திங்கள், 1 ஜூன், 2009

2009-06-01

நீண்ட யுத்தத்துக்கு முடிவு கண்டு விட்டோமென ஸ்ரீலங்கா அரசாங்கம் மார்தட்டிக் கொண்டாடும் இந் நேரத்தில் அந்த யுத்தத்தில் சிக்குண்ட மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாய் விரிந்து கிடப்பதை எச் சமூகமும் ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பது கவலையளிக்கின்றது.

யுத்த பூமியில் வாழ்ந்த தமிழினம் சிதைந்து மண்ணாகிப் போக எஞ்சிய சிலரில் பலர் ஊனமுற்றவராகவும், சிலர் உறவுகளை இழந்தவர்களாகவும் மனிதாபிமான யுத்தத்தின் விளைவை கண்டுள்ளனர்.

அந்த யுத்த களம் ஏற்படுத்திய தாக்கத்தினை "பதுங்குகுழியில் இருந்து ஒரு வலைப்பதிவு" என்று உபதலைப்புடன் தோழர் தீபச்செல்வன் அவர்கள் தீபம் எனும் வலைப்பதிவை காத்திரமாக, மனதைத் தொட்டுச் செல்லும் கவிதைகளூடாகப் பிரசவித்துள்ளார்.

"பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி" எனும் குறியீட்டினூடாக

மண் சிதறி மூடப்பட்ட
பதுங்குகுழியில்
மூடுண்டு போயிற்று
கடைசி வரை
வைத்துக் காத்திருந்த
உடைந்த முகத்தின் எச்சங்கள்.

எனக் கூறித் தொடரும் வரிகள் எத்தகைய கல்மனதையும் கரைய வைக்கக் கூடியதாகப் பதிவு செய்துள்ளமை கவிஞரின் ஆளுமையைக் காட்டுகின்றது, புதுக் கவிதையைத் தளமாகக் கொண்டு தோழர் தீபச்செல்வன் கூறும் அனைத்துக் கவிதைகளும் பிரமாதம்.

ஆனால் நொந்த கவிதைகளின் பிறப்புக்கு உரித்தான எம்மின அழிப்பின் சீரழிவுக்கு ஒரு தரப்பு மட்டுமே சொந்தக்காரரென கவிஞர் கூற முற்படுவதனை ஏற்க முடியாமல் இருக்கின்றது.

தமிழின அழிப்புக்கு முக்கிய பாத்திரங்கள் யாரென்பதை தீபச்செல்வன் போன்ற எதார்த்தக் கவிஞர்கள் இனம் காண வேண்டும், எம்மின மக்கள் அராஜகம் கொண்ட தமிழீழத்தில் என்றுமே வாழ முற்படவில்லை, மாறாக முற்பட வைக்கப்பட்டார்கள் என்பதே உண்மை.

ஒரு வேளை கஞ்சியாவது குடித்து விட்டு நிம்மதியாக இருக்க வேண்டுமென்றே எம்மக்கள் அனைவரும் கூறுவர், மனிதத்தை நேசிப்போர் தங்களின் மனங்களில் கை வைத்துப் பதில் கூறினால் நிம்மதியான வாழ்வு மாத்திரமே எமக்குத் தேவை படுகொலைக் கலாசாரத்துடன் கூடிய சீரழிந்த துப்பாக்கிக் கலாசாரம் வேண்டவே வேண்டாம் என உரத்துக் கூறுவர்.

நன்றி : http://deebam.blogspot.com/

என்னுடைய வலைப்பதிவை பின்பற்றும் 92 ·பாலோயர்களுக்கும் google reader-ல் உள்ள முந்றூற்றுச் சொச்சம் நபர்களாகிய அனைத்து புண்ணியாத்மாக்களுக்கும் நான் தெரிவிக்க நினைப்பது என்னவென்றால்...பாடப்பாடத்தான் ரோகம்.. ச்சீ.. ராகம் என்கிறார்கள் பெரியவர்கள். எழுத எழுதத்தான் வேகம் என்கிறார்கள் நண்பர்கள். இதனால் எழுத்தின் தரம் கூடுகிறதோ இல்லையோ, தளத்தின் ஹிட் கூடுமல்லவா? இன்றைய அவசர யுகத்தில் 'ஷிட்டுக்களை' தந்துதான்
இன்று பேரினவாத அரசு இலங்கை முழுக்க பேயாட்டமாடுகின்றது. புலிகள் மண்ணில் அழிக்கப்பட்ட நிலையில், அது தனித்து அனைத்து மக்கள் மீதும் பாசிசப் பயங்கரவாதத்தையும் மக்கள் மேல் ஏவிவிட்டுள்ளது. தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றனர்.

இந்தநிலையில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து மட்டும்தான், இந்தக் கொடுமைக்கு எதிராக குரல்கள் எழ முனைகின்றது. அவையும் மக்களுக்காக அல்ல, புலத்து புலி தன் அதிகாரத்தையும் செல்வத்தையும் தக்கவைக்கும் அதே துரோக அரசியலுக்காக. தமது கடந்தகால தவறுகளை திரும்பிப் பார்க்காத, அதே மக்கள்விரோத அரசியல். மக்களை பணயம் வைத்து, அவர்களை பலியிட்டு நடத்திய அதே பாசிச அரசியல்.

இன்று பேரினவாதத்தின் திறந்தவெளிச் சிறைகளில் சிக்கியுள்ள மக்களை, இந்த அவலமான நிலைக்கு கொண்டு வந்தவர்கள் புலிகளே. புலிகள் இந்த மக்களை வதைத்து, அவர்களை படுகேவலமாக கொல்ல உதவியும், கொன்றும், இறுதியாக இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் இந்தப் புலிகள்தான். இதைப்பற்றி எந்த சுயவிமர்சனமுமற்ற நிலையில், மீளவும் அந்த மக்களை காட்.........
.முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/

.


குடும்பம் - அரசின் அடிப்படை அலகு .
தனி மனிதன் - ஆரம்பம் .
நாடு அதன் அதிகார வரம்பெல்லை .

தற்பொழுதுள்ள அரசுகள் எதுவும்
குடும்பம் என்ற அமைப்பைப் பார்ப்பதேயில்லை.

மாறாக நிறுவனங்களையே பார்த்துக்கொண்டுள்ளன .

உலகில் இன்று ஏற்பட்டுள்ள
கொடும் பொருளாதார நெருக்கடிக்கும்
இனி ஏற்படப்போகும் கடுமையான பல நெருக்கடிகளுக்கும்
இதுவே முதல் மற்றும் முடிவான காரணமாக அமையப்போகிறது .

உலகில் குற்றவியல் மற்றும்
பிற சட்டங்கள் யாவும் பெரும்பாலும் தனி மனிதனை நோக்கி மட்டும் செயல்படும் நிலையில் ,
நிறுவனங்கள் அதனின்று தப்பி
குடும்பம் என்ற அமைப்பை சுரண்டி ,சீரழித்து
அரசு என்ற அமைப்பினை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன.
அரசுகளும் இதனை உணராமல்
நிறுவனத்தன்மையினால்
தவறான பாதையில் கண்மூடித்தனமாக
சென்றுகொண்டுள்ளன .
இவ்வாறு சென்றுகொண்டிருக்கும் நிலையில்
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு தவிக்கும்
அல்லது
பொருளாதார நெருக்கடி கண்டு
அஞ்சும் குடும்பத்தின்
குரல்வளை இருக்கத்திற்கு
ஆளாகும் தனிமனிதர்கள்
(குறிப்பாக இளைஞர்கள் )
சமுதாயக்காற்றினால் ஒன்றிணைந்து
வெளிப்படுத்தும் சிறு எதிர்ப்பே
ஆஸ்திரேலியா
மற்றும்
பிற நாடுகளி்ல் ,மாநிலங்களில்
பிற நாட்டினர் ,இனத்தினர் ,மாநிலத்தினர்
என பாகுபாடு பார்த்து
தாக்குதல்கள் .

இப்படி உலகம் முழுவதும் தாக்குதல்கள்
அதிகரித்துவரும் நிலையில்
அரசுகள்
இப்படிப்பட்ட விசயங்களில்
அரசியல் கலக்காமல்
அணுகுவது தான்
சிறந்த நாகரிகமான நடவடிக்கையாக இருக்கும் .
அது தவிர்த்து அரசியலாக்க முயன்றால்
அப்படி முயல்பவர்கள்
மனித குலத்தை நாசம் செய்பவர்களாவார்கள் .

மேலும் ,
அரசுகள் தங்களின் தவற்றை
திருத்திக்கொள்ளாமல்
சட்ட நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் மட்டுமே
அடிப்படையான பிரச்சனை
தீர்ந்து விடுவதில்லை .
அடிப்படையான பிரச்சனையை
சரி செய்வது சற்று கடினம் தான்
எனினும்
அதனை முதலில் செய்யவேண்டும்
அதனைச்செய்யாமல் இருக்கும்
எந்த அரசும்
அதன் அதிகாரவரம்பெல்லையை
சிதைக்க தானே வழிவகுக்கும் அரசாகிவிடும் .


.

சென்னை, ஜுன் 1 : 6ஆவது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் பலன்களை தமிழக அரசு ஊழியர்கள் இந்த மாதம் முதல் பெற உள்ளனர்.   2006ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த சிபாரிசுகள் அமலுக்கு வருகிறது.  இதற்கான உத்தரவில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டுள்ளதாக நிதித்துறை செயலர் நேற்று அறிவித்தார்.   ஜூன் மாத சம்பளத்தில் இந்த உயர்வு வழங்கப்படும். பென்ஷனர்களுக்கு 40 சதவீத உயர்வு கிடைக்கும்.  நிலுவைத் தெதகை 3 தவணையாக வழங்கப்படும். முதல் தவணை ஜனவரி 30ஆம் தேதி வழங்கப்படும். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: