வேலை செய்து உடலுக்கும் மனதிற்கும் ஓய்வெடுக்க வேண்டும் என தூங்கினால் தூக்கம் வருகிற நேரம் பார்த்து பக்கத்தில் படுத்திருக்கும் நண்பரின் பேச்சுக்கள் நம்முடைய தூக்கத்தை கெடுத்து விடும் . நாம் தூக்கத்தில் பேசுகிறவராக நம்மால் நம்முடைய நண்பரின் தூக்கம் கேட்டு விடும் . காலை விடிந்ததும் ஏய் மச்சி நேற்று ராத்த்ரி ராஜாவோட பாட்டு கச்சேரி தாண்டா . அவன் பாட்டு கச்சேரியில என்னோட தூக்கம் போச்சுடா . அப்படியே
தமிழகத்தின் துணை முதல்வராக கருணாநிதியின் இளைய மகன் ஸ்டாலின் நியமிக்க பட்டுள்ளார் . இன்னொரு மகன் மற்றும் பேரன் மத்திய மந்திரி ஆகி விட்டார்கள் .இனி கனி மொழி மட்டும் தான் மந்திரி ஆக வேண்டியதில பாக்கி . இருந்தாலும் அவங்க எம்பி ஆகிட்டாங்க . தமிழக முதலமைச்சர் கருணாநிதி தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் ( கருணாநிதி மகன் ) மத்திய ஜவுளி துறை அமைச்சர் தயாநிதி மாறன் ( கருணாநிதியின் பேரன் ) மத்திய உரம்
மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?'' அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: ""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!'' வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக்
ஐக்கிய நாடுகள், ஜுன் 2 : இலங்கையில் நடைபெற்ற போரில் உயிரிழந்த அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாடுகள் சபை குறைத்து மதிப்பிட்டதாக வெளியாகியுள்ள செய்திகளை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் அப்பாவித் தமிழர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோ ர் கொல்லப்பட்டதாக லண்டனில் இருந்து வெளிவரும் "தி டைம்ஸ்' ஆங்கில நாளிதழ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.
சென்னை, ஜுன் 2 : சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு வழங்கும் திட்டம், முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான நாளை முதல் தொடங்கப்படுவதாக மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு : முதலமைச்சர் கருணாநிதி நாளை 86ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அவர் பாடுபட்டு வருகிறார். அதன் அடையாளமாக அவரது பிறந்த தினமான நாளை முதல் சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் மாநகராட்சியின் சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு அளிக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக