திங்கள், 1 ஜூன், 2009

2009-06-01

சென்ற பதிவு முடிவில் நான் சொன்னது "தவறு என்று தெரிந்தும் அதையே செய்யுறது எவ்வளவு தப்பு?... ஆனா அதை நாம் செஞ்சுக்கொண்டே இருக்கின்றோம் அது ஏன்?" பல தவறுகளை நாம் திருப்ப திருப்ப செய்தாலும் நான் பார்த்த ஒன்னு இங்கே நெஞ்சு பொருக்காமல் உங்களுடன் ஒரு பகிர்வு...

சென்ற முறை இந்தியா செல்கின்றபொழுது,
என் தேசத்து மண்ணையும் என் மனைவி மக்களையும்..
காணும் ஆயிரம் கனவுகளுடன் திருச்சி விமானநிலைம் அடைந்தேன்.
01-05-2009 அன்றுதான் கோடை வெயில் சுட்டெரித்தாலும்;
மண்ணைத் தோட்ட மகிழ்ச்சியில் நெஞ்சம் குளிர்கின்றது.
கடவுசீட்டை கையில் எடுத்து வரிசையில் நிற்கையில்;
வெளியில் நிற்கும் மனைவி பிள்ளைகளின் எண்ணங்கள் எனக்கு...

காற்றாட்று வெள்ளம் போல வெளியில் வரும் எண்ணங்களின் மகிழ்ச்சி.
ம்ம்ம்ம் ஓடி வரும் மகளை தூக்கி முத்தமிட்டு ;
என் பையனின் கையை இருக பிடித்தேன்.
வாஞ்சையுடன் என் மனைவி என் அருகில் வந்ததும்
கண்களில் ஆயிரமாயிரம்..........

என் மனைவி, மகன் மற்றும் என் மகள் மூவர்மட்டுமே வாடகை சொகுசுந்து (Taxi) எடுத்து வந்திருந்தனர். நாங்கள் நால்வரும் என்வீட்டுக்கு செல்கின்றோம். OFT அண்ணாநகர் செல்லும் வழியில் புதுக்கோட்டை திருச்சி ரோடு ஒரு சோதனைச் சாவுடி இருக்கும். சோதனைச் சாவுடியில் எப்பொழுதாவது (பதற்ற சூழல் உள்ள பொழுது) சோதிப்பார்கள். பதற்றமான சூழலில் சோதனை நடத்துவார்கலோ இல்லையோ, வெளிநாட்டு விமானம் வரும் நேரங்களில் ருசி
யோடு இருப்பார்கள். அதேபோல் அன்றும், என்னிடம் எந்த விதமான பொருள்களும் இல்லை (கைபை மற்றும் மடிக்கணனி மட்டுமே இருந்தது) . என் தந்தை வயதில் உள்ள ஒரு காவலாளி (போலீஸ்) எங்கள் வண்டியை ஓரமாக நிற்க சொன்னார். வண்டியும் திருச்சி நாங்களும் திருச்சிதான் இருந்தாலும் விமானம் வந்த நேரம் அதனால் ருசித்துப்பார்த்தார். ஓட்டுனரை தனியாக அழைத்து " காசு வாங்கி கொடு " என்று அவர் காதில் ஓதினார். இதுபோல் பலமுறை நடந்துள்ளது இதுபோன்ற சமயத்தில் நான் வாதிடுவதால் ஓட்டுனர் என்னை அழைக்கவில்லை. நானும் பிள்ளைகளை பார்த்த மகிழ்ச்சியில் வண்டியிலேயே இருந்துவிட்டேன். அவரின் நேரத்தை வீணாக்க விரும்பாமல் அவரே 20 ரூபாய் கொடுத்துவிட்டு வந்துவிட்டார் . எனக்குள் ஆயிரம் "இந்தியன்" ஆயிரம் "அன்னியன்" வந்துசென்றனர்.

மெற்கண்ட சம்பவத்தில் ஒரு கடத்தலோ அல்லது ஒரு சட்டவிரோத செயலோ நடந்துவிடவில்லை. இருப்பினும் அந்த இந்திய பிரசை, நம் நாட்டின் காவலாளி வாங்கிய கையூட்டுக்கு (லஞ்சம்) அர்த்தம்தான் என்ன? அந்த ஈன செயலுக்கு சொல்லும் விளக்கம்தான் என்ன?

அவர் யார்? நம்மை போன்ற ஒருவனின் தந்தை. ஒரு மனைவிக்கு கணவனானவர். இப்படி ஏதோ ஒரு உறவுக்குள் சணிக்ககூடியவர். யாருக்கா அவர் அப்படிச் செய்கின்றார்? இப்படி வாங்கிய காசில் வாங்கும் பூவூக்கும் அல்வாக்கும் காத்திருக்கின்றாரா இவரின் மனைவி. இல்லை அந்த காசில் வாங்கிய பேனாவில்தான் இவரின் பிள்ளை பரிச்சை எழுதுகின்றார்களா?. கொஞ்சம் யோசிங்கள் கையூட்டு வாங்கும் தனிநபர் வேறு யாரும் இல்லை. நம்மில் ஒருவனின் தந்தை; நம்மில் ஒருவரின் கணவர்; நம்மில் ஒருவரின் மாமா; நம்மில் ஒருவரின் தம்பியோ அண்ணனோ இப்படி நம்மில் ஒருவரால் செய்யும் தவற்றை ஏன் அங்கிகாரம் கொடுக்கின்றோம்? ஒரு தவற்றை தவறு என்று தெரிந்தும் செய்வது எதனால்? அந்த தவற்றை நான், நாம் ஏற்றுகொள்வதும் எதனால்?

'கையூட்டு(லஞ்சம்) வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்' என்று பலகையிலும், சொல் அளவிலும் வைத்துக்கொண்டு வாழும் வாழ்க்கையின் அர்த்தம் வேண்டி...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.


More than a Blog Aggregator

by இரா. சதீஷ் குமார்
இன்னிக்கு வகை வகையாக சாக்லெட்டுகள், இனிப்புகள் ஆயிரக்கணக்கில கிடைக்குது, ஆனாலும் அந்த நாளில சாப்பிட்ட பம்பாய் மிட்டாயைப் போல வருமா!

ஒரு குச்சியின் உச்சியில சலங்கையும், ஜால்ராவும் கையில வைத்திருக்கும் பொம்மையை வைத்துக் கொண்டு ச்சலக்கு ச்சலக்கு ஜல் ஜல் என்று சத்தம் செய்து கொண்டு வருவான் பம்பாய் மிட்டாய்க்காரன். அப்படி என்ன அதுல விஷேசம்! சிவப்புக் கலரும், வெள்ளைக் கலரும் வரி வரியா இருக்குற மிட்டாய் அது. ஒரு குச்சியோட உச்சியில பொம்மை இருக்கும், அந்த பொம்மையோட கையில ஜால்ராவ கட்டி அதுல இருந்து தொங்கற கயித்த பிடிச்சி ஜல் ஜல்னு அடிச்சிகிட்டே வருவான். அந்த பொம்மைக்கு கீழ ஒரு பாலிதீன் பை சுத்தி இருக்கும் அதுக்குள்ளதான் நம்ம பம்பாய் மிட்டாய சுத்தி வைச்சிருப்பான் மிட்டாய்க்காரன்.

ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தா நீளமா வரும், நல்ல சுவையாவும் இருக்கும். இதுல விஷேசமே நீங்க குடுக்கற காசுக்கு தகுந்த மாதிரி நீங்க விரும்பற வடிவத்துல கெடைக்கும் இந்த மிட்டாய். வாட்ச் மாதிரி வேணுமா, காந்தி கடிகாரம் மாதிரி வேணுமா, மோதிரம் வேணுமா, இல்ல வளையல் மாதிரி வேணுமா என்ன மாதிரி வேணும்னு சொல்லுங்க அந்த மாதிரி கெடைக்கும் பம்பாய் மிட்டாய்.

அதை சாப்பிடறமோ இல்லையோ, வாங்கி கையிலயும், கழுத்துலயும் கட்டிகிட்டு மத்த பசங்க முன்னால கொஞ்சம் ஸீனப் போட்டுட்டு சாப்பிடற சந்தோஷம் இருக்கே அது எந்த கேட்பரீஸ்லயும் வராது.

பம்பாய் மிட்டாய்க்காரன் ரெகுலரா எல்லாம் வரமாட்டான், வாரத்துக்கு ஒருதடவைதான் வருவான். அப்படி வந்தான் தெருவுல இருக்கற அத்தனை வாண்டுகளும் சரி, பெரிய பசங்களும் சரி ஒரு பெரிய கூட்டமே அவனை சுத்தி நிற்கும்.

ஹீம், இன்னிக்கு அதெல்லாம் எங்க கெடைக்குது, அப்படியே கெடைச்சாலும் நம்ம பசங்கள வாங்கி சாப்பிட விடுவமா நாம! இதுதான் நம்ம அறிவியலின் வளர்ச்சி, கண்ண வித்து ஓவியம் வாங்குற மாதிரி...

கொசுறு: பம்பாய் மிட்டாய்ன உடனே பம்பாய்ல இருந்து இறக்குமதி பண்ணினது நெனைச்சுக்காதீங்க, நம்ம ஊரு மாரியம்மன் கோவில் பக்கத்துலதான் மிட்டாய காய்ச்சுவான்...


More than a Blog Aggregator

by எல்லாளன்


More than a Blog Aggregator

by எல்லாளன்

கருத்துகள் இல்லை: