செவ்வாய், 2 ஜூன், 2009

2009-06-02

"ஹையா இன்னைக்கு கடைசிப்பரிச்சை" என்று அன்று சந்தோசமாக பள்ளிக்கு புறப்படுவேன். நானும் என் நண்பன் ராசேந்திரனும் இட்டேரி வழியாக சைக்கிளில் எதிர்காத்தில் பெடல்கள் மீது ஏறி அழுத்தி ஓட்டுவோம். எதிர் காற்றில் சைக்கிள் ஓட்டுவது என்பது பிரேக்பிடித்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதற்கு சமம். சோழக்கூட்டோடு எருமைத்தயிரு கலந்து ஆத்தா அன்போடு ஊத்திக்கொடுத்த சாப்படு சைக்கிளின் ஆட்டத்தால் தூக்குப்போசி வாய்வழியாக சிந்த ஆரம்பிக்கும்.


சில சமயங்களில் பக்கத்து ஊரு வாத்தியார் எதுக்கால சைக்கிள்ல வருவார். உடனே இறங்கி ஒரு வணக்கம் போட்டு அப்படியே தாவிக்குதித்து மறுபடியும் அழுத்துவம்.. சைக்கிளை நிப்பாட்டாமலே! பரீட்சை முடிந்து மதியம் பள்ளிக்கு பக்கத்துல இருக்குற வயல்வெளிக்கு நண்பர்களோடு செல்வேன். அவரவர் சாப்பாடுகள் காலியானவுடன் கிணற்றில் ஒரு சிறு குளியல். ஒரு அரமணிநேரம் தண்ணிக்குள்ள தொட்டுவிளயாடுவோம். சில சூரன்கள் இருப்பனுக, நல்லா மூச்சை தம்கட்டிக்கிட்டு ஒரு மூணு ஆள் ஆழத்துல போயி மல்லாக்க பாத்தவாரே படுத்துக்கட்டு "முடிஞ்சா தொடுன்னு" சவால் விடுவானுக. நாங்க அவ்வளவு தூரம் தாக்குபுடிக்க முடியாதா அதுனால "மகனே நீ எப்படியும் மேலவந்துதேன ஆகனும்னு" மேலேயே கழுகு மாதிரி வட்டம் போட்டு புடிப்போம். அந்த அரமணிநேரத்துலயே கண்ணு எல்லாம் சிவப்பா மப்பு அடிச்சமாதிரி ஆயிரும். உலகமே ஏதோ மிஸ்ட் எஃபெக்ட் பில்டர் போட்டு பாத்தமாதிரி புகையா தெரியும்.

அதுக்கப்புறம் பக்கத்து சண்முகா தியேட்டர் போவோம். அங்க சகலகலாவல்லவன் படம்னு ஞாபகம். அதுல 50 பைசா தரைடிக்கட் வாங்கி படம் பாப்போம். படம் முடிஞ்சதும் மீண்டும் சைக்கிள் பயணம். வர்ரவழியில அங்கங்க சைக்கிள நிப்பாட்டி வேலிக்கு ஓடுவோம். அப்படி ஒடினா செவப்பா கோவப்பழம் அல்லது இலந்தப்பழமரம் கண்ணுல தட்டுப்பட்டிருக்கும். அதைப்புடிங்கி சாப்பிட்டுவிட்டு நேரா தோட்டத்து சாலைக்குப்போய் நிப்பாட்டுவேன்.

ஸ்டேண்டுபோட்டு முடிக்கும் முன்பே நாலுகால் பாய்ச்சலில் ஓடிவருவான் "மணி". எங்க வெள்ளைநாய். டவுனுல ஜிம்மி டாமின்னு பேர் வக்கிற மாதிரி எங்க கிராமங்களில் மணி, வெள்ளையன், செவலையன் போன்ற பெயர்களே நாய்களுக்கு பிரசித்தமானவை. அது என்னைபாத்த சந்தோசத்துல தொத்துக்கால் போட்டு முகத்தில நாக்கால் நக்கி மனுசங்கள விட நண்பர்களை வரவேற்பதில் தாங்கள் தான் இணையற்றவர்கள் என்று நீரூபிக்கும். பின் ஆத்தா என்று கத்தியவாறே சாலையின் உள்ளே நுழைந்தால் ஆத்தா பேரன் வருவானே என்று கடலையை வறுத்துக்கொண்டு இருக்கும். அந்த சுடுகடலையோடு கொஞ்சம் வெள்ளம் சேர்த்து சாப்பிட்டுவிட்டு ஒரு சொம்புத்தண்ணிகுடிச்சுட்டு ஸ்கூல் யூனிபார்மில் சட்டைக்கு மட்டும் விடை கொடுப்பேன்.

டவுசர அண்ணாக்கயித்துல சுத்திக்கிட்டு வெறும் மேலோட பக்கத்து தோட்டத்து பழனிசாமி சாலைக்கு போவேன். அவன் நான் வர்ரதைப்பாத்ததும் உள்ள ஓடிப்போய் அவங்க வீட்டுல இருக்கும் ஹோவர்ட் ரெடியோவை சாலை தின்னைக்கு கொண்டுவருவான். அதுல 6 பாட்டரிக்கட்டை போடுவோம். உடனே பாட ஆரம்பிக்கும். அது ைளையபாரதம்னு ஒரு புரோகிறாம் நு ஞாபகம். அதைக்கேப்போம். அப்போ டீவீ ந்னா என்னன்னு தெரியாத காலம். ஆப்புறம் பேண்டு மாத்துன்னு போராடி இலங்கை ஒலிபரப்புக்கு மாத்துவோம். அவர்களது பேச்சும் விளம்பரங்களும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். பின் ஊர்க்கதைகள் பேசுவோம். அதில் பல சிறுமிகள், பேய்கள், புதுசா வந்திருக்கிற டிராக்டர் மகாத்மியங்கள் என்று பலசும் அலசப்படும்.

மறுபடியும் சாலைக்கு வரும்பொழுது மணி 9 ஆகியிருக்கும். கம்பஞ்சோறு கூட பண்ணைக்கீரை கடைந்து ஆத்தா பரிமாறியதை சாப்பிட்டுவிட்டு பட்டிக்கு காவலுக்கு போவோம். 3 செல் டார்ச்லைட் அப்புறம் ஒரு வீச்சரிவாள் மற்றும் ஒரு சிறுமூங்கில் தடி போன்றவற்றை எடுத்துக்கொண்டு மணி நாயோடு ஆடுகள் அடைத்துவைக்கப்பட்டுருக்கும் பட்டிக்கும் தூங்கச் செல்வேன். அன்றைய கனவில் சில்க்ஸ்மிதாவும் கமலும் "நேத்து ராத்திரி எம்மா" பாடிக்கொண்டிருந்தார்கள்!


ஊர்வலம் போக
மாரியாத்தாவ தயார் பண்ண
தேசிங்கன் பூசேரி
கோழிக்கூப்ட வந்துட்டார்..
தலைவர் ஊட்ல
மாரியாத்தா உடுத்த
புதுத்துணி தயாராய்,,
கைகூப்பி வணங்கி
ஆடைகளை கண்ணில் ஒத்தி
உற்சாகமாய் இருந்தார்
தேசிங்கன் பூசேரி..
ஆத்தாவுக்கு அணிவிக்கும்
துணிகளை தொட்டதே
பல ஜென்ம பாக்கியமாம்..
புத்தாடை, புது நகை,
கையில் புதுக் கத்தி..
ஆத்தா அழகாய் ஜொளித்தாள்
"என்னடா தேசிங்கா..
என்ன சொல்றா எங்கம்மா?"
மாரியாத்தா மகனாய்
மாறினார் தலைவர்..
" அவளுக்கென்ன சாமி
இப்போதான் பொறந்தவ மாறி
புது துணி புது நகைல
ஜெகஜோதியா இருக்காளே"
ஆத்தாளுக்கு மகனும்
பூசேரிக்கு சாமி தான்..
துணி எடுத்து வச்சிருக்கேன்
ஊட்ல வாங்கினு போடா
என்றார் சாமி.
பூசேரியை வரவேற்று
கைப்பையை கொடுத்தாள்
எசமானியம்மா..
ரொம்ப அழகான துணியப்பா
உனுக்குன்னு தான் குடுக்கறாரு மொதலாளி
அவளுக்கு புருஷந்தான் ஊருக்கே மொதலாளி
இந்தாண்டு பரிசை
இன்பமாய் பெற்று
நடையைக் கட்டினான் பூசேரி.
" இந்தாப்பா பூசேரி.."
போகவிட்டு பொறவு கூப்பிட்டா எசமானியம்மா
"பார்த்துட்டேனாத்தா
இந்த வெருஷம் எடக்கைல தான் கிழிஞ்சிருக்கு
சீல ஊசில தெச்சிக்கிறேன்.."

டிஸ்கி : இது கவிதை அல்ல.. சிறுகதையும் அல்ல...
 சென்னை, ஜுன் 2 : சமத்துவ மக்கள் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை கும்பகோணத்தில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.   அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது  : அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று மாலை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
 சென்னை, ஜுன் 2 : சமத்துவ மக்கள் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை கும்பகோணத்தில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.   அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது  : அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று மாலை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
 
 
 


More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
No Caption needed - Amazing Photos


கருத்துகள் இல்லை: