கரண்டு எப்போ போவும்..........?
--------------------------------
என் வீட்டுக் கூடத்துல
என்னென்னெவோ நடக்குது
நட்ட நடுவீடு இப்போ
நாசமாகிப்போய்க் கெடக்குது
"விடிஞ்சும் விடியாதப்பவே ஒருத்தன்
விபூதித் தட்டோட வாறான்!
கடவுளே இல்லேன்னு அடுத்தவன்
கத்திக்கிட்டே போறான்!!
மாமியாரும் மருமகளும்
மோதிக்கிட்டே இருக்காங்க !
மருமகனும் மச்சினரும்
மொறச்சிக்கிட்டேத் திறியறாங்க !!
வரதட்சணயக் கேட்டு
வந்தவள உருட்டுறாங்க !
வந்த எடத்துல பெரியவங்கள
வாய்க்குவந்தபடி மெரட்டுறாங்க !!
பெருசுகள சத்தமில்லாம வெளியேத்த
பெருசா பாதபோட்டுத் தாராங்க !
சொத்த மொத்தமா சேத்துப்புடுங்க
திட்டம் போட்டுப் போறாங்க !!
அரகொறயா சுத்துறானுங்க !
அவுத்துப்போட்டு அளைறாளுங்க !!
நாலுபேரா சேந்து புகைப்பிடிக்காங்க !!!
நடுவீட்டுல வந்து தண்ணியடிக்காங்க !!!!
களவாணிபயலுவ ஒண்ணா சேந்து
கொள்ளை அடிக்க வாறான் !
கொலைகாரன் பயமே இல்லாம
கொன்னு போட்டுட்டு போறான் !!
வாய மூடியேப் பேசச் சொல்லுதான் !
வார்த்தய சாச்சி எழுதச் சொல்லுதான் !!
செங்கலவச்சு சாதகமும் சொல்லுதான் !!!
செவப்புக்கல்லு பாதகமுன்னு சொல்லுதான்!!!!"
கண்டவங்களயும் பாத்துக்கிட்டே
கஞ்சி தண்ணிக்கூட தரமாட்டாங்க
டீவிப்பொட்டி அதுவா அணஞ்சாத்தான்
பாவி என்னயக்கொஞ்சமாவது கவனிப்பாங்க
திண்ணயில இருக்கிற எனக்கு
தெனமும் இதே ரோதணைதான்
கரண்டு எப்போ போகுமுன்னு
கடவுள வேண்டிக்கிட்டே இருப்பேன்
அந்த நூத்திசொச்ச நிமிசம்
அதுதான் எனக்கிங்கே சொருக்கம் !
" 'ஏஞ்சாமி' உங்கிட்டதான்
எனக்காக அந்த வரம் கேக்கேன் !
சொருக்கம் ரெண்டுமொற வந்துபோக
சுறுக்கா ஒருவழி செய்ய மாட்டீயா ?"
இந்த வருட கோடை விடுமுறை ரொம்ப நல்லா இருந்துது..ரெண்டு வாரம் முன்னாடி ஊட்டி, முதுமலை , இப்ப மும்பை, புனே செம ஆட்டம்தான்..
10 நாள் முன்னாடி ஒரு ஞாயிறு அன்று காலையில் மும்பை, தரை தொட்டதும் வெயில் பட்டையை கிளப்பியது... என் நெருங்கிய உறவினர் பிரபா தேவி பகுதியில் இருகாங்க..18 வது மடியில் இருந்து பார்த்த மும்பை ரொம்ப அழகு. வீட்டில் எந்த ரூம் ஜன்னலில் இருந்து பார்த்தாலும் பீச் தெரியுது.. என்னுடன் அழைத்து சென்ற ராமின் பாட்டியை ( 85 வயது) அங்க விட்டுட்டு நானும் குழந்தைகளும் விடு ஜூட்...
இந்தியா கேட், மரைன் டிரைவ், பிஷ் aquariam ( ரொம்ப பழசு) எலீபண்ட கேவ், ஜுஹு, இன்னும் நெறைய ஷாப்பிங் மால், பார்க்க அலுக்கவே இல்லை... அப்பறம் மும்பை டு புனே எக்ஸ்பிரஸ் வே, செம ரோடு, மலைகளுக்கு நடுவில் ரொம்ப அழகு.. புனாவில் இருந்து கொஞ்ச தூரம் யவத் என்னும் ஊர், அங்கே என் கசின் இருக்கா, 4 நாள் அங்க, எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த மும்பை - புனே ரோடும், லோனவலா வில் சாப்பிட்ட வடா பாவும் தான்..
இதில் குறிப்பிட்டு சொல்லும் விஷயம் நம்ம ஊர் air போர்ட், நெஜமாவே நல்லா சர்வீஸ் பண்றாங்க. வயதான பாட்டியை எங்கும் நடக்க விடாமல் அவங்களே வீல் சேரில் பல்லக்கு மாதிரி தூக்கிட்டு போறாங்க. . பரவாயில்லை, முதல் முதலாக விமானத்தில் செல்லும் பாட்டியை என் குட்டிஸ் ரொம்ப நல்லா பாத்துகிட்டாங்க...
மும்பை வந்து, பாட்டியை பிக்கப் பண்ணி கோயமுத்தூர் தரை இறங்கியதும் பாட்டு கேட்டது...சொர்க்கமே என்றாலும் அது நம்மொரு போல வருமா....
வறண்ட கூந்தல் உள்ளவர்கள்:
உங்கள் கூந்தல் பொலிவில்லாமல் வறண்டுயிருந்தால் அதர்க்கு ஒரு முட்டையின் வெள்ளை கரு ஒரு கரண்டி நல்லெண்ணெய் இரண்டையும் ஒன்றாக கலக்கி தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும்.
1 மணி நேரம் கழித்து சீகைக்காய் அல்லது ஷாப்பு போட்டு அலசவும் இப்படி செய்தால் கூந்தல் சாப்ட்டாகி விடும்.
பொலிவில்லாத கூந்தலை சரிசெய்ய।
முன்பேல்லாம் பள்ளி விடுமுறை ஆனாலே கிராமத்தில் சாதம் வடித்த கஞ்சியினை தலைக்கு தேய்த்து நல்ல ஊறிய பின்பு தலைக்கு தேய்த்து குளிப்பாங்க. ஆனால் இப்ப அதுக்கு நேரமே இல்லை. ஆகையால் முடிந்தால் மாதத்துக்கு இரண்டு முறை இப்படி செய்தால் உங்கள் கூந்தல் பட்டு போல் பளபளக்கும்.
எண்ணெய் வழியும் கூந்தலுக்கு:
சிறிது தண்ணீரில் டீ தூள் போட்டு காய்ச்சி அதனை வடிக்கட்டி அந்த டிகாஷனுடன் எலுமிச்சை சாறு கலந்து தண்ணீரில் தலைமுடியினை அலசினால் எண்ணெய் வழியும் கூந்தல் கட்டுப்படும்.
தலைமுடி நன்றாக வளர:
பச்சை கருவேப்பிலை, 1/4 கப் தேங்காய்ப்பால் இரண்டையும் நன்றாக அரைத்து தலையில் பேக் போடவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் போடவும். நன்றாக கருகருனு கூந்தல் வளரும்.
எந்த வகையான கூந்தலாக இருந்தாலும் ஒரே வகையான ஆயில், சீயக்காய் மற்றும் ஷாம்பூவை பயன்படுத்தவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக