திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29



More than a Blog Aggregator

by r.selvakkumar
Exit Poll என்பது வாக்களித்துவிட்டு வெளியே வருபவர்களிடம் கேட்டு ஒரு முடிவுக்கு வருவது.
முன்னணி ஆங்கில செய்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு Exit Pollகளை நடத்தின.
இதில் உள்ள பெரிய ரிஸ்க், எந்தக் கட்சிக்கு வாக்களித்தேன் என்று, வாக்காளர் சொன்னது உண்மையா? பொய்யா? என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அதே போல Exit Pollகள் மிகச் சில நூறு வாக்களர்களிடம் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஒரு அலை அடிக்கும்போது பெரும்பாலும் Exit Pollகள் சரியாக உள்ளன. ஆனால் அலை இல்லாத தேர்தல்களில் Exit Pollகள் பெரும்பாலும் தவறிவிடும். ஏனென்றால் Spoilers எனப்படும் ரிசல்டுகளை பாதிக்கக் கூடிய கட்சிகளின் மதிப்பு இதில் தெரிவதில்லை. உதாரணமாக இந்த Exit Pollகளில் விஜயகாந்துக்கு எத்தனை வாக்குகள் விழுந்தன என்பது தெரியாது. அந்த வாக்குகள் தி.மு.க அல்லது அ.தி.மு.க வாக்குகளை பிரிக்கும். அது எந்தக் கட்சிக்கு என்பது Exit Pollகளில் தெரியாது.
எனவே அதை மனதில் கொண்டு நிறைய Exit Pollகளை படித்துவிட்டு (விஜயகாந்தை கணக்கிலெடுக்காமல்) குத்துமதிப்பாக இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்

தமிழகம்
மொத்தம் - 39
காங்கிரஸ் - 2 (ஜீரோ முதல் 4 வரை மாறலாம்)
தி.மு.க(மற்ற கட்சிகள்) - 12 (9 முதல் 13 வரை மாறலாம்)
அ.தி.மு.க - 25 (24 முதல் 28 வரை மாறலாம்)

இந்திய அளவில்
C-VOTER-POLLING AGENCY EXIT POLL FOR INDIA TV AND UTV BUSINESS CHANNEL
UPA - 193-205
NDA - 181-193
THIRD FRONT - 105-121
STAR NEWS-NIELSEN EXIT POLL
UPA - 202
NDA - 198
THIRD FRONT - 96
CNN-IBN NEWS CHANNEL POST-POLL SURVEY
UPA - 185-205
NDA - 165-185
THIRD FRONT - 110-130
NEWS-X CHANNEL EXIT POLL
UPA - 202
NDA - 193
THIRD FRONT - 101
HEADLINES TODAY NATIONAL PROJECTION
UPA - 191
NDA - 180
LEFT PARTIES - 38
OTHER PARTIES - 134
தேர்தல் வரும்போது, வழக்கமாக சன்னும் ஜெயாவும் களத்தில் மோதும். நடுவில் நடந்த தாத்தா-பேரன்கள் சண்டையில் கலைஞரை கடு்ப்பேற்ற சன் டிவி நடுநிலை வேஷம் போட்டதும் ஃபோகஸ் மாறிவிட்டது. பிறகு "கண்கள் பனித்து - இதயம் இனித்தவுடன்" இருவரும் ஒன்று சேர்ந்தார்கள்.

தேர்தல் வந்தவுடன் மீடியா போர் பழையபடி சூடு பிடித்தது. ஜெயா டிவி ஜெயலலிதாவின் தேர்தல் பரப்புரையை மட்டும் ஃபோகஸ் செய்தது. எனவே ஒரு முனையில் சன்-கலைஞர். மறுமுனையில் மக்கள் தொலைக்காட்சி. மக்கள் தொலைக்காட்சி அசரவே இல்லை.

புதுச்சேரியில் நடைபெற்ற திரைத்துறையினரின் பரப்புரையை ராஜ் டிவியிடமிருந்து பெற்று திடீர் நேரலை செய்ததை சன்னும், கலைஞரும் எதிர்பார்க்கவே இல்லை. பதிலுக்குப் பதில் ஒளிபரப்ப அவர்களிடம் எந்த சரக்கும் இல்லை.

அதே போல இன்னொரு நிகழ்ச்சி. மாம்பழத்திற்கு ஓட்டுப் போடுங்கள் என்றால் குற்றமாகிவிடும். ஏனென்றால் பிரச்சாரத்திற்கான நேரக் கெடு முடிந்துவிட்டது. ஆனால் மாம்பழத்தைப் பற்றி ஒரு ஆவணப்படம் போடலாம். அது குற்றமல்ல.

இதுதான் மாம்பழம். மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. இந்த மாம்பழம் தித்திக்கும். அந்த மாம்பழம் புளிக்கும் . . . என்று நொடிக்கொரு முறை மாம்பழம், மாம்பழமென தனது சின்னத்தை உச்சரிப்பது போல ஒரு ஆவணப்படத்தை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. சன், கலைஞர், தேர்தல் கமிஷன் உட்பட எல்லோருக்கும் பெப்பே காட்டிவிட்டு அட்டகாசமாக தனது மறைமுகப் பிரச்சாரத்தை மக்கள் தொலைக்காட்சி செய்தது.

ஆனால் நேற்று மாலைதான் ஹைலைட். திராவிடர் கழகம் தயாரித்த விசிடிக்கு நேற்று மதியம் தடை விலக்கப்பட்டது. ஈழத் தமிழர்களின் அவலத்தை விளக்குகின்ற சிடி என்று அவர்கள் சொன்னாலும், அது உண்மையில் காங்கிரசுக்கும், தி.மு.கவுக்கும் எதிராக பிரச்சாரம் செய்கின்ற சிடி. பிரச்சாரத்திற்கான கடைசி நேரம் கடந்துவிட்டிருந்த படியால் தேர்தல் கமிஷனின் விதிப்படி அதை மக்களிடம் போட்டுக் காண்பிக்க முடியாத நிலை. அதை ஒரு நிகழ்ச்சியாக டிவியிலும் காட்ட முடியாத நிலை. அதனால் அந்த சிடியை வைத்து ஒன்றும் செய்துவிட முடியாது என்று ஆளும் கட்சி அசந்திருந்த நேரத்தில் மக்கள் தொலைக்காட்சி மிக சாமர்த்தியமாக ஒரு வேலை செய்தது. என்ன தெரியுமா?

திடீரென செய்திகளை ஒளிபரப்ப ஆரம்பித்தது. செய்தி என்ன தெரியுமா? பெரியார் திராவிடர் கழகம் தயார் செய்திருந்த சிடிக்கு தடை நீக்கப்பட்டது. தடை நீக்கப்பட்ட அந்த சிடியை இப்போது பார்க்கலாம் என்ற ஒற்றை வரிச் செய்திதான். அந்த ஒற்றை வரி முடிந்தவுடன் அந்த சிடி ஒளிபரப்பப்பட்டது.

அசத்தலான அட்டாக். நிகழ்ச்சியாக அதை காண்பிக்க முடியாது. ஏனென்றால் அது பிரச்சாரமாகிவிடும். ஆனால் இதுதான் அந்த தடை நீக்கப்பட்ட சிடி என்று செய்தியாக ஒளிபரப்ப முடியும். ஏன் என்று எந்த விதியும் கேள்வி கேட்க முடியாது. சன்னும், கலைஞரும் பேந்தப் பேந்த விழத்துக் கொண்டிருக்க, மக்கள் தொலைக்காட்சி அட்டகாசமாக பிரச்சார நேரம் முடிந்த பின்னும் நள்ளிரவு வரை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.

வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை, அமெரிக்கா தூங்கிய நேரத்தில் இந்தியா விழித்துக் கொண்டது என்பார்கள். அதே போல மீடியா பிரச்சாத்தைப் பொறுத்தவரையில் சன்னும் - கலைஞரும் தூங்கிய நேரத்தில் மக்கள் தொலைக்காட்சி எழுந்து கொண்டது.
மதிய நிலவரப்படி அதாவது 20 சதவிகிதம் ஓட்டுப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் அ.தி.மு.க முன்ணணியில் உள்ளதாக ஆங்கில செய்திச் சேனல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் விஜயகாந்துக்கு கிடைக்கும் வாக்குகளை வைத்துதான் இந்தக் கணிப்புகள் பொய்க்குமா அல்லது உண்மையாகுமா என்பது தெரியவரும்.

சோவும் மற்றவர்களும் ஒரு கருத்தை தெரிவித்தனர். பொதுவாக விஜயகாந்தின் வாக்குகள் அரசுக்கு எதிரான வாக்குகள் + எம்.ஜி.ஆர் இரசிகர்களின் வாக்குகள் என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டுமே அ.தி.மு.விற்குச் சேரவேண்டிய வாக்குகள். ஆனால் அந்த வாக்குகளை விஜயகாந்த் பிரித்துவிட்டார் என்றால், தி.மு.க -20, அ.தி.மு.க-20 எனப் பிரிந்துவிடும் என்றார்கள். நான் இப்படித்தான் நடக்கும் என்று யுகிக்கின்றேன்.
தமிழ் செய்தித் தொலைக்காட்சிகள் வழக்கம்போல சொதப்பிக்கொண்டிருக்க, ஆங்கில செய்திச் சேனல்கள் பரபரப்பாக இருக்கின்றன. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதன்மை செய்தி ஆசிரியர் ஜெயலலிதாவை சென்னை சூப்பர் குயின் என்று வர்ணித்தார். நான் கவனித்த சேனல்களின் நிலவரப்படி, அ.தி.மு.க முந்திக்கொண்டிருக்கிறது.
மத்திய சென்னையிலும் இன்னும் பல பகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தை அமுக்கினால் உதயசூரியன் சின்னத்தில் விளக்கு எரிவதாக ஜெயலலிதா குற்றப்பத்திரிகை வாசித்தார். நேரலையில் தோன்றிய சோ.இராமசுவாமி தி.மு.க பதவியலிருந்தால் அதற்கு வாய்ப்பிருக்கிறது வழக்கம்போல ஜெயலலிதாவை சப்போர்ட் பண்ணினார்.
"அணிமாற்றம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, பி.ஜே.பி உட்பட என்னை எல்லா கட்சியினரும் அணுகியுள்ளார்கள். நான் நினைப்பது போல தேர்தல் முடிவுகள் வந்துவிட்டால், நான் டெல்லி சென்று எனது முடிவை தெரிவிப்பேன்" என்றார் ஜெயலலிதா.
"காங்கிரசும், ஜெயலலிதாவும் கைகுலுக்கும் வாய்ப்புகளும் பெருகிக் கொண்டு வருகிறது" என்று சோ குறிப்பிட்டார்.
மனதைப் பிசையும் தமிழ் இனப்படுகொலை காட்சிகளுடன் ஆளும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்று முழங்கும் சிடிக்களை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.
சென்னையில் மக்களை பார்க்கவிடாமல் கேபிள் கட், சில இடங்களில் பவர் கட் என்று மக்கள் தொலைக்காட்சி குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது.
ஆளும் கட்சியின் நற்பெயரை(?)க் கெடுக்க சமூகவிரோதிகள் திட்டமிட்டு மின்சாரம் துண்டிப்பு, 4 பேர் கைது என்று சன்னும், கலைஞர் டிவியும் பதிலுக்கு பதில் ஏசிக் கொண்டிருக்கின்றன.

ஜெயா டிவி கப்சிப் என்றிருக்கிறது. அந்த சிடியையும் கண்டுகொள்ளவில்லை, மின்வெட்டையும் கண்டுகொள்ளவில்லை.

மக்கள் தொலைக்காட்சியில் நான் அந்த சிடிக்களை முழுக்கப் பார்த்துவிட்டேன். இதுவரை பார்க்காதவர்கள் உடனே மக்கள் டிவியை பார்க்கவும். போகிற போக்கைப்பார்த்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு (பிரச்சார நேரம் ஓய்ந்த பின்னும்) எதிர்பிரச்சாரமாக விடிய விடிய ஒளிபரப்பாகும் என எண்ணுகிறேன். அதே சமயம் ஆளும் தி.மு.க எப்படியாவது நீதி மன்றத் தடையை பெற்றுவிடும் என்று தோன்றுகிறது.

இந்த சிடிக்கள் எப்படியும் யுடியுபில் வந்துவிடும். ஆனால் தேர்தல் பரபரப்புடன் பார்க்வேண்டுமானால் இப்போதே மக்கள் டிவி பாருங்கள்.

நீதி - வழக்கறிஞர்களுடன் மோதக் கூடாது. மோதினால் . . . ? பிரச்சாரம் ஓய்ந்தபின்னும், எதிர்கட்சிகளுக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய நீதிமன்ற அனுமதி கிடைக்கும்.
கருணாநிதிக்குப் பிடிக்காத NDTV கருணாநிதிக்குப் பிடித்த ஒரு கருத்துக்கணிப்பை வௌயிட்டிருக்கிறது.

கணிப்பு 1 - ஏப்ரல் மாதம்
தி.மு.க கூட்டணி - 20 முதல் 22 வரை
அ.தி.மு.க கூட்டணி - 19 முதல் 21 வரை

கணிப்பு 2 - இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு முடிந்தவுடன்
தி.மு.க கூட்டணி - 21
அ.தி.மு.க கூட்டணி - 18

கணிப்பு 3 - மூன்றாம் கட்ட வாக்கெடுப்பு முடிந்தவுடன்
தி.மு.க கூட்டணி - 21
அ.தி.மு.க கூட்டணி - 18

கடைசிக்கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பிரச்சாரமும், கருணாநிதியின் வீல் சேர் பிரச்சாரமும் இந்த நிலையை மாற்றாது என்றுதான் தோன்றுகிறது.

தி.மு.க மக்களுக்கு மட்டும் இலவசங்களை வழங்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கும் மின்வெட்டு, விலைவாசி, வேலைவாய்ப்பில் மந்தம் போன்ற இலவசங்களை வாரி வழங்கியது. இதை விஜயகாந்த் கெட்டியாக பிடித்துக்கொண்ட அளவிற்கு அ.தி.மு.க பிடித்துக்கொள்ளவில்லை. ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற குருஜிக்களின் இரகசிய விசிடிக்களை பார்த்துவிட்டு, திடீரென தமிழ்தாய் வேஷம் போட்டுக்கொண்டு, தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்பதை தனது தேர்தல் முழக்கமாக மாற்றிக் கொண்டுவிட்டார். "தமிழ் பதிவர் உலகத்திலும்", "உலகமெங்கும் உள்ள சில ஈழ ஆதரவாளர்கள் மத்தியிலும்", "எப்போதுமே ஈழத்தை ஆதரிக்கும் ஜெ. ஆதரவாளர்களிடத்திலும்", "கருணாநிதியின் அரசியல் நிலையால் ஏமாந்த சீமான் போன்ற அதீத உணர்வாளர்களிடத்திலும்" இதனால் ஒரு பெரிய சலசலப்பு எழுந்துள்ளது. ஆனால் அந்த சலசலப்பு மிகக் குறுகிய ஒரு வட்டம் என்பதும், அது கூட இன்னமும் முழுமையாக தி.மு.க எதிர்ப்பாக மாறவில்லை என்பதும் என் எண்ணம். எனவே தி.மு.க ஓட்டு சிதறும் ஆனால் பதற வைக்காது. இங்கே தி.மு.க தவற விடுவது போல அங்கே அ.தி.மு.க விஜயகாந்திடம் சில ஓட்டுக்களை தவறவிடும். எனவே தி.மு.கவைப் பொறுத்தவரை கணக்கு சரியாகிவிடும் என்று நான் நினைக்கிறேன்.

மிக முக்கியமாக "மானாட மயிலாட பார்க்க விரும்புகிற மக்களை", "ஈழப் பிரச்சனை குறித்து பரிதாபப்படுகிற மக்களாக" அ.தி.மு.வின் பிரச்சாரம் மாற்றவில்லை. காரணம் ஜெவின் தனி ஈழ கோஷம் சந்தேகங்களையும், ஆச்சர்யங்களையும் சமமாகத்தான் உண்டாக்கியிருக்கிறது.

கருணாநிதிக்கு அவருடைய முதுமை ஒரு அட்வான்டேஜ். அவருடைய ஆட்சியின் பலகீனங்களை அவருடைய வீல்சேர் விசிட் எளிதாக மறைக்கிறது. ஜெயலலிதாவின் தனிநபர் அட்டாக்கும், மக்களை நெருங்காத ஹெலிகாப்டர் பயணங்களும், ஓட்டுக்களை அள்ளித்தருமா என்றால் சந்தேகம்தான்.

எந்த அலையும் இல்லாத ஒரு தேர்தல். யார் பிரதமர் என்பதைப் பற்றி பேசாமல், கருணாநிதி, ஜெயலலிதா சண்டையாக மாறிப்போன லோக்கல் தேர்தல். பி.ஜே.பியெல்லாம் இந்த தேர்தலில் நிற்கிறதா என்றே பொதுமக்களுக்குத் தெரியவில்லை.

சுருக்கமாகச் சொன்னால் பா.ம.க வின் அணிமாற்றத்தால் தி.மு.க கூட்டணி 40லிருந்து 20க்குச் சுருங்கும். அ.தி.மு.க கூட்டணி ஜீரோவிலிருந்து 20க்கு விரியும்.

கருத்துக்கணிப்பின் படி தி.மு.கவின் வெற்றியாக அதன் ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சென்ற பாராளுமன்றத்தேர்தலில் தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றது. அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அந்த வகையில் இது அ.தி.மு.கவிற்கு ஒரு திருப்தியான தேர்தல்தான். ஆனால் ஜெயலலிதாவின் இரகசிய பிரதமர் கனவிற்கும், அப்படி இல்லாத பட்சத்தில் எதிர் வரும் மத்திய அரசின் உதவியுடன் மைனாரிட்டி தி.மு.க மாநில அரசுக் கலைப்பிற்கும் இது உதவாது. அதே போல அவருடைய "தனி ஈழ" கோஷத்தை மேலும் வலுவாக்கவும் இந்த ரிசல்ட் பயன்படாது.

ஆனால் இருதரப்புமே இதனால் ஏமாற்றமாக உணரும் என்பதுதான் இந்தத் தேர்தலின் ஸ்பெஷாலிட்டி!

என் கணிப்பு 1 - கடைசிக் கட்ட வாக்கெடுப்பு முடிந்தவுடன்
தி.மு.க கூட்டணி - 20
அ.தி.மு.க கூட்டணி - 19
விஜயகாந்த் - 0 (ஓரிரு தொகுதி தவிர அனைத்து தொகுதியிலும் டெபாஸிட் இழப்பார்)
அ.தி.மு.க, தி.மு.கவின் வெற்றி தோல்விகளில் வாக்கு வித்தியாசம் மிகப் பெரியதாக இருக்காது. இது விஜயகாந்திற்கு சட்டமன்ற தேர்தலில் டிமாண்டை அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை: