'ராஜாதி ராஜ! ராஜ மார்த்தாண்ட! ராஜகம்பீர! மக்குநாட்டு மன்னர் மணிப்பயலார் வருகிறார்! பராக்! பராக்! பான் பராக்!'
குத்தீட்டியை செங்குத்தாக பிடித்தபடி அமைச்சரவையின் வாயிலில் நின்ற காவலாளி அடி வயிற்றிலிருந்து அலறினான்.
மன்னர் மணிபயலார் கம்பீரமாக நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
'மந்திரி குண்டுசவுரியாரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?'
'மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ தெரியாது மன்னா. ஆனால் மக்கள் உங்கள் மீது வசைமாரி பொழிகின்றனர்'
'நீர் என்ன சொல்கிறீர் அமைச்சரே?'
'ஆம் மன்னா! நான் நகரில் வலம் வந்துகொண்டிருந்தபோது நாய்கள் துரத்தியதால் ஒரு குடிசை வீட்டின் ஓரமாக ஒளிந்துகொண்டிருந்தபோது ஒட்டுகேட்டேன். நாட்டில் மழைபொழிகிறதா இல்லையா என்பது கூட தெரியாமல் மன்னர் என்ன அரண்மனையில் அமர்ந்து கொண்டு மகாராணியாருக்கு மாவு ஆட்டி கொடுத்து கொண்டு இருக்கிறாரா? என்று குடிசைக்குள் குந்தி இருந்த சிலர் தங்களை ஏளனமாக எள்ளி நகையாடினர் மன்னா.'
'மக்களை விட்டுதொலையும் மந்திரியாரே! அவர்கள் எக்கேடோ கெட்டு ஒழியட்டும் விடு. அந்தப்புரத்தில் அழகிகள் அனைவரும் நலம்தானே?'
'மன்னர் மன்னா! தாங்கள் அரண்மனையின் அறைகளில் ஒட்டடை அடிப்பது, மகாராணியாரின் காலணியில் மண்ணை துடைப்பது போன்ற சொந்த வேலைகள் செய்து சோர்வடைந்து போவதால் அந்தப்புரம் சென்று ஆண்டுகள் பல ஆகிவிட்டது. அங்கே அந்தப்புரத்து அழகிகள் எல்லாம் அதரப்பழசான கிழவிகள் ஆகிவிட்டனர். உறைக்குள்ளேயே கிடந்து துருப்பிடித்த தங்களது உடைவாள் போல அறைக்குள்ளேயே அடைந்துகிடந்து நரைபிடித்த தலையுடன் நடமாடுகிறார்கள் மன்னா. பேரன் பேத்திகளை கொஞ்ச வேண்டிய வயதில் ஃபேரன் லவ்லி எனும் ஒரு பசையை முகத்தில் பூசிக்கொண்டு கேரம் விளையாடி நேரம் போக்குகின்றனர்.கட்டையில் போக வேண்டிய வயதில் மட்டைப்பந்து விளையாடி கொட்டமடிக்கின்றனர். முகடுகள் போல் கூன்விழுந்த முதுகுடன் இருந்துகொண்டு உதடுகளில் சாயம் பூசி உலா வருகின்றனர் மன்னா.'
'அப்படியா? வியப்பாக உள்ளதே! அப்படியானால் அவர்கள் அனைவரையும் விருப்ப ஓய்வு திட்டத்தின்கீழ் வீட்டிற்கு அனுப்பிவிடு. போக மறுத்து அடம்பிடிக்கும் பொக்கைவாய் கிழவிகளை அப்படியே அலாக்காக அலுங்காமல் தூக்கிக்கொண்டுபோய் இடுகாட்டில் குழிதோண்டி இன்றே புதைத்துவிடு.'
அப்போது பக்கத்து நாட்டிற்கு உளவு பார்க்க சென்ற ஒற்றன் உளறுவாயன் தலைதெறிக்க ஓடி வருகிறான்
'மன்னா! ஆபத்து! ஆபத்து!!'
----தொடரும்-----

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனுக்கு போட்டியா நோக்கியா விரைவில் அறிமுகப்படுத்தபோகும் புதிய போன் நோக்கியா ண௯௭. இது ஒரு என்-சீரிஸ் வகையை சேர்ந்ததாகும். உலகம் முழுவதும் உள்ள செல்போன் பிரியர்களால் பரவலாக எதிர்பார்க்கப்படும் இந்த போன் இந்த மாதவாக்கில் அறிமுகப்படுத்த திட்ட மிட்டுள்ளது நோக்கியா நிறுவனம். இதுவரை நோக்கியா அறிமுகப்படுத்திய எந்த போனுக்கும் இல்ல ஒரு விளம்பர யுக்தியை நோக்கியா நிறுவனம் முதல் முறையாக இந்த போனுக்கு செய்யப்போகிறது.
ஆமாம், நீங்கள் உங்கள் வீட்டிலோ,அல்லது அலுவலகத்திலோ N97 மாடலை பயன்படுத்திப்பார்க்கலாம்.அதுவும் இந்த மாடல் மார்க்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்பாகவே இந்த வாய்ப்பு உங்களுக்கு தரப்படுகிறது.
இதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
கீழே உள்ள "லிங்கை" கிளிக் செய்து கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை கொடுத்தால் போதும்.
http://www.nokialms.com/N97/
N97 - ன் முன்னோட்டம் உங்கள் வீடு தேடி வரும்.
காதல்,காதல், காதல் போயின் சாதல் என்றார் பாரதி. காதலிக்காதவர்கள் எல்லாம் இந்த உலகத்தை ஒரு கண்ணால் மட்டும் பார்த்தவர்கள் என்றார் வைரமுத்து. வைரமும், முத்துவும் சேர்ந்து காதல் காந்தமாய் கவர்கின்றன 'மாஸ்கோவின் காவேரி' படத்தில் வைரமுத்துவின் பாடல வரிகள்.
வைரமுத்துவின் கவிதைகளுக்கு பின்னணி இசைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் தமன் ('பாய்ஸ்'ஸில் ஒருவராக நடித்தவர்).
மேற்கு ரஷ்யாவில் பாயும், பனி படர்ந்த மாஸ்கோ நதிக்கும், குடகு மலை காவேரிக்கும் என்ன தொடர்பு? அமைதியான மாஸ்கோ நதி போன்ற குணமும், ஆரவாரமான காவிரியின் குணமும் கொண்ட காதலர்கள் ஒன்று சேரும் கதை என்கிறார் தனது முதல் படத்தை இயககும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.
வேட்டையாடு விளையாடு இவரது ஒளி வண்ணதிர்கொர் உதாரணம்.
அழகான முரண்பாடு உள்ள காதலர்கள். அதிகாலை பூக்கள் மீது விளையாடும் மழைத்துளிகளை விரும்பும் நாயகி. மே மாத அக்னி வெய்யிலில், கடற்கரையில் விளையாடும் அலைகளை விரும்பும் நாயகன். அவளுக்கு ஜெயகாந்தன் கதைகளில் விருப்பம். இவனுக்கு வைரமுத்து கவிதைகளில் விருப்பம். வர்தனி தமன், சங்கர் மகாதேவன் பாடி இருக்கும் "அதிகாலை பூக்கள் மேலே " என்ற பாடல் படத்தின் ஒட்டுமொத்த கதையை உள்ளடக்கிய கவிதை.
காதலின் முரண்பாடுகள் போலி என்ற கான்செப்டில் "ஆணும், பெண்ணும் இல்லை என்றால்" மாலதி மற்றும் பிரியா பாடிஇருக்கும் பாடல.
காதலுக்கு கண்ணில்லை என்பது காதல் தேசத்து பழமொழி.
நீ ஒன்றும் அழகி இல்லை
ஆனால் எனக்கு
உன்னைப்போல்
இன்னொருத்தி அழகில்லை.
என தொடங்கும் பாடலை நவினும், ராகுல் நம்பியாரும் பாடிஇருக்கிறார்கள்.
கண்ணதாசனுக்கு தத்துவம் என்றால் வைரமுத்துவுக்கு கிராமியம்.
தான் மரணமடிந்தால், சொந்த கிராமத்தில் கல்லறை கட்டடா என மகனுக்கு கவிதை எழுதி வைத்திருக்கும் வைரமுத்து, பிறப்பும் இறப்பும் கிராமத்தில் நடக்க வேண்டும் என்ற ஆசையை "கிராமம் தேடி வாடா மச்சான்" பாடலின் மூலம் சொல்லி, மாட்டுமணி சத்தம் கேட்கவும், நல்ல காத்து வாங்குவதற்கும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுகிறார். பாடலை பாடிஇருப்போர் திப்பு, ரஞ்சித், ரிட்டா.
வெரைட்டியான இசையும் தரமுடியும் என தமன் உணர்த்தும் பாடல்.
கார்த்திக், சுசித்ரா பாடிஇருக்கும் கோரே பாடல மற்றும் சுசித்ரா,நரேஷ் அய்யர் பாடிவுள்ள தேன் முத்தம் போன்ற பாடல்கள் காலர் டோன்களுக்கான டூயட். கார் ஸ்பீகர்களுக்கான இசை கலெக்க்ஷன்.
விற்கிற விலைவாசியில், காதல் பரிசாக இனி பூக்களுக்கு பதிலாக "மாஸ்கோவின் காவேரி" போன்ற படங்களின் ஆடியோ சிடிக்களை தரலாம்.
- இன்பா
அருகாமையில் இருக்கும் நபர்களிடம் நட்பு பாராட்டாமல் அதென்ன ஆர்குட், வலைதளங்கள் என்று நட்பை தேடுவது என்று கேட்கிறார் செல்வேந்திரன். உண்மை தான். பல சமயங்களில் நமக்கென்று ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டு சுற்றியிருப்பவர்களை மறந்துவிடுகிறோம். இருக்கும் இடத்தை விட்டு நம்மை தனிமைப்படுத்திக் கொள்கிறோம். அது எத்தனை கொடுமையானது என்று யோசித்து பார்க்கையில் விளங்கியது. சுற்றத்தை மறந்து, அதோடு ஒன்றி வாழாமல் இருக்கும் வாழ்க்கையில் என்ன இருந்துவிடப் போகிறது
ஆனால் இந்த இணைய நட்புகள் எல்லாமே அபத்தம், வெட்டி வேலை என்பது போன்ற ஒரு தோற்றம் செல்வாவின் கருத்துகளை மேலோட்டமாக பார்க்கையில் தோன்றலாம். இக்கருத்துக்கு எப்போதுமே எனக்கு முரண்படுவதுண்டு. உயிருக்குயிரான நண்பனாகவே இருந்தாலும் ரசனைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ரசனைகளில் நீங்களும் உங்கள் நண்பரும் இரு வேறு துருவங்களாய் இருக்கலாம். இலக்கியத்தேடல் அதிகமாய் உங்களுக்கு தினத்தந்தியின் சிந்துபாத் தான் அதிகபட்ச இலக்கியம் என்று நம்பிக்கொண்டிருப்பவர் நண்பனாக அமைந்தால்?
உங்களுக்கு முடியலத்துவத்தை எழுத ஆனந்த விகடனில் இடம் ஒதுக்குகிறார்கள். கவிதை எழுதினால் படிக்க தான் மட்டுமே இருக்கும் சூழலுடையவர்கள் என்ன செய்வார்கள்? தமிழ் என்று ஒரு மொழி இருப்பது கூட அறியாவதர்கள் மத்தியில் உங்கள் மொழியை மறக்காமல் இருக்க என்ன வழியிருக்கிறது? ஒத்தக் கருத்துடைய நண்பர்களை இனங்காண, ரசனைகளை பகிர்ந்துக்கொள்ள இணையம் ஒரு நல்ல இணைப்பாக இருந்தே வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை
செல்வேந்திரன் கலந்து கொண்ட நீயா நானா நிகழ்ச்சியின் காணொளி
இந்த இணையமும் வலைப்பூக்களும் அதில் வரும் நட்புகளும் இல்லாமல் போயிருந்தால் பதிவின் தலைப்பை தான் நான் சொல்ல வேண்டியிருந்திருக்கும். ஆனால் இப்போது என் நண்பர் தொலைகாட்சியில் தோன்றுகிறார் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ள முடிகிறது
குட்டிச்சாத்தான்(குளத்தான்)க்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறுவது போல் "எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது." என்பதால், இதை வென்று விட முடியாது. வெல்வதற்கும், எதிரியை தோற்கடிப்பதற்கும் சில அரசியல் நிபந்தனைகள் ............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
நேத்து, என்னுடைய semester results வந்தது. நல்ல தேர்ச்சி. இத்தனை ஆண்டு கல்லூரியில் வாழ்க்கையில் இந்த தடவ தான் கணக்கு(statistics) பாடத்தில் A-வாங்கியுள்ளேன். ரொம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருந்துச்சு! மற்ற பாடங்களில் B+,B+, B
fail ஆகிவிடுவேன் என்று நினைத்த complex analysis பாடத்தில் B+!
அப்பரம் என்ன, கொண்டாட்டம் தான்! அதுவும் தண்ணில!
ஐயோ சாமி...தப்பா நினைச்சுடாதீங்க...தண்ணின்னா...அக்காவுடனும் தோழிகளுடனும் swimming போனோம்னு சொல்ல வந்தேன்:)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக