செவ்வாய், 2 ஜூன், 2009

2009-06-02



More than a Blog Aggregator

by Subankan


இது படத்தில இருக்கிற சரக்கு பத்தி இல்லீங்க, ஆளாளுக்கு காக்டெயில், சக்கர பொங்கல், அவியல், சட்டினி, சாம்பார் என்று எழுதுறாங்க. நாமளும் நம்மால முடிஞ்சத பாக்காமேன்னுட்டு …

முதல்ல ஒரு கவலை..



ப்ளாக் எழுதறவங்கள்ள ரொம்ப பிரபலமா இருக்கிறவங்க எல்லாம் குடும்ப இஸ்திரிகள், நம்ம கார்க்கி அண்ணாவைத் தவிர. சரி, நாமளும் பிரபலமாகணும்னா மேரேச் பண்ணறதுதான் ஒரே வழின்னுட்டு நம்ம பேஸ்புக்கிட்ட போயி கேட்டேன், எப்பப்பா நமக்குக் கண்ணாளம்னு, படுபாவிப்பய, முப்பத்தேழு வயசிலன்னுட்டான். இப்பதாங்க நமக்கு 22 ஆவுது

**********************************************

ஒரு ஜோக்


சரக்குன்னு போட்டுட்டு சரக்கு காமெடி இல்லாட்டா எப்படி?

ஒருத்தன் புல்லா ஏத்திட்டு பஸ்சில ஏறிட்டான். ஏறினவன் சும்மா இருக்கல, ஜன்னலுக்கால தலைய வெளியில நீட்டிப் பாத்துட்டே இருந்தான். அதப் பாத்த ஒரு வயசான அம்மா. இவனைப்பாத்து இப்படியெல்லாம் பண்ணிட்டிருந்தா நீ நேரா சொருக்கத்துக்குத்தான் போவே அப்டீன்னாங்க. அதக் கேட்டு பதறிப்போயி தலய உள்ள இழுத்துட்டு அவன் சொன்னான், அப்ப இது நான் ஏற வேண்டிய பஸ் இல்லயா?

**********************************

ஒரு டவுட்


இடயில கொஞ்ச நாள் எழுத மனசே வரல. சரி, என்ன பண்ணறதுன்னு யோசிச்சு, ரொம்ப யோசிக்கத் தேவையில்லாத ரெக்னிகல் மேட்டர்சா எழுதத் தொடங்கினன். அதுக்கப்புறம்தான் நம்ம பக்கமும் கொஞ்சம் கூட்டம் வருது. நம்மகிட்டயும் ரெக்னிகல் மேட்டர்ஸ் நிறைய ஸ்டாக் இருக்கு. ஆனா வெறும் ரெக்னிகல் மேட்டர்ஸ் மட்டும் எழுதுறதில எனக்கு விருப்பம் இல்ல. இப்ப என்ன பண்ணறது? நீங்களே சொல்லுங்க.

**************************************************
ஒரு படம்

ஒரு பார்ல இருந்த நேட்டீஸ் போர்டு




************************************

கடசியா ஒரு கவுஜ

சாதிகள் இல்லையடி பாப்பா..
பள்ளியில் பாடம்
அட்மிசன் போமிலே(Form)
தனியே அதற்கொரு காலம்(column)


சென்னை, ஜுன் 2 : அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்து ஆசிரியர் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தென்மண்டல இயக்குனர் டாக்டர் பி.கிருஷ்ணாரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
 சென்னை, ஜுன் 2 : கல்லூரியில் மாதிரி தேர்வு எழுத அனுமதிக்காததால் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.  சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வேலூர் ஆரணியை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மகன் விவேக் (வயது 18) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
  ஈரோடு, ஜுன் 2 : முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சளி தொந்தரவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணி அளவில் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவருடைய வீட்டில் உட்கார்ந்து இருந்தார்.  அப்போது திடீரென்று அவருக்கு நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரை உடனடியாக ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள்.  

கருத்துகள் இல்லை: