புதன், 3 ஜூன், 2009

2009-06-03

பதிவர்களே தேவையில்லாத விவாதங்களைத் தவிர்த்து எம் உறவுகளின் உயிர்காத்திட உதவிடுங்கள். உங்களால் முடிந்தவரை வவுனியா மெனிக்பாம் எனப்படும் சித்திரவதைக்கூடத்தில் தினந்தினம் அழிந்துகொண்டிருக்கும் மக்களுக்காக குரல் கொடுங்கள்.போரால் மட்டுமே சிறிலங்காவில் தமிழ்மக்கள் அழியவில்லை இன்றும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். சிங்களவனின் இனவழிப்பத்தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழக மக்களே தேர்தலுக்கு ஈழத்தமிழன் வேணும் அதுக்குப்பிறகு நீசெத்தாலென்ன அழிந்தால் நமக்கென்ன என்று கை விட்டு விடாதீர்கள். உங்களின் ஆத்மார்ந்த ஆதரவே எம்மைத்தூக்கி நிறுத்தும்.

இளைஞர்களே சொந்தங்களின் அலறல் கேட்டு தாளாமல் தம்முயிர் உருக்கினானே அந்த முத்துக்குமார் அவனேற்றிய தீச்சுடர் அணைந்துவிட்டதா????????
---------------------------------------------------------------------------------------------------
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள மெனிக்பாம் முகாமில் வாழும் 3இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப்பற்றி எவருமே அக்கறைப்படுவதில்லை.

அந்த முகாமில் தினமும் 10க்கும் மேற்பட்டவர்கள் பசியினாலும் நோயினாலும் உரியசிகிச்சைகள் இன்றியும் மரணித்து வருவதாக முகாமிலுள்ள உறவினர் ஒரவர் தெரிவித்தார்.

இவ்வாறு மரணமடைபவர்களின் இறுதிச்சடங்குகளைக்கூட செய்யமுடியாத வகையில் பாதுகாப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாம்.

தமிழனின் உயிர் அவ்வளவு கேவலமாக போய்விட்டது எனவும் அவர் விம்மி வெடித்தார்.


இதனிடையே முகாம்களில் உள்ள இளைஞர்களை துணை இராணுவப் படையினர் அங்கிருந்து அகற்றி கொண்டு செல்வதாகவும் இளம் பெண்களை பிரித்து பாலியல் ரீதியாக பயன்படுத்த கடத்திச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

இறுதியாக ஜக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான இணைப்புக்காரியாலயம் விடுத்த அறிக்கையில்:இலங்கையின் வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து சுமார் 13 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேநேரம் இளைஞர்களும் யுவதிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிலையத்தின் தகவல்படி வன்னியில் இருந்து 276 ஆயிரத்து 785 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஆனால் இந்தக் கணக்கெடுப்பு தகவல் வெளியிடுவதற்கு சில தினங்களுக்கு முன் .நா. மன்றம் வெளியிட்ட கணக்கெடுப்பு விபரத்தின்படி 13 ஆயிரத்து 130 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இடம்பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து இளைஞர்களும் யுவதிகளும் கடத்திச் செல்லப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலானோர் காணாமல் போயுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழராய் நாம் என்ன செய்யப்பொகிறோம்?


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு (பெரிய அளவு) - 2
சர்க்கரை - 1 அல்லது ஒன்றரை கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
பாதாம் எஸ்ஸென்ஸ் - ஓரிரு துளிகள்
மஞ்சள் அல்லது கேசரி கலர் - ஓரிரு துளிகள்

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, தோலுரித்து விட்டு மசித்துக் கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்குடன் சர்க்கரையைச் சேர்த்து, மிதமான தீயில் வைத்துக் கிளறவும். முதலில் சர்க்கரை உருகி, கலவைத் தளர்ந்து பின் கெட்டியாக ஆரம்பிக்கும். இப்பொழுது கலரைச் சேர்த்து, நெய்யை சிறிது சிறிதாக விட்டு நன்றாகக் கிளறவும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரைக் கிளறி, கீழே இறக்கி வைக்குமுன், ஏலக்காய்த்தூள், எஸ்ஸென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை வேகமாகக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வைக்கவும்.
இந்த விடையில் எமது நிலை என்பது தெளிவானதும், வெளிப்படையானதுமாகும். தமிழ் மக்களுக்கு வெளியில், எமக்கு என்று தனியான சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஆனால் இதை புரியாத மாதிரி குழப்புவதில் தான், பிற்போக்கு சக்திகளின் சொந்த வர்க்க அரசியலே அடங்கிக் கிடக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக, பொதுவாக இரண்டு வழிகள் தமிழர் தரப்பில் வைக்கப்படுகின்றது. இவ்விரண்டும் மக்களின் சொந்த நிலைப்பாட்டுக்கே எதிரானவை. இப்படி

1.புலிகளால் புலித் தமிழீழம் வைக்கப்படுகின்றது.

2. புலியெதிர்ப்பு அணியால் புலியொழிப்பு வைக்கப்படுகின்றது.

இப்படி ஆதிக்கம் பெற்ற இந்த இரண்டு அரசியல் போக்கும், தத்தம் இந்த வழிகள் மூலமே, தமிழ் மக்களின் பிரச்சனையை தாம் தீர்க்க முடியும் என்கின்றனர்.

சரி தமிழ் ம..........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/


1990 க்கு முன்னாலான இளையராஜாவின் இசைக்கும் தற்போதைய இளையராஜாவின் இசைக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.. இத்தனைக்கும் நான் அதி தீவிர இளையராஜா ரசிகன். இப்போதும் என்னுடைய தனிமை பொழுதுகள் பழையராஜாவின் பாடலுடன்தான் கழிகிறது..அதனை கேட்கும் போது தெறிக்கும் உணர்வுகள், ஊசாலாடும் நினைவுகளை வடிக்க வார்த்தைகளை தேடி தோற்று போய்விடடேன். அதிலும் முக்கியமாக 80களில் வந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் அந்தந்த பாடலின் காட்சிகளே மனதிரையில் ஓட ஆரம்பிக்கும். இத்தனைக்கும் பல படங்கள் நான் பார்த்ததே இல்லை. பாடல் காட்சிகள் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அந்த பாடலின் வரிகளில் அந்தந்த சூழ்நிலையை அழகாக விளக்கியிருப்பார்கள். அதுவும் ஒரு முக்கிய காரணம்.



அவர் சிம்பொனி அமைத்தாரா..தலைகனம் பிடித்தவரா என்பது பற்றியெல்லாம் அவரை சுற்றி உள்ளவர்களுக்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால் என் போன்றவர்களுக்கு அவரை பற்றி தெரிந்ததைவிட அவரின் இசையை பற்றிதான் அதிகம் தெரியும். அவர் எப்படிபட்ட குணத்தை கொண்டவர் என்பது பற்றிய கவலை எங்களுக்கு இல்லை.. என்னை பொறுத்த வரை எனக்கு எந்த இசையை பிடிகிறதோ அதை கேட்பேன். அது எந்த இசையமைப்பாளர் அமைத்தது என்றெல்லாம் வரையறையெல்லாம் எனக்கு கிடையாது. எனக்கு பிடித்திருக்கணும் அவ்வளவுதான்..

அந்த வகையில் பார்த்தால் இளையராஜாவின் பழைய பாடல்களில் உள்ள கம்பீரம் அவரின் சமீபத்திய பாடல்களில் இல்லையென்றுதான் தோன்றுகிறது. அவரின் சமீபத்திய பாடல்கள் சில கேட்கும் போது மனதை கவர்ந்தாலும் தொடர்ந்து என்னால் கேட்க முடியவில்லை. அது ஏன் என்று அலசும் அளவிற்கு எனக்கு இசை ரசனை இல்லாததால். என்க்கு பிடித்த பாடல்களை மட்டும் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கிறேன். அதில் ரஹ்மான், யுவன், வித்யாசாகர், ஹாரீஸ் என பல பேர் வந்தாலும் இன்னும் பழையராஜாதான் என்னை ரசிக்க வைக்கிறார். இளையராஜா .! பழையராஜாவை மீட்டெடுங்கள்.

தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு (பெரிய அளவு) - 2
சர்க்கரை - 1 அல்லது ஒன்றரை கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
பாதாம் எஸ்ஸென்ஸ் - ஓரிரு துளிகள்
மஞ்சள் அல்லது கேசரி கலர் - ஓரிரு துளிகள்

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, தோலுரித்து விட்டு மசித்துக் கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்குடன் சர்க்கரையைச் சேர்த்து, மிதமான தீயில் வைத்துக் கிளறவும். முதலில் சர்க்கரை உருகி, கலவைத் தளர்ந்து பின் கெட்டியாக ஆரம்பிக்கும். இப்பொழுது கலரைச் சேர்த்து, நெய்யை சிறிது சிறிதாக விட்டு நன்றாகக் கிளறவும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரைக் கிளறி, கீழே இறக்கி வைக்குமுன், ஏலக்காய்த்தூள், எஸ்ஸென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை வேகமாகக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வைக்கவும்.

கருத்துகள் இல்லை: