இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வன்னியில் இடம்பெற்ற இறுதிச் சமரில் சில நாட்களில் சிறிலங்கா படையினர் 25 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் பொதுமக்களை படுகொலை செய்தும் காயப்படுத்தியும் உள்ளதாக உதவிப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொத்துக்குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் என்பனவற்றின் செறிவான பிரயோகத்தினாலே அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டதாக ஒரு தொண்டர் நிறுவனப்பணியாளர் தெரிவித்துள்ளார். இந்த வகை ஆயுதங்கள் அனைத்துலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாகும்.
தற்போது மோதல் இடம்பெற்ற பகுதி சுடுகாடாக காட்சி தருகின்றது. அங்கு எதுவுமே இல்லை. கட்டடங்களோ, தேவாலயங்களோ அங்கு இல்லை எல்லாம் அழிவடைந்த நிலையில் உள்ளதாக தொண்டு நிறுவனப் பணியாளர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் தனது பெயரை குறிப்பிடவில்லை.
ஏனெனில் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல கொடுமையான சம்பவங்களை பார்வையிட்ட சாட்சி அவர்.
அவர் அனைத்துலக மனிதாபிமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர். வன்னிப் பகுதியில் பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றிய அவர், கடந்த மே மாதத்தின் நடுப்பகுதியிலேயே அங்கிருந்து வெளியேறியிருந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிக்கரும்பே என்
கண்மணியே கண்ணுறங்கு
மாணிக்கத்தால் மாரகண்டி
வச்சிரத்தால் பொன் பதக்கம்
யாருக்கிடுவோமின்னு
தேடித் திரிகையில
தனக்கிடுங்கள் என்று சொல்லி
தவம் பெற்று வந்த கண்ணோ
கண்ணான கண்மணிக்கு
காது குத்த போறோமின்னு
பொன்னான மாமனுக்கு
போட்டோம் கடுதாசி
தட்டெரம்ப பொன் வாங்கி
தராசு கொண்டு நிறை நிறுத்து
அரும்பான மாலை கட்டி
அம்மான் அவசரமா வந்தாக
அத்திக்காய் வாளி செய்து
மலர்ந்த நல்ல சிமிக்கி செய்து
கோடி உடுத்தி காது
குத்துமென்பார் கண்மணிக்கு
ராராரோ ராரிரேரோ..
சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட கச்சதீவில் ஏற்கனவே இலங்கைக் கடற்படையினரின் முகாம் இருக்கிறது. இருப்பினும் தற்போது இந்தியாவில் இருந்து இலங்கை நோக்கிவரும் மீனவர்களின் படகுகள் மீது கடற்படையினரின் கவனம் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்களை பலரை இலங்கை கடற்படையினர் கச்சதீவுக்கு கூட்டிச்சென்று , அங்குள்ள பல இடங்களை அவர்களைக் கொண்டு துப்பரவாக்கியுள்ளனர்.
அத்துடன் அவர்கள் தொடர்ந்து பேசுகையில், அங்கும் நிரந்தரமாக ஒரு கண்காணிப்புக் கோபுரம் ஒன்றை நிறுவவுள்ளதாகவும் அதில் இருந்து இந்தியாவில் இருந்து இலங்கை வரும் படகுகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் எனவும் கூறியுள்ளதாக இந்திய மீனவர்கள் கூறியுள்ளனர்.
முன்னர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துவந்த கச்சத்தீவு, 1974 ல் இந்திய-இலங்கை பிரதமர்களால் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இலங்கைக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
- வதை முகாம்களில் சொல்லொணாத் துயரை அனுபவித்து வரும் தாயக மக்களை துயரில் இருந்து விடுவித்து சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தவும்
- அரசியல் உரிமை பெற்றவர்களாக வாழச் செய்யவும்
- தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும்
சுவிற்சர்லாந்து மக்களின் ஆதரவினைக் கோரி நேற்று திங்கட்கிழமை இந்த பாத யாத்திரை தொடங்கியது.
250 கிலோ மீற்றர் நீளத்துக்கு செல்லவுள்ள பாத யாத்திரையை ஜெனீவா மாநகரின் முதல்வர் றெமி பகானி நிகழ்வு ரீதியாக தொடக்கினார்.
தொடக்க நிகழ்வு கரூஸ் பட்டினத்தில் உள்ள தேவாலய சதுக்கத்தில் நேற்று பிற்பகல் 2:15 நிமிடமளவில் நடைபெற்றது.
நிகழ்வில் கரூஸ் நகர சபைத் தலைவர் நிக்கொலஸ் வால்டர், இனவெறிக்கு எதிரான எஸ்.ஓ.எஸ். அமைப்பின் பணிப்பாளர் கார்ல் குறுண்பேர்க், சுவிஸ் தமிழர் பேரவையின் ஆலோசகர் திருமதி அன்னா அனோர், பேரவையின் செயலாளர் த.நமசிவாயம், உப தலைவர் சண் தவராஜா, பேரவைச் செயற்பாட்டாளர் செல்வி கெற்சி மாதவன் ஆகியோர் உரையாற்றினர்.
முதலாம் நாள் பாத யாத்திரை சுமார் 5 கிலோ மீற்றர் வரை சென்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு அலுவலகம் அமைந்துள்ள பலே வில்சன் எனும் இடத்தில் மாலை 5:00 மணிக்கு முடிவடைந்தது.
நாளை இதே இடத்தில் இருந்து புறப்படும் பாதயாத்திரை 18 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நியோன் நகரில் முடிவடையும்.
மூன்றாம் நாள் அவ்போனிலும் நான்காம் நாள் மோர்கசிலும் ஐந்தாம் நாள் லவுசானிலும் முடிவடையும் பாதயாத்திரை மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை லவுசானில் இருந்து தொடங்கும்.
இந்த பாதயாத்திரையில் சுவிஸ் மக்கள் உட்பட சுமார் நூறு பேர் வரை கலந்து கொண்டனர். தாயக மக்களின் அவலங்களைச் சித்தரிக்கும் பதாதைகளைத் தாங்கியவாறு சென்ற மக்கள் பிரெஞ்ச் மொழியிலான துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.
லேக் ஹவுசில் வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்தபோது நுகேகொட எம்புல்தெனிய சந்தியில் வெள்ளை வானில் வந்த ஆறு பேர் கொண்ட படைப் புலனாய்வுத்துறையினரால் நேற்று திங்கட்கிழமை மாலை 5:15 நிமிடமளவில் இவர் கடத்தப்பட்டார்.
கடத்தப்படும் சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் நின்ற மக்களிடம் உதவி செய்யுமாறு அவர் கோரியபோதும் அது பலனளிக்கவில்லை.
படைப் புலனாய்வுத்துறையினரால் வெள்ளை வானுக்குள் பலவந்தமாக தூக்கிப் போடப்பட்ட போத்தல ஜெயந்த, அதற்குள் இருந்த ஆறு பேர் கொண்ட குழுவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதுமட்டுமின்றி அவர் நீண்ட காலமாக வளர்க்கும் தாடி, மீசையையும் அவர்கள் வெட்டி எறிந்துள்ளனர்.
கடத்தப்பட்ட இடத்தில் இருந்து நீண்ட தூரம்வரை கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவரை வாகனத்திற்குள் கொண்டுசென்று கோத்தட்டுவ என்ற இடத்தில் தூக்கி எறிந்துவிட்டு சென்றுள்ளனர்.
கோத்தட்டுவ பகுதி மக்களால் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு இவர் கொண்டுவரப்பட்டு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்பு மற்றும் கால் பகுதிகளிலேயே அதிகளவான காயங்கள் இவருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்காவில் உள்ள அனைத்து இன ஊடகவியலாளர்களுடனும் எளிமையாக பழகும் இவர், ஊடகச் சுதந்திரத்திற்காக நீண்ட காலமாக பாடுபட்டு வருகிறார்.
இவரது செயற்பாட்டை கடந்த வருட இறுதியில் முடக்குவதற்கு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை.
குறிப்பாக, இவரது வீட்டிற்கு கடந்த வருட இறுதியில் சென்ற படைப் புலனாய்வுத்துறையினர் இவரை கடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சியும் அம்பலத்திற்கு வந்திருந்தது.
இந்நிலையிலேயே இவர் மீது மீண்டும் சிறிலங்கா அரச பயங்கரவாதம் பாய்ந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக