புதன், 3 ஜூன், 2009

2009-06-03


தமிழில் இந்திரா என்ற படத்தை இயக்கிய பிறகு அமைதியாகிவிட்ட நடிகையும் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாஸினி இப்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தமுறை அவர் கன்னடப் படத்தை இயக்குகிறார்.

அனந்த நாக்கின் கன்னடப் படத்தில் நடித்து வரும் சுஹாசினி, அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போதுதான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்தப் படத்தில் விஷ்ணுவர்தன் நாயகனாக நடிக்கிறார். அவர் கூறுகைில், "நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு கன்னடப் படம் இயக்கும் ஆர்வம் உள்ளது. விஷ்ணுவர்தன் என்னை நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறார். ஆனால் என் மகன் படிப்பு முடியட்டுமே என்று காத்திருந்தேன். இப்போது சுதந்திரமாகிவிட்டேன். படம் இயக்கும் நேரம் வந்துவிட்டது.

அடுத்த ஆண்டு அந்தப் படம் ரிலீஸாகும். நிச்சயம் கன்னட ரசிகர்கள் விரும்பும் வகையில் அந்தப் படம் அமையும்" என்றார் அவர்.

1984-ம் ஆண்டிலிருந்து கன்னடப் படங்களில் நடிக்கிறார் சுஹாஸினி என்பது குறிப்பிடத்தக்கது.

தி டின்னர் வித் அசின்! டாடா ஸ்கை நிறுவனம் இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தியது. அசினுடன் விருந்தென்றால் சும்மாவா? சைட் டிஷ்ஷாக அசினையே சேர்த்து சாப்பிடுகிற வெறியோடு வந்திருந்தார்கள் வின்னர்கள்! இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் அசின் என்பதால், வளைத்து வளைத்து டாடா ஸ்கை பற்றியே கேள்வி கேட்டார்கள் அவரிடம். கேட்டது நிருபர்கள் அல்ல, நிறுவனம்!

ஒருவழியாக 'நீங்களும் கேட்கலாம்' என்று வழிவிட்டு ஒதுங்கியது டாடா. பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு ரொம்ப பிரண்ட்லியாக பதில் சொல்ல ஆரம்பித்தார் அசின். ஒவ்வொரு நிருபர்களிடமும், 'எப்படியிருக்கீங்க, பார்த்து ரொம்ப நாளாச்சு' என்று தனது பழைய பாசத்தை மறக்காமல் நினைவுபடுத்திய அசின், அதிகம் எதிர்கொண்டது ஒரே ஒரு கேள்வியைதான். எப்போ தமிழுக்கு வரப்போறீங்க?

நல்ல கதையா இருந்தா சொல்லுங்க. நாளைக்கே தமிழுக்கு வர நான் ரெடி என்றார். பாலிவுட், கோலிவுட், மல்லுவுட், ஏன் ஹாலிவுட்டுக்கு கூட போயிட்டீங்க, எது பிடிச்சிருக்கு? என்றதற்கு, 'எல்லாமே பிடிச்சிருக்கு' என்ற அசினின் பதிலில் தப்பிச்சோம் என்ற நிம்மதி.

எல்லாருக்கும் உதவி செய்யுறவர் நீங்க. ஆனா வேலைக்காரர் விஷயத்தில் கெட்ட பேரு வந்திருச்சே? என்ற கேள்விக்கு ரொம்பவே கவலைப்பட்டார் அசின். 'ஆமாம்... அதே நேரத்தில் எப்பவுமே எல்லாமே பாசிட்டிவா நடக்கும்னு நினைக்க கூடாது. நமக்கு எதிரான விஷயங்கள் நடக்கும் போது கலங்கிடவும் கூடாது. நம்ம மேலே தப்பு இல்லாதப்போ எதுக்கு கலங்கணும்?' என்றார்.

ஒரு ஜோக் சொல்லுங்களேன்? என்று இன்னொரு நிருபர் கேட்டபோதுதான், சிரித்துக் கொண்டே கோபம் ஆனது பூங்கொத்து. 'நான் ஒன்றும் காமெடியன் இல்லையே' என்றார், லேசான கடுகடுப்புடன்! ஆக, பேட்டி அந்த கேள்வியோடு இனிதே(?) நிறைவடைந்தது.

முன்னதாக போட்டியில் வெற்றி பெற்ற ரசிகர்கள் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த டாடா ஸ்கை கருவி ஒன்றை அசினுக்கு பரிசளித்தார் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் விக்ரம் கௌஷிக்.
சென்னை அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று சென்னை மேயர் அறிவித்துள்ளார்.

அதற்காக தமிழ் பெயர்களைத் தொகுத்து ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதே போல் இங்கு பதிவர்களுக்கும் ஒரு பரிசு திட்டத்தை அறிவித்தால் என்ன?

நல்ல தமிழ்ப் பெயரை தங்கள் வலைப்பதிவு மற்றும் புனைப்பெயராக வைப்பவர்களுக்கு - 5 வோட்டுகள் இலவசமாகப் போடப்படும்.

வலைப்பதிவின் மூலம் கொஞ்சமேனும் துட்டு தேத்த முடிந்தால் நல்லாயிருக்கும் தானே ? நாலு மொக்கை பின்னூட்டம் போடும் நேரத்தினை செலவழித்து மாதம் 100 டாலருக்கு குறையாமல் சம்பாதிக்கும் வழியை உங்களுக்கு நான் சொல்லித்தரப்போறேன்...

சில நாட்களுக்கு முன் வெளியிட்ட டேட்டா எண்ட்ரி விளம்பரத்துக்கு நிறைய ரெஸ்பான்ஸ், ப்ராஜக்டை கொடுத்துவிட்ட பின்னும் பலர் கேட்டுக்கொண்டிருந்தது உறுத்தலாக உள்ளது...

எளிமையாக நேர்மையாக வலைப்பதிவு மற்றும் அதன் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் வழி உள்ளது..அதனை அனைவருக்கு சொல்லும் விதமாக இந்த ஒளிபரப்பை செய்யவிருக்கிறேன்...

இதனை நேரடி ஒளி & ஒலிபரப்பாக செய்யவிருக்கிறேன்...ஆமாங்க லைவ் டெலகாஸ்ட்...யூஸ்ட்ரீம் அல்லது லைவ்ஸ்ட்ரீம் வெப் தளங்களில் நேரடி ஒளிபரப்பு வசதியை இலவசமாக தருகிறார்கள்...

நேரடியாக என்னையும் என்னுடைய கணினி திரையை பார்க்கலாம், கேட்கலாம்..உங்கள் கேள்விகளை அதில் உள்ள சேட் மூலம் கேட்கலாம், உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் ஆன்லைனில் நிவர்த்தி செய்கிறேன்...அல்லது இந்த பதிவில் பின்னூட்டமாகவும் உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள்..

இதனை இரண்டு பாகமாக செய்யலாம் என்று எண்ணம்..முதல் பாகம் வலைப்பதிவு, ஆட்சென்ஸ், இணையம் போன்ற பல நுணுக்கங்கள் தெரியாதவர்களுக்காக...இதில்

வலைப்பதிவை உருவாக்குவது எப்படி ?
எத்தனை வலைமுகவரிகளை உருவாக்கலாம் ?
கூகிள் விளம்பரங்களை அதில் நிறுவுவது எப்படி
பின் நம்பர் என்றால் என்ன ?
டேக்ஸ் தகவலை இணைப்பது எப்படி ?
தவறான க்ளிக் செய்யக்கூடாது ஏன் ?
எப்படி பணம் உங்களுக்கு வரும் ?
இதில் எதாவது பிரச்சினைகள் உள்ளதா ?
யார் உங்களுக்கு பணம் தருகிறார்கள் ?
இந்த தொழிலில் கூகிளின் பங்கு என்ன ?

அடுத்த பாகம், ஏற்கனவே ஆட் சென்ஸ் போன்றவைகளை போட்டுவிட்டு, என்னடா காசு வரலையே என்று தேவுடு காப்பவர்களுக்காக...

எஸ்.ஸி.ஓ என்றால் என்ன ?
கூகிள் ட்ரென்ஸ் எப்படி பயன்படுத்தவேண்டும் ?
கூகிள் அனால்டிக்ஸ்ஸை எப்படி பயன்படுத்தவேண்டும் ?
இன்வேலிட் க்ளிக்ஸ் செய்து அதில் இருந்து மீள்வது எப்படி ?
உங்கள் ஆட் சென்ஸ் அக்கவுண்ட் பேன் செய்யப்பட்டால் ?

அவ்வளவுதாங்க...

ஏன் கூகிள் ஆட் சென்ஸ் என்று ஒரு கேள்வியை எழுப்பக்கூடும்...இப்போதைக்கு ரிலையபிளாக வலைப்பதிவர்களுக்கு மாதா மாதம் காசு அனுப்புவது கூகிள் ஆட் சென்ஸ் தானுங்க...

மற்றபடி லைவ் டெலகாஸ்டின் சுட்டியை இன்னோரு பதிவின் மூலம் தருகிறேன்,அல்லது இந்த பதிவிலேயே எழுதுகிறேன்..ஆனால் இதனை எப்போது செய்வது என்று நீங்க தாங்க சொல்லனும்...வெள்ளிக்கிழமை வரை நான் பிஸி, சனிக்கிழமை செய்யலாம் என்று உள்ளேன்...

நிறையபேர் அலுவலகத்தில் உள்ள ஓய்வு நேரத்தில் இணையத்தில் மேய்வதால், பின்னூட்டத்தில் தெரிவித்தால், வெள்ளிக்கிழமை உங்களுக்காக லீவ் போட்டுட்டு, இந்திய நேரத்தில் அல்லது எல்லோருக்கும் பொதுவான நேரத்தில் செய்கிறேன்..

முடிந்தால் வீடியோவாக பதிவுசெய்து, வலையேற்றம் செய்கிறேன்...ஆனால் உறுதியாக இதனை சொல்லமுடியாது...லைவ் ஸ்ட்ரீமில் வீடியோ வசதி உள்ளதா என்று தெரியவில்லை, ஆனால் யூஸ்ட்ரீமில் உள்ளது, ஆனால் யுஸ்ட்ரீம் க்வாலிட்டி சரியில்லை..
முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் காணப்படும் ஒற்றுமை தமிழ் அரசியல் தலைமைகளிடம் இல்லாதிருப்பது வேதனைக்குரியது ” என தேசிய நல்லிணக்க அமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன்( கருணா) கூறுகின்றார். கடந்த ஒரு வார காலமாக மட்டக்களப்பில் தங்கியிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் விஜயங்களை மேற்கொண்டு பலரையும் சந்தித்து வரும் அவர் நேற்று மாலை காத்தான்குடியில் முஸ்லிம்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.இந் நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் உரையாற்றினர். மாகாண சுகாதார சேவைகள் [...]


More than a Blog Aggregator

by வெண்தாடிதாசன்
நானும் பொறுத்துப்பார்த்தேன். தாங்க முடியவில்லை. திடீர் ஈழ ஆதரவாளர்களின் ஆட்டம் எல்லையை மீறி செல்கின்றது. அதை தூண்டி விடுகின்றனர் சில ஈழத்தமிழர்கள்.

தமிழன் சோம்பேறி. இன உணர்வு இல்லாதவன். மானம் ரோஷம் இல்லாதவன் என்று சகட்டு மேனிக்கு தாக்குதல். எல்லாவற்றிற்கும் ஒர் எல்லை உண்டு நணபர்களே.

அன்று எதற்குமே வழியில்லாமல் வந்திறங்கிய பல ஈழத்தமிழரை அன்போடு ஆதரித்து அரவணைத்தது தமிழக உறவுகள்தான் என்பதை மறக்கவேண்டாம்.

தமிழக தமிழரை ஏளனமாக பார்த்து பின்னால் தூற்றிய ஈழ தமிழர் பலரை நான் அறிவேன். தமிழ்நாட்டு ஆண்/பெண்னை மணந்த காரணத்தினால் குடும்பத்தாரால் ஏளனம் செய்யபட்ட ஈழ தமிழர்களையும் (யாழில் அனைத்தையும் தொலைத்து விட்டு அகதியாக வந்தவர்கள்தான்) நான் அறிவேன்.

"அவர்களுக்கு நன்றாக வேண்டும். அகதியாக இருக்கும் போதே இவ்வளவு திமிராக இருக்கின்றனரே" என்று பேசிய பல தமிழக தமிழர்களை (ஐய்ரோப்பாவில் வாழ்பவர்கள்) சந்தித்து உரையாடியவன் நான்.

"வடக்கில் இருக்கும் வேசி மகன்" என்று சொரனை கெட்ட தமிழக தமிழனை அன்போடு அழைத்த அக்மார்க் ஈழ தமிழனையும் நான் அறிவேன்.

இவ்வளவிற்கு பிறகும் ஈழம் மலராதா என்று ஏங்கி நிற்கும் ஒரு தமிழன் நான். இணைய வீரர்களே உம் வீரம் எமக்கு புல்லரிப்பை தருகின்றது. தரக்குறைவான தாக்குதல்களினால் என் போன்று மிச்சம் இருக்கும் இன உணர்வாளர்களையும் இழக்கும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படுகின்றீர்கள் என்பதை வேதனையோடு தெரிவிக்கின்றேன்.

கருத்துகள் இல்லை: