செவ்வாய், 2 ஜூன், 2009

2009-06-02

நேத்து, என்னுடைய semester results வந்தது. நல்ல தேர்ச்சி. இத்தனை ஆண்டு கல்லூரியில் வாழ்க்கையில் இந்த தடவ தான் கணக்கு(statistics) பாடத்தில் A-வாங்கியுள்ளேன். ரொம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருந்துச்சு! மற்ற பாடங்களில் B+,B+, B

fail ஆகிவிடுவேன் என்று நினைத்த complex analysis பாடத்தில் B+!

அப்பரம் என்ன, கொண்டாட்டம் தான்! அதுவும் தண்ணில!

ஐயோ சாமி...தப்பா நினைச்சுடாதீங்க...தண்ணின்னா...அக்காவுடனும் தோழிகளுடனும் swimming போனோம்னு சொல்ல வந்தேன்:)
1984ல் வெளியான, "அன்புள்ள ரஜினிகாந்த்"முதன் முதலில் நடிகரின் பெயரையே படத்திற்கு தலைப்பாக வைத்த பெருமையை,கொண்ட படம்.

ஒரு ஆங்கில படத்தின் கதைக்கரு,கெஸ்ட் ரோலில் நடிக்க முத்லில் அப்ரோச் செய்யப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர் அரசாங்க அலுவல் காரணமாக,நடிக்க மறுத்துவிட,டைரக்டர் கே.நட்ராஜ் தேர்வு செய்தது நெருங்கிய நண்பரான, ரஜினியை!

Photo Sharing and Video Hosting at Photobucket

பெற்றோரின் அரவணைப்பை அறியாத சிறுமி பெரும்பாலும் அனைவரையும் வெறுக்கும் கேரக்டர்,அங்கு நடைபெறும் விழாவிற்கு வரும் ரஜினியை காண ஆர்வமின்றி வெறுப்புடன் இருக்கும் சிறுமி பின்னர் அந்த ரஜினியை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொள்வார் பின்னர்பிறிதொரு சமயத்தில் ரஜினியின் "அன்னை ஒர் ஆலயம்" திரைப்படத்தை காணும் போது அதில் வரும் சம்பவங்கள், ரஜினியின் மீது அளவு கடந்த ப்ரியத்தை உண்டாக்கும்,(அ.ஒ.ஆ போன்ற ரஜினியின் படங்கள் இளம் வயதினரை ஈர்க்க ஆரம்பித்ததால்தான் அவருக்கு சேர்ந்த இம்மாம் பெரிய கூட்டமுன்னுகூட சொல்லலாம்)

இக்காட்சிகள் மட்டுமின்றி, இத்திரைப்படத்தில் பல காட்சிகள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்திருந்ததும், இப்படத்தின் வெற்றிக்கு காரணம்! ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் ஒரு சிறுவனை வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு தம்பதி தத்தெடுத்து செல்ல முற்படும், போது அந்த சிறுவன் மெல்ல தயங்கியபடியே, தன் நண்பர்களுக்கு விடை கொடுத்து செல்லும் காட்சியில், படத்தினை பார்த்தவர்கள் கண்டிப்பாக கண்கலங்கியிருப்பார்கள்!

பாடல்களில் கூட கதைக்கேற்ப ஒருவித சோகம் இழையோடும்.

லதா ரஜினிகாந்தின் குரலில் கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே...!

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்

தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை!
அன்பு எனும் நூலில் ஆக்கிய மாலை!

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா!
ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா!

ஜீவன் யாரும் ஒன்று, இங்கு யாரும் சொந்தமே
இதுதான் இயற்கை தந்த பாச பந்தமே!


கடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே!

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை!
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை!

ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்..
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர் பிறப்பில்...


உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வம!
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்!


கடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்

தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை!




ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ஒரு சிறு உதவியாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை பலரது மனதிலும் விதைத்த பாடல் என்றால் அது மிகையல்ல!




ராகதேவன் இளையராஜாவின் இனிய பிறந்த நாளில், வணங்கி அவர் இசையில் மகிழ்கிறோம்!


More than a Blog Aggregator

by ஆதிமூலகிருஷ்ணன்

புராணக்காலங்கள் தொட்டு பின்வந்த காலங்களிலும் தொடர்ந்து இன்று வரை ஆண்கள்தாம் பெண்கள் மீதான தம் காதலைப் போட்டு பிழிந்து சொட்டி வர்ணனைகளையும், ஏக்கங்களையும், புலம்பல்களையும் கவிதைகளாக்கி வைத்துப்போயிருக்கின்றார்கள், வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப்பெண்களுக்கு எழுதுகிற அளவுக்கு சரக்கு அவ்வளவாகப் போறாதா? அல்லது அவர்கள் கொண்ட காதலின் லட்சணமே அவ்வளவுதானா என்பதெல்லாம் பட்டிமன்றம் வைத்து கண்டுபிடிக்கவேண்டிய விஷயம். நாம் இப்போது சொல்லவருவது அதுவல்ல, வேறு.

இப்படியாக உலக சூழல் இருந்தாலும் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சமே கொஞ்சமாக சில பெண்கள் போனால் போகிறது என்பது போல காதலைப் புலம்பி வைத்திருக்கிறார்கள்/புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அரிதான விஷயம்தானே நமக்கு அற்புதமாகப் படுகிறது.. எனக்கும்தான், இந்த ஆண்கள், 'தேவதைக்கதை கேட்டபோதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை.. நேரில் உன்னையே கண்டபின்னர்தான் நம்பிவிட்டேன்.. மறுக்கவில்லை..' என்று என்னதான் நாற்பது வரிகளில் போட்டு பிழிந்தாலும் பெண்களின் 'ரகசிய சிநேகிதனே..' ஒரே வரி வீழ்த்திவிடுகிறது நம்மை.

தலைவி தலைவனை நினைத்து ஏங்குவதாய் அமைந்த பாடல்கள், கவிதைகள் நான் மிக ரசிக்கும் ஒரு விஷயமாகும். தேடித்தேடி ரசிப்பதுண்டு.

என்னதான் சோகமான பாடலாக இருந்தாலும் 'என்னப்பாத்து எப்பிடிடா இப்படி கேக்கலாம்.?' என்ற கோபம் தெறிக்கும் காதல் 'சொன்னது நீதானா.. சொல்..' ஒற்றை அன்றிலின் குரலாய் ஒலிக்கும், 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே..' தூக்கமில்லாத இரவுகளைக் கடந்துகொண்டிருப்பவளின் 'ஊருசனம் தூங்கிருச்சு..' தவமாய் தவமிருக்கும் காதலியின் 'அனல்மேலே பனித்துளி..' இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் அமுதம் ம்யூசிக்கின் வெளியீடான 'குழலூதும் கண்ணன்' என்ற இசைக்குறுந்தகடைக் கேட்க நேர்ந்தது. அழகழகான 11 பாடல்கள்.. கானமழை பொழிந்திருக்கிறார் நித்யஸ்ரீ. அத்தனையும் கண்ணனை நினைந்து உருகும் கோபியரின் கவிதைகள். அற்புதமான இசை. வசீகரிக்கும் நித்யஸ்ரீ. நமக்கும் கர்னாடக சங்கீதத்துக்கும் 13 கிமீ தூரம் எனினும் நித்யஸ்ரீயின் குரலும், இசையும் நம்மையும் தலையாட்டிக்கொண்டே ரசிக்கவைக்கின்றன. குறிப்பிடத்தகுந்த செய்தி யாதெனின் அத்தனை பாடல்களுமே கண்ணன் குழலூதுவதைப்பற்றிய அழகழகான கவிதைகள். அற்புதமான தமிழிசை அனுபவம். கேட்டுப்பாருங்கள்.. கேட்டுப்பருகுங்கள்.!

குழலோசை கேட்க மனம் விழையுதடா..
ஊதும் குழலோசை கேட்க மனம் விழையுதடா..
நீ ஊதும் குழலோசை கேட்க மனம் விழையுதடா..
கோமளவாய் மடுத்து நீ ஊதும் குழலோசை கேட்க மனம் விழையுதடா..

.

நாம என்ன தான் பகுத்தறிவு வாதியாக இருக்க விரும்பினாலும் சில விடயங்களில் பகுத்தறிவை நான் கழற்றி வைப்பதுண்டு.
என்னைப் பற்றி சோதிடர் ஒருவர் அக்குவேறு ஆணிவேறாக தகவல்களை தெரிவித்ததால் சோதிடத்தின் மீது ஒரு சிறிய பற்று.
நம்ம காதல் நிலைமை (ஏதாவது கிடைக்குமா எண்டு தான்) எல்லாம் எப்படி இருக்கு எண்டு தேடிற்று இருந்த போதுதான் எனக்கு ஒரு வலைப்பக்க முகவரி கிடைத்தது. அற்புதமான வலைத்தளம்.
சில விடயங்களில் நம்மை மீறிய சக்திகளும் இருக்கின்றன என்பதற்கு அற்புதமான உதாரணம் தான் இந்த வலைத்தளம்.
நீங்களும் ஒருமுறை போய்ப் பாருங்களேன்...
 
இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல்: ஐ.நா.வின் மௌனம் அதிர்ச்சி அளிக்கிறது: சமூக சேவகி மேதா பட்கர்

            லங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை தடுக்காததது அதிர்ச்சி அளிக்கிறது என்று சமூக சேவகி மேதா பட்கர் கூறியுள்ளார்.

சென்னை செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கையில் குழந்தைகள், குடிமக்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் ஐ.நா. இன்னமும் செயல்படாமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்தாலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னமும் குற்றுயிரும், குலையுயிருமாக வாழ்வுக்குப் போராடும் நிலையில் தவிக்கின்றனர்.

நாங்கள் எப்போதும் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை ஆதரித்துள்ளோம்.

இலங்கையில் வவுனியா பகுதியில் நடந்த உள்நாட்டுப் போரில், காயமுற்றுத் தவித்த தமிழர்களுக்கு சிகிச்சை அளித்ததற்காக டாக்டர்கள் சத்தியமூர்த்தி, வரதராஜன், சண்முகநாதன் ஆகியோர் அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதுவரை இவர்கள் விடுவிக்கப்படவில்லை.

மனிதநேய அடிப்படையில் உயிர்காக்கும் சிகிச்சை அளிப்பது டாக்டர்களின் கடமை. தங்களது கடமையை பரிவுடன் செய்த ஒரே காரணத்துக்காக இவர்களைக் கைது செய்துள்ளது மிகுந்த கண்டனத்துக்கு உரியதாகும். இவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசை, சர்வதேச சமுதாயம் நிர்பந்திக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: