உலகிலேயே மிகப்பெரிய வாகன உற்பத்தி மையமாக பல்லாண்டுகளாக உலகையே திகைக்க வைத்து வந்த, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், மஞ்சள் காகிதம் தந்துள்ளது. நிறுவனத்தைக் கலைத்துவிட, அமெரிக்கச் சட்டப்படி, மனுச் செய்துள்ளது.
இந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பற்றி, எல்லாக் கல்லூரிகளிலும், எல்லாப் பேராசிரியர்களும், பலபட விவரித்துப் பேசுவார்கள். நேரில் போய்ப் பார்த்து வந்தவர்கள், கர்நாடக சங்கீத இசையை ரசித்த மனிதர் போல ருசித்துப் பேசுவார்கள்.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தைப் பார்க்கப் போகிறவர்கள் கால்களால் நடந்து சுற்றிப் பார்த்து வர முடியாதாம்! அதற்காக, பார்வையாளர்களை ஒரு கண்ணாடிக் கோபுரத்தில் ஏற்றி, நின்று பார்க்கச் சொல்வார்களாம்!
பல கிலோ மீட்டர் நீளமுள்ள தொழிற்சாலைக்கு ஒரு கன்வேயர் பெல்ட் இருக்குமாம். முதல் இடத்தில் ஒரு தகடு, ஏற்றப்படுமாம். அதற்கடுத்த இடத்தில் ஒரு கருவி அதில் துவாரங்கள் போடுமாம். அடுத்த கட்டத்தில் தகடு வளைக்கப்படுமாம்!
அதற்கடுத்து, அதில் ஒரு கம்பி இணைக்கப்படுமாம். அடுத்தடுத்து ஒவ்வொரு வேலையாக முடித்து, கடைசியில் ஒரு முழு வாகனம், சாயம் பூசப்பட்டு இறங்குமாம். இவை அனைத்தையும் நின்ற இடத்தில் இருந்து பார்க்கலாமாம்!
ஐந்து நிமிடத்திற்கு ஒரு கார் வீதம் வெளியேறுமாம். இதைப் பார்த்துக் கொண்டே நின்ற ஒரு பெண், தன் தலைமுடிக்குள் ஒரு கார் நுழைந்துவிட்டதாக விரலை விட்டு ஒதுக்கிப் பார்த்தாராம்... என்று கனவுக் கதைப் போலச் சொல்வார்கள்.
அந்த மாபெரும் ஆலைதான், மூடப்பட இருக்கிறதாம். லேட்டஸ்ட் நியூஸ் - தெரிஞ்சிக்கோங்க...!
புது தில்லி, ஜூன் 2 : ஜார்க்கண்ட் பழங்குடியினத் தலைவரான கரியா முண்டாவை மக்களவையின் துணைத் தலைவர் பதவிக்குப் பாரதிய ஜனதா கட்சி நிறுத்தியுள்ளது. "மக்களவை துணைத் தலைவர் பதவியைப் பிரதான எதிர்க் கட்சிக்கு வழங்குவது என்ற மரபுப்படி, இந்தப் பதவிக்கு வேட்பாளரை நிறுத்துமாறு பாஜகவை மத்திய அரசு கோரியது. அதனை ஏற்று, பாஜகவின் மத்திய பாராளுமன்றக் குழு, இன்று கூடி விவாதித்தது.
சென்னை, ஜுன் 2 : தமிழ்நாட்டில் 10 லட்சம் மரம் ஏறும் தொழிலாளர்களின் குடும்பங்களில் ஒளி ஏற்ற பனை, தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு நாடார் பேரவை கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு நாடார் பேரவையின் தலைவர் என்.ஆர்.தனபாலன், இது குறித்து ஸ்டாலினுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையில் கூறியிருப்பதாவது :
புதுதில்லி, ஜுன் 2 : 20 ஓவர் போட்டிகளின் வளர்ச்சியால் டெஸ்ட் கிரிக்கெட் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது : 20 ஓவர் போட்டிகள் செல்வாக்கு பெற்று வருகின்றன. எனினும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளே சிறந்தது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட அதிக திறமை தேவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக