புதன், 3 ஜூன், 2009

2009-06-03

தவளைகள் அல்லது தேரைகள் என்பவை எம்மைப் பொறுத்தவரை அசிங்கமானவை.
ஆனால் உலகிலுள்ள எல்லா உயிர்களிலும் அழகு இருக்கிறது தான்.
இதோ இந்தப் படங்களைப் பாருங்கள்.
வண்ணமயமான தவளைகள்...

பல படங்களில் ஒரு பாடலுக்கு வந்து கிளாமர் குத்தாட்டம் போட்டு பார்ப்பவர்களை 'ஆ' என வாய் பிளக்க வைப்பவர் ரகசியா. அவர் ஒருநாளைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்குகிறார். அட, நடிக்கிறதுக்குதாங்க.

இதுவரை பாடல்களுக்கு மட்டுமே வந்து போன ரகசியா முதன் முறையாக 'மூணார்' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஒரு கொலையை நேரில் பார்க்கும் டான்ஸராக இந்தப் படத்தில் வந்து போகிறார்.

அப்பவும் டான்ஸ்தானா?

மூணார் பகுதியில் தேனிலவுக்கு சென்ற தம்பதியில், மனைவி கணவனை தன் காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததுதான் படத்தின் கதைக் கரு. இதில் கொலை செய்யப்பட்ட கணவன் உயிருடன் வந்தால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் பில்டப் குடுத்து சொல்லியிருக்கிறார்களாம். இந்தப் படத்தில் நடிக்கத்தான் அவ்வளவு சம்பளம் வாங்குகிறார் ரகசியா.

குத்தாட்டம் போடுவதற்கு வாங்குவதை விட இது குறைவா? இல்ல அதிகமா?

மம்மி நடிகை என்ற உடன் உங்கள் நினைப்பு ஹாலிவுட் பக்கம் போய்விட வேண்டாம். எல்லாம் நம்ம தமிழ் நடிகையைப் பத்தித்தான். ஹீரோயினாக அறிமுகம் ஆகி வரவர கழுத தேய்ஞ்சி கட்டெறும்பான கதையா துக்கடா கேரக்டர்களில் எல்லாம் வேஷம் கட்டியவர் மாளவிகா.
பட வாய்ப்புகள் இல்லாததால் சுமேஷ் என்பவரின் கரம் பற்றிக் கொண்டு செட்டில் ஆகி விட்டார். நம்ம இயக்குனர்கள் சும்மா இருப்பார்களா? கல்யாணம் ஆகிட்டாதான் இருக்கவே இருக்கு அண்ணி, அம்மா கேரக்டர்கள். இயக்குநர்கள் அவர் வீடு தேடி கதவைத் தட்ட, 'எனக்கொண்ணும் வயசாகிடல... இளம் ஹீரோக்களுக்கு ஜோடியா நடிக்கிற படமா இருந்தா வாங்க... இல்ல வராதீங்க...' என்று கதவை ஓங்கி பட்டுன்னு சாத்துறாராம்.

தொடர்ந்து கதவை தட்டிக்கிட்டே இருப்போம்ல...

தனது பிறந்த நாளான ஜுன் 22-ல் கட்சி ஆரம்பிக்கிறார் நடிகர் விஜய். நாம் சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்த செய்தி இது. தேர்தலுக்கு முன்புதான் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்திருந்தார் விஜய். முடிவுகள் பத்திரிகைகளில் வந்த சர்வே போல் அல்லாது வேறு மாதிரி அமைந்துவிட்டதால், 'சேம் சைடு கோல்' போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது விஜய்க்கு. எனவே தனது அரசியல் கட்சி விஷயத்தில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் இப்போது.

இந்த அமைப்பின் பெயரில் கட்சி என்ற வார்த்தையோ, கழகம் என்ற வார்த்தையோ இடம் பெறப் போவதில்லையாம். வேண்டுமானால் இயக்கம் என்று அமையும்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு எல்லோரையும் ஒருங்கிணைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம். "எதையாவது ஆரம்பித்துக் கொள்ளுங்கள். எனது பங்கு பின்னணியில்தான்" என்று கூறிவிட்டாராம் விஜய். எனவே இவர் நிறுவன தலைவராக மட்டுமே இருப்பாராம். செயல் தலைவர், பொருளாளர் போன்ற முக்கியமான பதவிகளை தானே வைத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி.

இதற்கிடையில் தனது ஐம்பதாவது படத்திற்கு உரிமைக்குரல் என்ற பெயரை தேர்வு செய்திருக்கிறாராம் விஜய். படத்தில் இவருக்கு மீனவர் வேடம் என்கிறார்கள். அப்படியென்றால் மீனவ நண்பன் என்றல்லவா வைத்திருக்க வேண்டும்?

சிங்கம் புலி படத்தில் ஜீவாவும் மீனவராகதான் நடிக்கிறாராம். காசிமேட்டை இரண்டு பேரும் சேர்ந்து குத்தகை எடுத்திட்டா, வலையை எங்கே காய வைப்பாங்களாம்?

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சீசன். இது தமன்னா சீசன்! நட்சத்திர ஹோட்டலில் எக்கச்சக்க ஆட்டம் போடுகிறார் என்று ஒருபக்கமும், முன்னணி இயக்குனர்களுக்காகவே பிரத்யேக பார்ட்டி கொடுக்கிறார் என்று இன்னொரு பக்கமும் தமன்னா பற்றி தமுக்கடிக்கிறார்கள்.

விசாரித்தால், "இப்படி பார்ட்டி வச்சுதான் வாய்ப்பு வாங்கணும்ங்கிற நிலைமை அவங்களுக்கு இல்லியே"ங்குது தமன்னாவின் நெருக்கமான வட்டாரம். "தமிழ்லே என்ன வேணா எழுதிட்டு போகட்டும். அது அவங்களுக்கு தெரிய போறதில்லே. ஏன்னா தமிழ்லே பேசினாலே கொஞ்சம் கொஞ்சம்தான் அவங்களுக்கு புரியும். இதிலே இவங்க எழுதி, அவங்க படிக்கப் போறாங்களாக்கும்? விடுங்கப்பா" என்கிறது இதே நெருக்கமான வட்டாரம். இப்படியெல்லாம் சொல்லிடுறாங்க என்பதற்காகவே தமிழ் படிக்க ஆரம்பித்திருக்கிறாராம் தமன்னா. முதலில் தாராளமா பேச கத்துக்கணும். அப்புறம் படிக்கவும் கத்துக்கணும் என்பது அவரது ஆசை.

மலர மலர பக்கத்திலே இருக்கும் பொண்ணுக்கு அகர முதல சொல்லி தருவதற்கு ஆர்வத்தோட அலையுறாங்களாம் அவரோட நடிக்கிற ஹீரோக்கள். அதில் முக்கியமான ஒருத்தரு "என்னோட நீ தமிழ்லே மட்டும்தான் பேசணும்"னு சொல்லியிருக்காராம்.

இது ஒருபுறம் இருக்க, சற்றே சரிவில் இருக்கும் இன்னொரு இளம் ஹீரோ இவரது கால்ஷீட் கேட்டதற்கு, தானாகவே பயந்து ஓடும்படி ஒரு சம்பளத்தை சொன்னாராம் தமன்னாவின் அப்பா. நயன்தாராவிலிருந்து, த்ரிஷா வரைக்கும் வேண்டாத ஹீரோவை தட்டிக்கழிக்க இந்த பாலிசியைதான் கடைபிடிக்கிறார்கள்.

அப்போ தமன்னாவோட வளர்த்தி கொஞ்சம் அதிகம்தான்னு சொல்லுங்க...
கத்திரி வெயில் முடிந்தாலும் வெயிலின் கோரதன்மை குறைய இன்னும் சில நாட்கள் எடுக்கலாம் . தமிழ் சினிமாவில வடிவேலு இல்லைனாலே அது ஒரு மிக பெரிய வெற்றிடம் தான் . நான் சென்னையில வேலை செய்த நேரத்தில் தான் காத்தவராயன் சினிமா திரைக்கு வந்தது . தினமும் போகிற போல அன்றும் வேலைக்கு சென்று     கொண்டிருந்த பொது தான்  . அதை பார்க்கவேண்டியதிருந்து . அதுதாங்க காத்தவராயன் பட போஸ்டர் . ஒரு பக்கம் சின்னதா படத்தின்

கருத்துகள் இல்லை: