பக்தி வியாபாரம்
திருப்பதி ஏழுமலையான் கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வி.அய்.பி.,க்கள் கோயிலுக்கு வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தான நிருவாகம் அறிவித்துள்ளது.
சபாஷ், சரியான அறிவிப்பு இது! குறிப்பாக ஏழை பாழைகள் நடுத்தர மக்கள்தானே ஏமாந்த சோணகிரிகள் - கடவுள் கடாட்சம் காட்டமாட்டாரா என்று ஏங்குவது இவர்கள்தானே?
உழைத்தும் ஒரு காசு கூட மிச்சமில்லையே என்று உருகிக் கண்ணீர் வடிப்பவர்கள் இவர்கள்தானே!
இன்றில்லாவிட்டாலும் நாளை பகவான் கண்களைத் திறப்பார் (அவர் என்றைக்குத் திறந்தார்? சிற்பி அடித்து வைத்த அந்த உருவம் சலனமில்லாமல் அப்படியேதானே ஆண் டாண்டு காலமாக இருந்து வருகிறது) என்ற நப்பாசையில் கோயில் குளங்கள் என்று நாடித் திரிகிறார்கள். ஏற்கெனவே வறுமை - இதில் கடன் வாங்கியாவது க்ஷேத்திராடனம் செய்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.
அதுவும் தீராத வினை களையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம் என்று விளம்பரப்படுத்தப் பட்ட கடவுளாயிற்றே - அப்படிப்பட்ட கோயிலுக்கு அப்பாவிப் பக்தர்கள் திரளக் கேட்கவா வேண்டும்?
வி.அய்.பி.,க்கள் வீட்டில் இருந்தே இணைய தளம் மூலம் ஏழுமலையானைத் தரிசிக்கத்தான் ஏற்பாடு செய்து வைத்துள்ளார்களே - பக்தி வியாபாரம் இப்பொழுது ஹை-டெக்கில் சவாரி செய்துகொண்டிருக்கிறதே.
இந்த நிலையில், வி.அய். பி.,க்கள் தேவையில்லாமல் ஏழுமலையானைக் காண திருப்பதி வருவானேன்? அவர்கள் வருகிறார்கள் என்பதற்காகக் குறுக்கு வழியில் பகவானைக் காட்ட ஏற்பாடு செய்யவேண்டும்; இதன்மூலம் பக்தர்களிடையே சலசலப்பு வேறு!
பகவான் முன்னே எல்லோரும் சமம்தான் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொள்கிறார்கள்; அப்படி யென்றால் வி.அய்.பி.,க்கள், வி.அய்.பி.,க்கள் அல்லாதார் என்று கோடு போட்டுப் பிரிப்பது சரியானதுதானா? என்று யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது - எல்லாரும் மனிதர்கள் என்றாலும், அவாள் அவாளுக்கென்று தலையெழுத்து என்பது தனித்தனியாகத் தானே இருக்கிறது!
இப்படி அது அதற்கும் வெண்டைக்காய் விளக்கெண்ணெய் விளக்கம் ஹிந்து மதத்தில் வண்டி வண்டியாகக் கொட்டிக் கிடக்கிறதே.
இப்பொழுது திருப்பதி வெங்கடேஸ்வரனின் பிராஞ்ச் (கிளை) கடைகள் வேறு திறந்தாகி விட்டது. திருப்பதியில் ஏழுமலையானுக்குத் திருக்கல்யாணம் நடக்கும் அதேநேரத்தில் சென்னைத் தீவுத் திடலிலும் டூப்ளிகேட் ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தை நேரில் பார்க்கலாம்.
ஹி... ஹி... பரம்பரை வியாபாரிகள்கூட இந்தப் பக்தி வியாபாரிகளிடத்திலே பிச்சை வாங்கவேண்டும் - போங்கோ!
------------------- மயிலாடன் அவர்கள் 1-6-2009 "விடுதலையில் எழுதிய கட்டுரை
ஓணான் அடித்து மகிழ்ந்த இளமைக்குறும்புகள்…
கற்றாழை முட்டியைக் கட்டிக்கொண்டு
உற்றாருக்கு தெரியாமல் நீந்திய வேளைகள்…
எட்டணாவிற்கு விற்கும் மாம்பழத் துண்டுகளுக்காக
எட்டாத உயரச்சட்டியில் திருடிய சில்லறைகள்…
அடித்த வாத்தியாரின் சைக்கிள் டுயூப்பில்
பிடுங்கிய காற்றிற்காய் வாங்கிய பிரம்படிகள்…
ஒற்றை ரூபாய் குச்சி ஐஸிற்காக கருதடித்த
ஓய்வில்லா அறுவடைக் காலங்கள்….
அச்சுமிட்டாய்க்காக அடம்பிடித்த அழுகைகள்…
திருவிழாவின் பொழுதுகளில் விடியவிடிய
தெருவெங்கும் விளையாடிய கணங்கள்…
அடித்த கில்லி பட்டு இன்றைக்கும் இருக்கும்
அம்மாயிப்பாட்டியின் தழும்பு…..
தவறி விழுந்த பருத்திக்காட்டில் கொத்திய
குளவிகள் என் முகத்தை கோரப்படுத்திய வேதனை..
உயர்நிலைப் படிப்புக்காய் நடக்கும்போது ஓய்வுக்கு
உதவிய பெயிண்ட் போன மைற்கற்கள்….
முதன் முதலில் நான் ஏதோ கிறுக்கியதற்காக
வகுப்பறையில் பாராட்டிய என் தமிழ் அய்யா…
கல்லூரியின் முதல் நாளில் பால்குடி மாறலை என்று
என்னைக் கிண்டலடித்த புரபசர் ஜோஷி…
முதன்முதலில் என் உதடுகளைத் தழுவிய
மறைந்து மறைந்து பிடித்த பீடித்துண்டு….
இன்னமும் நினைவிருக்கும் முதலாவது
மதுவின் வாசனையும் , சுவையும்….
படிக்கிற போர்வையில் புத்தகத்தின் உள்ளே
வைத்துப் படித்த குமுதம் , கல்கண்டு….
பேருந்துக் கட்டணத்தை மிச்சம் பிடித்து வாங்கிய
அந்நாளைய ராஜேஷ்குமாரும் , பிகேபி….
குழுப்படிப்பு என்ற போர்வையில் ஹாஸ்டலில்
படித்த சரோஜாதேவிப் புத்தகத்தின் வக்கிர எச்சங்கள்…
பேருந்தில் இடம்பிடிக்க மட்டுமே உதவிய
பெரிய சைஸ் கல்லூரிப் புத்தகங்கள்….
உழைத்துக் களைத்து வீடு திரும்பிய
அப்பாவின் வியர்வை வாசனை…
ஒலியும் , ஒளியும் பார்க்க ஒண்டிக்கொண்ட
அண்டை வீட்டுத் திண்ணைகள்…..
இப்படியாக , இளமையின்
இனிய நினைவுகளைக் கிளறிப் போகின்றன
இயந்திர வாழ்க்கையின் ரணப் பொழுதுகள்….!
தடுப்பு முகாம்களில் தவிக்கும் தமிழ் மக்களை காப்பாற்றும் நோக்கத்துடன் 4 அம்ச கோரிக்கையை முன்வைத்து 13 வது நாளாக தமிழ் மக்களின் பிரதியான ரிம் மார்ட்டின் அவர்கள் ஆகாரம் அற்ற பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.
இவருக்கு ஆதரவாக 5 தாய்மார்கள் தொடர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரித்தானியா மக்களுக்கு இலங்கையில் தடுப்பு முகாம்களில் வாழும் மக்களின் அவலத்தை பிரதிபலிக்கும் முகமாக இலண்டன் மையப் பகுதியில் ஒன்றான Trafalgar அல்கர் சதுக்கத்தில் இளையோரால் தெரு நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது.
அதிகமான சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியாக அமைந்திருந்ததால் பல சுற்றுலா பயணிகள் இந்த தெரு நாடகத்தை கூர்மையாக உன்னிப்பாக அவதானித்து பார்த்தனர். அவர்களுக்கு தமிழ் மக்களின் அவலத்தை தாங்கிய துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டது.
இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் அமைப்பினரால் சிறிலங்கா போரில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் அவர்களின் உறவினர்கள் மூலம் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் சேகரிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி துருக்கி மற்றும் தமிழ் மக்களின் அவலத்தை அகண்ட திரையின் ஊடாக பிரித்தானிய மக்களுக்கு வெளிக்காட்டினர்.
இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினர் நிலைகொண்டிருந்த போது அதன் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா இலங்கையின் இந்த யுத்தத்தில் இந்தியா பொறுப்பற்ற ரீதியில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தியா பொதுமக்களின் இழப்புகளை தவிர்ப்பதில் தோல்வி கண்டுள்ளதாக இரண்டு சர்வதேச மனித உரிமை குழுக்கள் குற்றம் சுமத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
களத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே இந்தியா இந்த விடயத்தில் நடத்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள 60 மில்லியன் தமிழர்களை புறக்கணித்து இலங்கைக்கு இராணுவ தளபாடங்களும் பயிற்சிகளும் புலனாய்வு ஊக்குவிப்புகளும் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தன.
அத்துடன், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஈடாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா இலங்கைக்கு ஆயுத விற்பனையை கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வந்ததாகவும் மேத்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக