையிடம் புகார் கூறியுள்ளார். ஆனால் ஞாயிறு மாலை வரையில் இவரைக் கடத்தியவர்களைக் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு பத்திரிகையாளர் கடத்தப்படுவது கொழும்பில் இது இரண்டாவது முறையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக