தமிழக முதல்வர், கலைஞர் கருணாநிதி ஒரு அரசு ஊழியர். அரசு ஊழியரொருவர் பெறக் கூடிய சலுகைகளை அவர் தாரளமாகப் பெறலாம். அதற்கு யாரும் தடை போட முடியாது. ஆனால் அவர் தனது பணிக்காலத்தில் ஒரேயோரு சலுகையை மட்டும் பெற நாம் அனுமதிக்கமாட்டோம். அதை மீறி அவர் அச் சலுகையைப் பெற்றால், அவர் மீது நாங்கள் கேஸ் போட வேண்டிவரும் என பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்தார்.
'நீயின்றி நானில்லை' படத்தின் தொடக்க விழா நேற்று சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. இத் தொடக்க விழாவில் முதல்வர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இவ்விழாவில் , தனக்கே உரிய நகைச்சுவைப்பாணியில், நடிகர் விவேக் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
பல முக்கிய திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், அவர் உரையாற்றுகையில், "இந்த படத்தில் நானும் நடிக்க வேண்டும் என்று கலைஞர் விரும்புவதாக தயாரிப்பாளரும் டைரக்டரும் சொன்னார்கள். என் கேரக்டர், கதை போன்ற விவரங்களை கேட்டேன். அவை பற்றிய விபரங்கள் எல்லாம் முதல்வருக்குத்தான் தெரியும் என்றார்கள். ஸ்டண்ட் மாஸ்டர் யாரப்பா என்றேன் ? அதற்கும் அவர்தான் என்று அவசரத்தில் சொல்லி விட்டார்கள். ஆனால் உண்மையிலேயே அரசியலில் ஆரம்பித்து, இன்று வணங்காமண் கப்பல் இலங்கை சென்று சேரும் வரையில் எவ்வளவோ போராட்டங்களை சந்திக்கும் அவர் ஒரு 'சூப்பர் பைட் மாஸ்டர்' தான்.சினிமாவில் வசனங்களை நீட்டி, சுருக்கி, வித்தை காட்ட அவரால்தான் முடியும். ரங்கூனில் இருந்து வரும் பராசக்தி சிவாஜி கணேசன் பிச்சை கேட்பவனை பார்த்து, 'தமிழ் நாட்டின் முதல் குரலே இப்படி இருக்கிறதே...' என வசனம் வைத்துக், கேள்வி கேட்க அவரால் மட்டுமே முடியும். அவர் தொடர்ந்து பேசுகையில், கலைஞர் ஒரு அரசு ஊழியர். அரசு ஊழியர்களுக்குள்ள அத்தனை சலுகைகளும் அவருக்கும் உண்டு. ஆனால் 'ஓய்வு ஊதியம் ' எனும் ஓரேயொரு சலுகையை மட்டும் அவர் பெற நாம் அனுமதிக்க முடியாது. அந்தச் சலுகையை அவர் பெற்றால் நாம் அனைவரும் கேஸ் போடலாம். ஒருவர் ஓய்வு பெற்றால்தானே ஓய்வு ஊதியம் பெறமுடியும். அவருக்கு ஓய்வே கிடையாது. அப்படி ஓய்வு கேட்பதை நாங்கள் விரும்பவில்லை. அப்படியிருக்கும் போது அவர் எப்படி ஓய்வ ஊதியம் பெறமுடியும் என்றார்.
'நீயின்றி நானில்லை' படத்திற்கு திரைக்கதை வசனம் கலைஞர் கருணாநிதி என்பது குறிப்பிடத் தக்கது. இவ்விழாவில், கமல்ஹாசன்,சூர்யா, மனோரமா, எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கலைஞர் கருணாநிதி பேசுகையில், 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என நான் குறிப்பிடுவதுண்டு, அத்தகைய இதயத்தை அண்ணா தந்துவிட்டு போயிருக்கிறார்.ஆகையால் என்னைப்பற்றி யார் எப்படி இழித்துப் பேசினாலும் ஏசினாலும் கவலைப்படமாட்டேன்' எனக் குறிப்பிட்டார்.
இண்டெர்நெட்டில் ஏற்பட்ட எரிமலை. மைக்கேல் ஜாக்சன் தொடர்பான தேடலை கூகுல் இப்படித்தான் வர்ணித்துள்ளது.
பாப் மன்னன் ஜாக்சன் மரணத்தை தொடர்ந்து அவரை பற்றிய தகவலகளை அறிய ரசிகர்கள் இண்டெர்நெட்டை முற்றுகையிட்டனர். இப்படி அளவுக்கதிகமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் வந்து குவிந்ததையடுத்து இண்டெர்நெட்டின் வேகம் முடங்கிப்போனது.
ஜாகசன் மரணத்தை அடுத்து இண்டெர்நெட்டில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி அடுத்த்டுத்து செய்தி வந்த நிலையில் இப்போது கூகுல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளது.
ஜாக்சன் மரண செய்தி வெளியான உடன் இணையவாசிகள் பெரும் எண்ணிக்கையில் படையெடுத்ததை நிலையில் தேடியந்திரமான கூகுலுக்கு வருகை தந்து தேடியவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்ததாம்.கூகுல் இணையபக்கத்தின் மீது யாரோ திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று அச்சம் ஏற்படும் அளவுக்கு இணையவாசிகளின் வரவு இருந்ததாதாக கூகுல் சார்பில் நடத்தப்படும் வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் லடசக்கணக்கானவர் ஒரே இணைய பக்கத்தை அணுகுவது போல ஏற்பாடு செய்து அந்த பக்கத்தை முடங்கச்செய்ய முடியும்.இதர்கு டினையல் ஆப் சர்வீஸ் அட்டாக் என பெயர். இப்படிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக கூகுல் நினைத்துவிட்டது.
ஜாக்சன்தொடர்பான தகவல்கள் தேடப்பட்ட திவிரத்தை வர்ணிக்கவேண்டும் என்றால் இண்டடெர்நெட்டில் ஏற்பட்ட எரிமலை என்றே கூற வேண்டும் என கூகுல் கூறியுள்ளது.
ஆணால் ஆங்கிலம் தெரியதவர்களிடம் உதாரனம் தேனீர் விடுதி, சலவைக்கு கொடுக்கும் இடம், தெரியாத இடத்திற்க்கு வழி கேட்க வேண்டும் என்றால் எதிரே வருவது ஒன்று மலையாளியாக இருக்கும் அல்லது பாக்கிஸ்தானியாக இருக்கும்.
மலையாளியிடம் கேட்டால் முதல் கேள்வி நிங்கள் மலையாளியோ? என்பதாக இருக்கும் இல்லை எனும் பட்சத்தில் யான் அறியத்தில்லா? என்று போய் விடுவார்கள். அடுத்து பாகிஸ்தானிதான் ஏறக்குறைய அனைத்து பாக்கிஸ்தானியும் துபாய் வரைபடத்தையே மணப்பாடம் செய்திருப்பார்கள் போல எந்த இடத்திற்க்கு வழி கேடாலும் சரியாக சொல்வார்கள். ஆனால் நமக்குத்தான் ஒன்னும் புரியது.
"சீதா ஜாவ். உதர் ஏக் மஜீத்தனா உதர்சே லெப்ட் மாரோ பிர் சீதா ஜானெதோ சிக்னல்கா சாம்னே. டீகே பாய் சம்ஜே?" என்று போய் கொண்டே இருப்பார்கள்.நாம் திருவிழாவில் கானாமல் போன குழந்தை போல டீகே பாய் என்று பதிலளித்து விட்டு விதியை நொந்த படியே செல்ல வேண்டும்.நமக்கு ஹிந்தியில் ஏக் , தோ, தீன், சார், பாஞ் தவிர வேர எதுவும் தெரியாது. அதற்க்கு அடுத்து சே அதாவது ஆறு என்பதே இங்கு வந்துதான் தெரியும்.
சிலகாலம் கழித்து எனக்கும் ஹிந்தி பேச வந்திருந்த காலம். வேற வழி பேசிதான் ஆக வேண்டிய சூழல். இந்த சூழ்நிலையில்தான் நான் சென்னையில் இருந்த காலத்தில் கிடைத்த எனது நன்பனும் துபாய் வந்தான். அவனை பார்த்து விசாரிதுவிட்டு வரும் வெள்ளிகிழமை வெளியில் செல்ல திட்டமிட்டு அதன்படியே வெளியில் சென்றோம். பர்துபாயில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று மொபைல் பார்த்துக் கொண்டிருந்தோம்.பார்க்க மட்டும் தான் செய்வோம். கடைகாரர் அந்த செல்பேசியின் பயன்பாடு மற்றும் சிறப்பம்சங்களை பட்டியலிடார் ஹிந்தியில்தான். இப்போ நமக்குதான் ஹிந்தி பேச தெரியுமே நாமும் ஹிந்தியிலேயேபேசிவிட்டு சிறிது நகர்ந்தவுடன் என் நன்பன் கேட்டான்
"டேய்! மாப்ள உனக்கு தெலுங்கு கூட தெரியுமாடா?' என்றான்.
"தெலுங்கா? நான் பேசுனது ஹிந்திடா" என்று சொல்ல
"நான் தெலுங்குனு நெனச்சேண்டா" என்றான்
அப்படினா என்னுடன் ஹிந்தியில் பேசிய அந்த நபர் .............................
பி.கு: இப்போ ஆங்கிலமும் சரி இந்தியும் சரி நல்லா பேசுவேன். அதனால் யாரும் மிரள வேண்டாம் என கேட்டூக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக