புதன், 3 ஜூன், 2009

2009-06-03



More than a Blog Aggregator

by சந்தனமுல்லை


பப்புவின் முதல் கொலாஜ்! பழைய செய்தித்தாட்கள் மற்றும் ஆவி-யையும் எடுத்துக் கொண்டோம். அவளுக்கு பிடித்ததைக் கத்தரிக்குமாறு சொன்னேன். அவளைக்கவர்ந்தது சிடிகள்தான். ஆனால், கத்தரிப்பதற்கு முழுமையான உருண்டை வடிவம் வரவில்லை!பூமியை கத்தரிக்க உதவினேன். அவளாகவே அவளுக்குத் தெரிந்த ஆங்கில எழுத்துகளையும், கைவிரல்கள் படத்தையும் கத்தரித்து ஒட்டினாள். இன்னும் நுணுக்கமாகக் கத்தரிக்க வரவில்லை! இது இரு வாரங்களுக்கு முன் செய்தது!



இப்போதெல்லாம் பப்பு கத்தரிக்கோலை தனியாகக் கையாளுவதைத் தவிர்க்கிறோம். அவளுக்குக் கத்தரிக்க ஆர்வமாக இருக்கிறது, எங்களுக்கு பயமாக இருக்கிறது! :-)

ரஜினி என்றாலே கலைந்த தலைமுடியும், சிகரெட்டை தூக்கிப் போடும் ஸ்டைலும்தான் நினைவுவரும். ஆனால், கடைசி இரு படங்களில் சிகரெட்டை கையாலும் தொடவில்லை ரஜினி. காரணம், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி.

புகையிலைக்கு எதிரான அன்புமணியின் போரில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள். ரஜினி, ஷாருக்கான் போன்ற நடிகர்களிடம், திரைப்படத்தில் புகைப்பிடிப்பது போல் நடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் அன்புமணி. மேலும், சுகாதாரத்துறையின் நெருக்கடியால் புகைப்பிடிக்கும் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்கள் தணிக்கையில் கடும் பிரச்சனைகளை எதிர்கொண்டன.

இந்நிலையில், திரைப்படங்களில் சிகரெட் புகைப்பதில்லை என்று அறிவித்தார் ரஜினி. ஆனாலும், ஷாருக் உட்பட பெரும்பான்மையான திரையுலகினர் அன்புமணியின் கோரிக்கையை ஏற்காததுடன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

புதிய மத்திய அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக பொறுப்பேற்றிருக்கும் குலாம் நபி ஆசாத், ஷாருக் போன்றவர்களின் கருத்தக்கு ஆதரவாக பேசியுள்ளார். திரையில் புகைப்பிடிக்கும் காட்சிகளையும், மது அருந்தும் காட்சிகளையும் தடை செய்வது இயலாத காரியம் என்று திட்டவட்டமாக அறிவித்திருப்பதுடன், சினிமாவில் கொலை, கொள்ளைகளையும் காட்டுகின்றனர். இவற்றை மட்டும் ஏன் தடுக்கவில்லை என புகை, மதுவுக்கு ஆதரவாக கேள்வியும் எழுப்பியுள்ளார்.

மத்திய அமைச்சரின் இந்த ஆதரவு குரலால் மீண்டும் ரஜினி தனது சிகரெட் ஸ்டைலை திரையில் தொடர்வார் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. நம்பிக்கையை காப்பாற்றுவாரா என்பது எந்திரன் வரும்போது தெரிந்துவிடும்.

அஜித்துடன் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் நடிகை மம்தா.

சிவப்பதிகாரத்தில் நடித்த மம்தாவுக்கு சொல்லிக் கொள்ளும்படி தமிழில் வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், அசல் படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க மம்தாவை அணுகியிருக்கிறார் இயக்குனர் சரண்.

அசலில் சமிரா ரெட்டி பிரதான ஹீரோயின். இரண்டாவது ஹீரோயினாக நடிக்கவே மம்தாவை சரண் கேட்டிருக்கிறார். இரண்டாவது ஹீரோயினாக நடிக்க விருப்பமில்லாததால், அஜித்துடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை மம்தா மறுத்திருக்கிறார்.

இந்தத் தகவலை மம்தாவே பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து சரண் தரப்பிலிருந்து இதுவரை எந்த செய்தியும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'உளியின் ஓசை' படத்துக்குப் பிறகு முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகும் புதிய படம் நீ இன்றி நான் இல்லை.

உளியின் ஓசை படத்தைத் தயாரித்த நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் ஆறுமுகநேரி முருகேசனே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

உதய்கிரண் நாயகனாகவும் மீராஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்துக்கு தேவா இசையமைக்கிறார். வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி எழுதிய 'சுருளி மலை' கதைதான் சில மாறுதல்களுடன் 'நீ இன்றி நான் இல்லை' என்ற படமாக உருவாகிறது.

அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுத, பி கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இளவேனில் இயக்குகிறார்.

அடுத்தமாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னைப் பக்கம் எட்டிப் பார்த்துள்ளார் அசின்.

கமல்ஹாசன் நடிக்கும் '19 ஸ்டெப்ஸ்' படத்தில் நடிப்பதற்காக அவர் சென்னைக்கு வந்துள்ளார்.

குறுகிய காலத்தில் தமிழின் நம்பர் ஒன் நாயகியாக உயர்ந்தவர் அசின். ஆனால் அவருக்கு இந்தியில் அமீர்கானுடன் கஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு வர, இந்த 'நம்பர் ஒன்னை'த் தூக்கி பரணில் போட்டுவிட்டு மும்பைக்கு பறந்தார்.

கஜினி ஓடிய ஓட்டம், அவரை நிரந்தரமாக பாலிவுட்டிலேயே இருத்தி விட்டது. இப்போது மும்பையின் முக்கிய பகுதியில் பெரிய பங்களா வாங்கி செட்டிலாகிவிட்டார் அசின். கைவசம் 3 பெரிய இந்தி புராஜக்ட்டுகள்.

அவர் கஜினியில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஒப்பந்தமான கமல் நடிக்கும் '19 ஸ்டெப்ஸ்' படம். ஜப்பானின் தாடனோ அஸனோ நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகத்தான் அசின் நடிக்கிறார். கமல் இதில் கிட்டத்தட்ட கெளரவ வேடத்தில் நடிக்கிறார் என்பதே பொருந்தும்.

இந்தப் படத்தில் களறிச் சண்டை வீராங்கணையாக நடிக்கும் அசின், படத்துக்காக வெகு சிரமப்பட்டு அந்தக் கலையைக் கற்றுக் கொண்டாராம். படப்பிடிப்புக்காக சென்னை வந்தவர், தன் பழைய நண்பர்களிடம் நீண்டநேரம் ஜாலியாகப் பேசி மகிழ்ந்தாராம்.

முருகதாஸின் அடுத்த படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் அசின் என்பது கூடுதல் தகவல்.

கருத்துகள் இல்லை: