திங்கள், 1 ஜூன், 2009

2009-06-01



இதனை சூப்பர் ஸ்டார் நடித்த "அண்ணாமலை" படத்தில் உள்ள "வந்தேண்டா பால்காரன்..." பாட்டு மெட்டில் பாடி அண்ணன் கேபிலாரை குஷி படுத்தவும்


வந்தே.....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்....
புது ஊடு கட்டி ஆடபோறேன்....

வந்தே....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்.
புது ஊடு கட்டி ஆடபோறேன்....

"புல்"லு கொடுத்தா பதிவ கொடுப்பார்
ஒன்னால முடியாது தம்பி -அட
பாதி புள்ள... பதிவ..தொரக்குதப்பா
ஹாட்ஸ்ப்பாட்டை "மலை"போல நம்பி

வந்தே....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்.
புது ஊடு கட்டி ஆடபோறேன்....

தன் பரோட்டாவில் ஒரு பாதி A-ஜோக்கா கொடுப்பது
கேபிளோட வேலையப்பா
அவர் கொடுத்தாலும் ஜோக்கோடு விரசத்தை கலப்பது
வாசகரின் மூளையப்பா
தன் பாரோட்டாவில் ஒரு பாதி A-ஜோக்கா கொடுப்பது
கேபிளோட வேலையப்பா
அவர் கொடுத்தாலும் ஜோக்கோடு விரசத்தை கலப்பது
வாசகரின் மூளையப்பா

தடுக்கி விழுந்தா படம்பாரு
பார்த்து வந்தா பதிவாரு
உனக்கு என்ன வரலாறு
உண்மை சொன்னா தகராரு
நீ கேபிள் போல உழைக்கலியே - நீ
டீவிடி வைச்சு பொழைக்கிருயே...

வந்தே....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்.
புது ஊடு கட்டி ஆடபோறேன்....

அட நான் போட்டா.. மொக்கபதிவு நீ போட்டா.. பெரும் பதிவு
தமிழ்வெளி சொன்னதுங்க
பதிவு இருந்தாலும் தூக்கப்படும், செத்தாலும் நீக்கப்படும்
தமிழ்மணம் சொன்னதுங்க

அன்னல் காந்தி படிச்சதெல்லாம்
சண்டை வளர்க்கும் "சாரு" பதிவுங்க

நையாண்டிநைனா நான் கொடுப்பதெல்லாம்
மண்டை யொடைக்கும் மொக்கைதானுங்க

அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு
என்னை வாழ வைத்தது தமிழ் பாலு

வந்தே....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்.
புது ஊடு கட்டி ஆடபோறேன்....



இந்தப் பாடல் திரை உலகின் முப்பத்திரெண்டாம் குலோத்துங்கன், வலை உலகின் எழுபதாம் புலிகேசி, A-ஜோக்கின் சாம்ராட் என் அண்ணன் திரு.கேபிள்சங்கரின் பாத கமலங்களுக்கு சமர்ப்பணம்.



எச்சரிக்கை: என்னோட பதிவுகளை உதாசீன படுத்தும், என்னோட பதிவுகளுக்கு வந்து ஆதரவு தெரிவிக்காத பெரும் பதிவர்களின் புகழை இவ்வாறு பரப்புவேன் என்று சூளுரைக்கிறேன்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உங்களுக்கு என்னையோ என் அண்ணனையோ பிடிக்காட்டி கூட பரவா இல்லை, இந்த பாடல் கூட பிடிக்காட்டியும் பரவா இல்லை ஆனா உங்க கருத்தை சொல்லிட்டு போங்க, இல்லன்னா உங்களுக்கும் இந்த மாதிரி பாட்டு எழுதப்படும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
புதுதில்லி, ஜுன் 1  : இலங்கையில் இருந்து அகதிகள் போர்வையில் 200 முதல் 300 விடுதலைப் புலிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கீழ்மட்ட வீரர்கள், இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கலாம் என்றும், அவர்கள் தற்போது அகதிகள் முகாமில் விசாரணைக்காக இருக்கலாம் என்றும் உளவுத்துறைக்கு தகவல்கள் கிட்டியிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 புது தில்லி, ஜூன் 01 : மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சராக மு.க.அழகிரி 01.06.09 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான உரங்கள் மானிய விலையில் தேவையான நேரத்தில் கிடைக்கச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் எடுக்கப்படும். நவீனமயமாக்கல் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உரங்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும். ஏற்கெனவே உள்ள உரத் தயாரிப்பு நிறுவனங்களை மறுசீரமைப்பதோடு மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உற்பத்தி துவக்கப்படும். பாஸ்பேட் மற்றம் பொட்டாஷியம் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்கள் விநியோகம் சீராக இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  லண்டன், ஜுன் 1 : 1500 பயணிகளுடன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்து உயிர் பிழைத்த பயணியான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மில்வினா டீன் ஞாயிற்றுக்கிழமை தனது 97ஆவது வயதில் காலமானார். தெற்கு இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவரது உயிர் பிரிந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: