பதிவர் கடற்கரைக்காரன் என்றறியப்படும் சிவக்குமரனுக்கு இன்று பிறந்தநாள்.
விழுப்புரத்தைச் சேர்ந்த சிவா, சில வருட மும்பை வாசத்திற்குப் பின் கோவை வந்திருக்கிறார். இனியெப்போதும் கோவை என்கிறார்.
வாருங்கள் வாழ்த்துவோம்.
.
பாட்டாளி மக்கள் கட்சி, இந்த கட்சி எல்லா விஷயங்களிலும் மற்ற அரசியல் கட்சிகளை போன்றதுதான் எனினும், சுற்று சூழல், இளைஞர் நலன் போன்றவற்றில் அக்கறை காட்டும் கட்சியாகும். இக்கட்சியை சேர்ந்த டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த காலகட்டத்தில், புகைப்பழக்கத்துக்கு எதிராக பல அதிரடிகளை அறிவித்தார். சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும், சிகரெட், புகையிலை மற்றும் பீடி பாக்கெட்களில் மண்டை ஓடு மற்றும் புற்றுநோய் பாதிப்பு படங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். மண்டை ஓடு அச்சிடுவதை எதிர்த்து சிகரெட் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.இதைத் தொடர்ந்து சிகரெட் பெட்டிகளில் புற்றுநோய் பாதிப்பு படங்கள் அச்சிடும் உத்தரவு மட்டும் நேற்று அமலுக்கு வந்தது. சினிமாவில் புகை பிடித்தலுக்கு தடை விதிப்பதை எதிர்த்து பிரபல இயக்குநர் மகேஷ்பட் உள்பட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், புதிய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றிருக்கும் குலாம் நபி ஆசாத் கூறியதாக பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்தியில், சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாகத்தான் பார்க்க வேண்டும். இதில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பல்வேறு ஆட்சேபகரமான காட்சிகள் வருகின்றன. புகைபிடித்தலுக்கு தடை விதிப்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல. சமூகத்தில் நடக்கும் விஷயங்களை சினிமாவில் காட்டுகிறார்கள். இவை அனைத்தையும் தடை செய்வது என்றால் சினிமாவையே தடை செய்ய வேண்டும். நடைமுறைக்கு ஒத்துவராத எதையும் நாங்கள் செய்ய மாட்டோம் என்று ஆசாத் கூறியுள்ளார்.
ஜனாப். ஆசாத் அவர்களின் கருத்து பல கேள்விகளுக்கு வித்திடுகிறது. சினிமா பொழுதுபோக்கு சாதனம் எனில், சினிமா பார்க்காத எத்துனையோபேர் இருக்கிறார்களே! அவர்களுக்கெல்லாம் பொழுது போகவில்லையா? மேலும், சினிமாவில் கொலை, கொள்ளை , கற்பழிப்பு காட்சிகள் வருகிறது. புகைப்பிடித்தலுக்கு தடை விதிப்பது நடை முறை சாத்தியமில்லை. இவை எல்லாவற்றையும் தடை செய்வதாக இருந்தால் சினிமாவையே தடை செய்யவேண்டும் என கூறும் ஆசாத் அவர்கள், சினிமாவில் புகைப்பிடிப்பதை தடை செய்யமுடியும் என்று அன்புமணி சாதித்து காட்டியதை மறந்ததேன்? அவரது நடவடிக்கைக்கு பின் சினிமாவில்'ஸ்டைலாக' சிகரெட் பிடிக்கும் காட்சிகள் கத்தரிக்கு இலக்கானதே! மறுக்கமுடியுமா? அப்படியே தப்பித்தவறி பழைய படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றாலும், அதற்கு கீழாக 'புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு' என்ற அறிவிப்பும் அக்காட்சியில் இடம் பெற்றதே! ஆக அன்புமணியால் முடிந்த ஒரு விஷயம் ஆசாத் அவர்களுக்கு சாத்தியப்படவில்லை என்பதே உண்மை.
மேலும், எல்லாவற்றையும் தடுப்பதாக இருந்தால் சினிமாவையே தடை செய்யவேண்டிய நிலைவரும் என்ற கருத்தையும் அமைச்சர் முன்வைத்து, நடைமுறைக்கு சாத்தியமில்லாததை நாங்கள் செய்யமாட்டோம் என்றும் கூறியுள்ளார். மேலும் சினிமாவை பார்த்து மக்கள் தவறிழைப்பார்கள் என்றும் நான் நம்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் புகைப்பிடிக்கும் 'ஸ்டைலை' பார்த்து புகைப்பழக்கத்தை கற்றுக்கொண்ட இளைஞர்கள் ஏராளம். 'சிகப்பு ரோஜாக்களையும்' 'நூறாவது நாளையும்' நடைமுறைப்படுத்திய ஆட்டோ சங்கர்களும்- ஜெயப்பிரகாஷ்களும் உண்டு. 'வாலி' யை கண்டு அண்ணியை கற்பழித்துகொன்ற கமால்ஷாக்களும், 'பருத்திவீரன்' கிளைமேக்சை அமுல்படுத்தியவர்களும் உண்டு. நல்லவிஷயங்களை மடுவளவும், தீமைகளை மலையளவும் பரப்பும் சினிமாவை தடை செய்தால் ஒன்றும் குடிமுழுகிவிடாது. அது அமைச்சருக்கு இயலாத விஷயம் எனில், அன்புமணி சாதித்ததையாவது தடுக்காமல் இருந்தால் சரி!
மேலும், அமைச்சர் ஒரு முஸ்லிமாக இருப்பதால், பொறுப்புகள் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படும் என்ற நபிமொழியை தனிப்பட்ட சகோதர வாஞ்சையுடன் நினைவுபடுத்துகிறோம்.

இதனுடைய இலக்கணம் ( இது என்னுடைய வரையறை )
1.மூன்று அடிகளில் இருக்க வேண்டும்.
2.முதல் அடியில் கடைசி சீரும், கடைசிஅடியில் கடைசி சீரும் ஓசை ஒத்து வரவேண்டும்.
3.முதல் அடியின் சீரின் எண்ணிக்கையும், கடைசி அடியின் சீரின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
4.ஒரு அடிக்கு குறைந்தது இரண்டு சீரும் அதாவது குறளடியாக அல்லது அதிகமாக நான்கு சீரும் அதாவது அளவடியாக தான் இருக்க வேண்டும்.
5.அடிமோனையும்,சீர்மோனையும் அமைத்து எழுதினால் நன்று.
6.கடைசி அடி " நச் " என்று முத்திரை பதிக்க வேண்டும்.
7.கனிச்சீர் வரக்கூடாது.
இதோ என்னுடைய சில ஓசை ஒத்தப்பாக்கள் ( Limeriaku ).
உங்களின் பார்வைக்கு
விண்ணைத் தொடும் விலைவாசி
கண்ணைக் கட்டும் பொழுது
மண்ணில் யாரப்பா சுகவாசி.
திருடன் என்றால் கம்பு
அரசியல் வாதி என்றால்
நமக்கு ஏன் வம்பு.
அன்று மணத்தது பூக்கடையாய்
அரசியல், இன்றோ
அசுத்தம் நிறைந்த சாக்கடையாய்.
கருத்தும் கதையும்
மாறிப் போய் இன்று திரைப்படத்தில்
விரசமும் சதையும்.

இன்டர் நெட்டில் பிரவுஸ் செய்கையில் தகவல் தேடி தளங்களை மிகவும் சீரியஸாகப் படித்துக் கொண்டிருக்கையில் இடையே திடீரென இரண்டு அழகிகள் படங்கள் கிடைக்கும். பெயர் மற்றும் வயது போட்டிருக்கும். கீழே நான் தனியாகத் தான் சென்னையில் இருக்கிறேன். என்னைச் சந்திக்க வேண்டுமென்றால் இங்கு கிளிக் செய்து மேலும் விபரங்களைப் பெறலாமே. இதில் எந்தவிதத்திலும் நீங்கள் கட்டுப்படப்போவதில்லை. ஜஸ்ட் பார் பன் என்றெல்லாம் விளம்பரங்கள் வரும்.
அல்லது ஏதேனும் ஒரு எலக்ட்ரானிக் பொருளைக் காட்டி இது உங்களுக்கு இன்னும் அதிக பாதுகாப்பு தரும். சென்னையில் இது எங்கு கிடைக்கிறது என்று தெரிய வேண்டுமா? கிளிக் செய்திடுங்கள் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கும். நமக்கு என்ன வியப்பு என்றால் எப்படி இந்த தளத்திற்கு நாம் சென்னையில் அல்லது தமிழ் நாட்டில் இருக்கிறோம் என்று தெரிகிறது.
இது அமெரிக்க நாட்டின் தளம் அல்லவா? அல்லது டில்லியிலிருந்து அல்லவா இந்த தளம் இயக்கப்படுகிறது? என்று வியக்கலாம்.
இங்கு தான் geotargeting என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது போல வரும் அழைப்புகள் எல்லாம் விளம்பரம் தான். இந்த விளம்பரம் தளத்தில் போடுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப் படுகையிலேயே இந்த வகையான தொழில் நுட்ப வசதியும் இணைக்கப்படுகிறது.
உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் ஹோஸ்ட் சர்வர் அல்லது உங்கள் இன்டர்நெட் முகவரி சார்ந்த ஐ. பி. முகவரியைக் கொண்டு உங்கள் இடம் அறியப்படுகிறது. அதற்கேற்ற வகையில் விளம்பரத்தில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டு காட்டப்படுகின்றன. ஆனால் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் உங்கள் பெர்சனல் தகவல்களான பெயர், முகவரி, போன் எண், இமெயில் முகவரி, வயது, பாலினம் ஆகியவற்றை கண்டறிய முடியாது. அதனால் தான் உங்களை கவர்ச்சி காட்டி கிளிக் செய்து பின் ஏதேனும் ஆசை காட்டி ஒரு படிவத்தின் மூலம் இந்த தகவல்களைப் பெற்று விடுவார்கள்.
அது மட்டுமின்றி யாரேனும் இன்டர்நெட் பயன்படுத்துபவர் ஒருவர் இந்த விளம்பரங்களில் கிளிக் செய்தால் அதனைக் கணக்கிட்டுப் பணம் பெறும் வகையிலும் சில வெப்சைட்கள் இயங்குகின்றன. எனவே தான் ஏதேனும் ஒரு வகையில் உங்களைக் கவர்ந்து கிளிக் செய்திட இந்த விளம்பரங்கள் முயற்சி செய்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த ஜியோ டார்கெட்டிங் வழியில் ஊர்களின் பெயர்களை அமைப்பது.

எழுதியவர் : கார்த்திக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக