ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறை அவரது மூத்த மகள் கமலா செல்வராஜ் ஒன்றரை மணி நேர படமாக எடுக்கிறார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.
ஜெமினி கணேசன் ஆறு வயது முதல் அவர் மரணமடைந்த 85வது வயது வரை உள்ள வாழ்க்கை இந்தப் படத்தில் பதிவு செய்யப்படுகிறது. ஜெமினி கணேசனுடன் நெருங்கிப் பழகிய முப்பது பேர்களின் பேட்டியும் இதில் இடம்பெறுகிறது.
ஆவணப்பட பாணியில் தயாராகும் இந்தப் படத்தை வெங்கடேஷ் இயக்குகிறார். தாயன்பன் இசை. படத்தக்கு காதல் மன்னன் என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்தார் டாக்டர் கமலா செல்வராஜ்.
தென் தமிழகத்தில் பெய்த கடும் மழையால் சிம்புதேவனின் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படப்பிடிப்பு தடைபட்டது.
சிம்புதேவனின் கெளபாய் படம், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படப்பிடிப்பு பாலக்காட்டில் தொடங்கியது. லாரன்ஸ், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்கள் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக அம்பாசமுத்திரத்தில் சுமார் ஒரு கோடி ரூயாய் செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டன. தற்போது இங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இரண்டு நாட்கள் முன்பு பெய்த கடும் மழையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் முழுமையாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. அதே நேரம் மழையால் அரங்குகளுக்கு எதுவும் சேதமில்லை என பட யூனிட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
லாரன்ஸ் ஜோடியாக பத்மப்ரியா, லட்சுமிராய், சந்தியா ஆகியோர் நடிக்கின்றனர். மனோரமா, நாசர், மெளலி ஆகிய சீனியர் நடிகர்களும் படத்தில் இருக்கிறார்கள். சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு தமிழில் தயாராகும் கெளபாய் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
வடிவேலு என்றதும் நினைவுக்கு வருகிறவர் கோவை சரளா. சராளவிடம் சரமாரியாக வடிவேலு அடிவாங்கும் காட்சியை முதல் முறையாக வி. சேகர் தொடங்கி வைத்தார். அதை புள்ளியாக வைத்து பெரிய கோலமே போட்டார்கள் கோடம்பாக்க இயக்குனர்கள்.
ஒரு கட்டத்தில் இந்த அடிதடி காமெடி வடிவேலு, கோவை சரளா இருவருக்குமே சலித்தது. பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
இந்நிலையில் புதிய ஜோடி ஒன்றை தேடியிருக்கிறார் வடிவேலு. குசேலன் படத்தில் சோனாவுடன் இவர் செய்த காமெடிக்கு நல்ல வரவேற்பு. அதனால் அழகர்மலை படத்திலும் சோனாவையே தனது ஜோடியாக்கியிருக்கிறார் வடிவேலு.
ஒரு படத்துக்கு மூன்று, நான்கு என்று நாட்களை எண்ணி கால்ஷீட் கொடுக்கும் வடிவேலு, அழகர்மலை படத்துக்கு இருபது நாட்களுக்கு மேல் கால்ஷீட் தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். எல்லாம் சோனா ஜோடி சேர்ந்த நேரம்.
அழகும், கவர்ச்சியும் அதனை தாராளமாக வெளிப்படுத்தும் பரந்த மனசும் இருந்தால் போதும், தமிழ் சினிமாவில் நாயகியாகிவிடலாம். திறமை...? அது யாருக்கு வேண்டும்!
இந்த கவர்ச்சி கால்குலேசனுக்கு நடுவில், அழகு நிலையத்துக்குப் போகாமல் உடற்பயிற்சி நிலையத்துக்கு சென்று கொண்டிருக்கிறார் ஒரு நடிகை. அவர், வள்ளுவன் வாசுகியில் நடித்த ஸ்வேதா.
மரத்தைச் சுற்றி பாட்டுப் பாடும் நாயகிகளுக்கு எப்போதாவது உடம்பை வருத்தி 'டைட்' பண்ணும் சந்தர்ப்பம் கிடைக்கும். வீரசோழன் படத்தில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது ஸ்வேதாவுக்கு.
ஸ்ரீ முத்துமாரியம்மன் பிலிம்ஸ் தயாரிக்கும் வீரசோழன் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாராகிறது. அன்பு சரவணன் படத்தை இயக்குகிறார். அஜய்குமார் என்ற புதுமுகம் ஹீரோ. ஸ்வேதா ஹீரோயின்.
இந்தப் படத்தில் வீரம் நிறைஞ்ச பெண்ணாக வருகிறார் ஸ்வேதா. பாவாடையை இழுத்துச் செருகி கம்பெல்லாம் சுற்றுகிறாராம். இதற்காக ஸ்வேதாவுக்கு ஸ்பெஷல் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.
சரித்திரம் படத்துக்காக ஸ்ரீதேவிகா சிலம்பப் பயிற்சி எடுத்துக் கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த கவர்ச்சி கால்குலேசனுக்கு நடுவில், அழகு நிலையத்துக்குப் போகாமல் உடற்பயிற்சி நிலையத்துக்கு சென்று கொண்டிருக்கிறார் ஒரு நடிகை. அவர், வள்ளுவன் வாசுகியில் நடித்த ஸ்வேதா.
மரத்தைச் சுற்றி பாட்டுப் பாடும் நாயகிகளுக்கு எப்போதாவது உடம்பை வருத்தி 'டைட்' பண்ணும் சந்தர்ப்பம் கிடைக்கும். வீரசோழன் படத்தில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது ஸ்வேதாவுக்கு.
ஸ்ரீ முத்துமாரியம்மன் பிலிம்ஸ் தயாரிக்கும் வீரசோழன் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாராகிறது. அன்பு சரவணன் படத்தை இயக்குகிறார். அஜய்குமார் என்ற புதுமுகம் ஹீரோ. ஸ்வேதா ஹீரோயின்.
இந்தப் படத்தில் வீரம் நிறைஞ்ச பெண்ணாக வருகிறார் ஸ்வேதா. பாவாடையை இழுத்துச் செருகி கம்பெல்லாம் சுற்றுகிறாராம். இதற்காக ஸ்வேதாவுக்கு ஸ்பெஷல் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.
சரித்திரம் படத்துக்காக ஸ்ரீதேவிகா சிலம்பப் பயிற்சி எடுத்துக் கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
**********************
இது என்னயா சக்கர பொங்கல்.. படிச்சு பாருங்க அவியல் பொறியல் மாதிரி ..
இதுவும்
எழுத வந்து முன்று மாசம் ஆகி போச்சு ..
மனைவி வீட்டில் இல்லாமல் இருந்த நேரத்தில் ( திருச்சியில் இருந்தாங்க குழ்ந்தையுடன்) அதான் ஏதாச்சும் எழுதவோம் என்று எழுத அரம்பித்த நேரம் ..
( ஏய் ஓடாதிங்க இது முந்தின பதிவு மாதிரி பெரிசு இல்லை ...பயம் வேணாம் இது ஆட்டோகிராப்பியும் இல்லை)
"இது வரை 79 பதிவுகள்...
50வது பதிவில் 100 தாண்டியது பாலோவர்ஸ் ...
இப்போ 155 பாலோவர்ஸ் வந்து இருக்காங்க..
100வது பதிவு போடுவதற்க்கு ஒரு 200 அடிப்போமானு பார்போம்
என்னையும் நம்பி படிக்கிற, தாவுகிற, படம் மட்டும் பார்க்கிற சில மக்கள்
இவங்களுக்கு நன்றி"
**********************
சரி மேட்டருக்கு வருவோம்
இந்த மாத சக்கரக்கட்டி என்று ஆரம்பித்து இது வரை முறையே கவிஞர்கள் ஆதவா, முத்துராமலிங்கம் என்று சக்கரகட்டிகளாக அறிவித்தோம்.
இதோ "இம்மாத சக்கரகட்டி" இனி "இந்த வார சக்கரகட்டியாக" மாறியாச்சு.
இனி வார வாரம் ஒரு பதிவர் சக்கரக்கட்டியாக சக்கரை தளத்தில் மிளிருவார்.
ஒவ்வொரு வாரமும் திங்கள் காலை புது சக்கரக்கட்டி இருப்பார்.
அந்த புகைப்படத்தை கிளிக்கி அவரது தளத்திற்க்கு சென்று பதிவுகளை படிக்கலாம்..
பிளடி இண்டியன்ஸ்..... என்ற பதிவை படித்தவுடன் முடிவு செய்து விட்டேன் மதுரை கார அவிங்க ராசா தான் அடுத்த மாத சக்கரக்கட்டி.
நீ பெரிய இவனா அடுத்தவங்களுக்கு இந்த வார சக்கரைகட்டி விருது கொடுக்க...
என் சைட்டுக்கு வரும் ஒரு சிலருக்கு அடுத்த பதிவரை காட்டும் முயற்சியே இது...
**********************
பெங்களூர் டிராபிக் போலிஸும் நானும் - நகைச்சுவை-மொக்கை
என்ற பதிவை படிச்சு இருப்பிங்க படிக்காதவங்க படிச்சி சிரிச்சிட்டு வாங்க
நேற்று மதியம் அதே போலிஸ் பிடித்தார் எல்லாம் சரியாக இருந்ததாலும் என் அப்பாவி முகத்தை பார்த்து ஏத்துனை வாட்டி தான் இவன அடிக்கிறது என்று விட்டுவிட்டார்..
நேற்று மாலை திரும்ப போகும் போது வேறு வழியில் சென்றேன் அது நம்ம குறுக்கு சந்து மாதிரி வழி எஸ்கேப் ஆகலாம் என்று தான்..
என் நேரம் TN வண்டி அல்லவா தாவி புடிச்சான் அதே போலிஸ்..
சார் மதியம் தான் சார் எல்லா டாக்குமண்ட்ஸும் பார்த்து சரியா இருக்குனு விட்டிங்க..
அப்படியா .. எங்க நின்னோம் சொல்லு பார்போம் என்று கன்னடாவில் சொல்ல..
சார் அந்த பார்க் பக்கத்தில்
சரி போ என்று விட்டார்..
விதி வலியது போல எப்படி போனாலும் அவரு வந்து காமெடி பண்ணுறாரு..
மாதம் 1 ஆச்சுல அவன் அவன் பாகெடில் கொஞ்சம் இருக்குனுஅதான் இப்படி
டிஸ்கி - எல்லா போலிஸீம் (போலி இல்லை ) நல்லவங்க இருக்காங்க அதாங்க லஞ்சம் வாங்காம நேர்மையா..
**********************
நட்புடன்
~சக்கரை~
சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக