திங்கள், 1 ஜூன், 2009

2009-06-01

சென்னை, ஜுன் 1 : 6ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு அளித்ததற்காக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ.) மாநிலத் தலைவர் கோ.சூரியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

"கோசுமல்லி" அல்லது "கோசும்பரி" என்று அழைக்கப்படும் இது தென்னிந்திய திருமணம், மற்றும் விசேஷ விருந்துகளில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஊறவைத்த பயத்தம் பருப்பையும், பச்சை காய்கறிகளையும், அப்படியே பச்சையாக கலந்து சாலட் போல் பரிமாறுவார்கள்.

செய்வது மிகவும் சுலபம். உடல் நலத்திற்கும் உகந்தது. இதை காரட், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் செய்வார்கள். எல்லாக் காய்களையும் சேர்த்தோ அல்லது ஒரே காயை பயன்படுத்தியோ செய்யலாம். ஆனால் பெரும்பாலும் விருந்துகளில், காரட் கோசுமல்லிதான் இடம் பெறும்.

தேவையானப்பொருட்கள்:

காரட் (நடுத்தர அளவு) - 2
பயத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மாங்காய் (துருவியது அல்லது சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பச்சை கொத்துமல்லி தழை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
எண்ணை - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ப்யத்தம் பருப்பை ஒரு மணி நேரம் தண்னீரில் ஊற வைக்கவும்.

காரட்டைக் கழுவி, தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும். அல்லது மெல்லிய சிறு துண்டுகளாக் (தீக்குச்சி போல்) நறுக்கிக் கொள்ளவும்.

கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விடவும். (விதையை நீக்கி விட்டால், காரம் குறைந்த்து விடும். மிளகாயையும் கூட சாப்பிடலாம்).

ஒரு பாத்திரத்தில் காரட் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, மாங்காய்த் துண்டுகள், உப்பு போட்டுக் கலக்கவும்.

தாளிக்கும் கரண்டி அல்லது ஒரு சிறு வாணலியை அடுப்பிலேற்றி, அதில் எண்ணை விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, காரட் கலவையில் கொட்டவும்.

ஊற வைத்துள்ள பருப்பை, தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, காரட்டுடன் சேர்க்கவும். அத்துடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


More than a Blog Aggregator

by நாடோடி இலக்கியன்

மாங்கா மாங்கா கொத்து மாங்கா மார்க்கெட் போகின்ற குண்டு மாங்கா.


நுணாக் காயும்,மொட்டும்(மல்லிகை இந்த பூவிடம் மண்டியிடணும்)


இதில் இருக்கும் காய்களின் எண்ணிக்கை ஆறா ? அஞ்சா? மொத்தத்தில் இதுதாங்க ஆரஞ்ச்.


நோய் தாக்கிய தென்னை(தனது நிலை இந்த மரத்திற்கு தெரியுமா?)

நோண்டியெல்லாம் நொங்கெடுக்க முடியாது,ஏறினாத்தான் நொங்கு.


கரையான் புற்று(உள்ளே குடியிருப்பவர் பெரும்பாலும் மிஸ்டர்.பாம்பர்)



சோளக்கொல்லை (பொம்மை வைக்க இன்னும் நாளாகும்)

தூக்கணாங்குருவியும் கூடும்(விஜயின் "குருவி" எப்படி படமெடுத்த உடனேயே காணாம போச்சோ அதே மாதிரி இந்த குருவியும் கிளிக்கிய உடன் எங்கே போச்சுன்னே தெரியல)

இதுதாங்க உடும்புப் பிடி

கமெண்ட் பார்த்து கண்ணை கட்டுதா இதில ஒரு லெமெனை புழிஞ்சிக்கோங்க.
துட்டக் கைமுனுவும்
எல்லாளனும்.



ந்த வார்த்தை தனது காலத்தை
இழந்துவிட்டது,
அதற்கு அதனது காலமாகவும் ஏதோ இருந்திருக்கும்,
நரம்பு புடைக்கும் சொல்லாய் அது காலத்தை இழந்திருந்தது!

இந்த வார்த்தைக்கு ஒரு நாள் இருந்திருக்கிறது,
அது தனது நாளையும் தொலைத்து
இன்னொரு இரவுக்குத் தவம் இருந்தபோது,
சூரியனின் சரிவில் வீழ்த்தப்பட்ட தலைகள்
வார்த்தைக்குச் சமாதிகட்டிக் கொண்டன.

அந்த வார்த்தைக்குத் தோதான
இன்னொரு வார்த்தை இனி மேலெழுவதற்கு,
வரப் போகும் இரவுகளில் முட்கம்பி வேலிகளில்
கிழிபடும் மனிதம் இடந்தரப் போவதில்லை.

வார்த்தைக்கு விருப்பங்கள் பலதாக இருந்திருக்கிறது,
மற்றவர்களைக் கொன்று வாழ முனையும்
ஒரு திசையில் அந்த வார்த்தை
"தமிழீழம்"என்று எமக்கு அர்த்தமாகியதா?

சிங்களத்து உச்சி பிளந்து
எல்லாளனைக் காட்டிய
அநுராதபுரத்தில் வீழ்ந்த தலைகள் பதினேழு,
வார்த்தைகளுக்கு அப்போதும் ஓய்வில்லை!

மாவீரர் உரை சொல்ல
துட்டக் கைமுனுவின் தலை பிளந்த
வரலாறு தேசியத் தலைவர் திசையில் வார்த்தைக்குப்
பெருமைப்பட்ட புல(ன்)ம் பெயர் புண்ணாக்குகள்.

வன்னிக்குள் மண்டியிட்ட
எல்லாளன் தலை பிளக்கத் துட்டக் கைமுனுக்குக்
கரம் கொடுத்தவர்களும் எல்லாளன் வாரீசுகள்தாம்
வார்த்தைக்கு இப்போது புதுவிளக்கம் சொல்ல




கைமுனுவுக்கும்
எல்லாளனுக்குமாகச் செத்தவர்கள்
அப்பாவி இலங்கைப் பஞ்சப்பட்டவர்கள்
அள்ளிய காசுகளில் அரைக்கு ஒட்டியாணம்
கட்ட முனையும் புலிப்பினாமிகளின் வீடுகளுக்கு
இன்னுமொரு தேசியப் பேயை வார்த்தைகொண்டு விடு!

வார்த்தை தனக்குள்ளே வருத்தல்களைப் புதைத்திருந்தது,
அதுவும் தன்னையும் மற்றவர்களையும் கொன்றபோது
தேசிய ஆன்மாவென்று தெருக் கரையில் நின்று,
அழுதுவடியும் கயவர் வார்த்தைக்குள் வதைபட்டவர்களை
வஞ்சித்து மோப்பம் பிடித்து வயிறு வளர்க்க
இன்னொரு பிரபாகரன் "எல்லாளனுக்கு" இரையாகணுமோ?


ப.வி.ஸ்ரீரங்கன்

01.06.2009


பிற்குறிப்பு:


2007 இன் மாவீரர் தினத்துக்கு உரை சொன்ன பிரபாகரன்,"சிங்களத்து உச்சி பிளந்து" எல்லானை அவர்களுக்குக் காட்டியதாகப் பெருமைப்பட்டார்.அநுராதபுர விமானப்படை தளத்துக்குப் பதினேழு கரும்புலிகள் சென்று தாக்கிய வெற்றிக்கு அவர் சொன்ன உரை அது.இதுள் சிங்கள ஆளும் வர்க்கத்து உளவியல் துட்டக் கைமுனுவின் வரலாறின் வழியிலேயே இயங்குகிறது.அது,வன்னிக்குள் மண்டியிட்ட எல்லாளன் தலையைப் பிளந்து"தேசியத் தலைவர்"தம் கூற்றை எதிர்கொண்டுள்ளதாக இவ் உளப்பாங்கை உணருவேண்டும்.
பல்லி பொல்லாதது.
வீட்டில் தனித்திருப்பது தெரிந்ததும்
மேல் தளத்திலிருந்து பக்கவாட்டுச் சுவருக்கு
நகர்ந்து வந்து
சந்தோஷச் சத்தமெழுப்பி அழைக்கிறது.
வராந்தா, வெளியறை, உள்ளறை, சமையலறையென
எங்குப் போனாலும்
பிடிக்க
பின்னாலேயே வருகிறது.
திரும்பிப் பார்த்து முறைத்தால்
போவதுபோல் போய்
அலமாரி, பாத்திரக்கூடை, அஞ்சறைப்பெட்டி, குளிர்பதனப்பெட்டி
மறைவுகளில் நின்று
ஓரக்கண்ணால் உற்றுப் பார்க்கிறது.
அசந்து படுக்கையில்
நேர் மேலாக
தளத்துக்கு வந்து
காற்று துணியை விலக்குகையில்
நாக்கை நீட்டிநீட்டி
சப்புக் கொட்டுகிறது.
காகிதத்தைச் சுருட்டி அடித்தால்
பயந்ததுபோல் ஓடுவது
குளியலறையில்
சோப்பு தேய்த்து குளிக்கிற கணம்
எங்கிருந்தோ வந்து மேலே பாய்கிறது.

நன்றி: ஆனந்தவிகடன்

கருத்துகள் இல்லை: