புதன், 3 ஜூன், 2009

2009-06-03

சென்னை, ஜுன் 3 : மிருதங்கக் கலைஞர் பாலக்காடு ஆர்.ரகு சென்னையில் நேற்று (ஜுன் 2) காலமானார். அவருக்கு வயது 81.  கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.  தலைசிறந்த மிருதங்கக் கலைஞராக விளங்கியவர். ரஷ்ய பார்லிமென்ட் நிகழ்ச்சியில் பங்கேற்பு உட்பட பல நாடுகளில் முத்திரை பதித்தவர். சங்கீத கலாநிதி பட்டம் உட்பட பல்வேறு பட்டங்களையும், விருதுகளையும் பெற்ற அவர், 'ரகு -பாணி' என்ற தனிப்பாதையை உருவாக்கி அதன் மூலம் இசைத்துறையில் பெயர் பெற்றவர்.  இறுதிச் சடங்குகள் மாலையில் நடந்தன. கர்நாடக இசைக்கலைஞர்கள் பலரும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்கு மனைவி, இருமகள்கள் மற்றும் மகன் உள்ளனர். (டிஎன்எஸ்)




ஈழத் தமிழர்கள் பிரச்சினையில்
இந்தியா அவப்பெயரைத் தேடிக்கொண்டு விட்டது
சீனா, ருசியா, கியூபா நாடுகளுக்கும் கண்டனம்!


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள்

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் பாசிச சிங்கள அரசுக்குத் துணை போன நாடுகளுக்குக் கண்ட னம் தெரிவிக்கப்பட்டது.

2.6.2009 செவ்வாய் பிற்பகல் 3 மணிக்கு சென்னை பெரியார்திடல் துரை. சக்ரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து முக்கியமானவைகள் சில ....

தீர்மானம் 3 (அ)

ஈழத்தமிழர் வாழ்வுரிமையும்

இந்திய அரசின் கடமையும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்புப் போரில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக, சிங்கள இன வெறி ராஜபக்சே தலைமை யிலான அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளது என்பது, அண்மையில் அய்.நா. வின் மனித உரிமைக் கழத்தில் விசாரணையின்போது இந்திய அரசு நடந்து கொண் டுள்ள போக்கின் மூலம் வெளிச்சமாகவே அறிய முடிகிறது. இதன் மூலம் உலகம் முழு வதும் உள்ள கோடானுகோடி தமிழர்கள், மனிதநேய மாந்தர்கள் மத்தியில் இந்தியா அவப்பெயரைத் தேடிக் கொண்டு விட்டது என்றும் இக்கூட்டம் வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறது.

அதுபோலவே சிங்கள அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு சீனா, ருசியா, கியூபா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளும் ஒத்துழைப்பு அளித்தமைக்கு இக்கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3 (ஆ):


போர் முடிந்துவிட்டது என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பிறகும் இலட்சக் கணக்கான தமிழர்களை முள்வேலியால் சூழப்பட்ட சுகாதாரமற்ற, அடிப்படை வசதிகள் அற்ற முகாம்களில் முடக்கி வைத்து, விசாரணை என்கிற பெயரில் அம்மக்களைப் பல்வேறு வகைகளிலும் துன்புறுத்துவதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழர்களை முற்றாக ஒழிப்பதையே முதன்மையான நோக்கமாகக் கொண்ட இலங்கை அரசு நியாயமான நிவாரணப் பணிகளை தமிழர்களுக்காக மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையில், அய்.நா. வே நேரடியாகத் தலையிட்டு, நிவாரணப் பணிகள் போர்க் கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட ஆவன செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

முகாம்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்று சொந்த வீடுகளில் குடியேற உடனடியாக நட வடிக்கை எடுக்க இலங்கை அரசை நிர்ப்பந்திக்க உலக நாடுகள் முன்வரவேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

இதில் இந்தியஅரசு முனைப்பாக இருந்து ஒருங்கிணைத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான உத்தரவாதத்தை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.



தீர்மானம் 3 (இ):


ஈழத்தில் வன்னிப் பகுதியில் மட்டும் கடைசி சில நாள்களில் இலங்கை இராணுவத்தால், யுத்த நெறிமுறைகளையெல்லாம் புறந்தள்ளி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என்ற செய்தி உலகத்தையே அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.
இதன் மீதான விசாரணையை உலக நீதிமன்றத்தில் நடத்தி, கொடூரமான முறையில் மக்களைக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

------------------- நன்றி:-"விடுதலை"3-6-2009
 சென்னை, ஜுன் 3 : தமிழகத்துக்கு மத்திய நிதி கமிஷன் குழு இன்று வருகிறது.   இந்த குழுவினர் முதலமைச்சர் மு கருணாநிதியை நாளை (ஜுன் 4) சந்தித்து விவாதிக்கிறார்கள். மாநில அரசுகளுக்கு சில இனங்களின் கீழ் நிதி ஒதுக்கீட்டை அளிப்பதற்காகவும், மத்திய-மாநில அரசுகளிடையே உள்ள நிதி ரீதியான உறவுகளை வரையறுக்கவும், மத்திய நிதி கமிஷனை (பைனான்ஸ் கமிஷன்) மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த மத்திய நிதிக்குழு, நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 5 ஆண்டு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. முதல் நிதி கமிஷன் 1951-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
 பாரீஸ், ஜுன் 3 : பாரீசில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷியாவின் மரிய ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.  ஷரபோவாவை சுலோவேக்கியாவின் டொமினிகா சிபுல்கோவா 6-0, 6-2 என்ற நேர் செட்டில் பந்தாடினார். தோள்பட்டை காயத்தால் நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய ஷரபோவாவின் பிரெஞ்ச் ஓபன் கனவு காலிறுதியுடன் கரைந்து போனது.  (டிஎன்எஸ்)  
 பாரீஸ், ஜுன் 3 : பாரீசில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷியாவின் மரிய ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.  ஷரபோவாவை சுலோவேக்கியாவின் டொமினிகா சிபுல்கோவா 6-0, 6-2 என்ற நேர் செட்டில் பந்தாடினார். தோள்பட்டை காயத்தால் நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய ஷரபோவாவின் பிரெஞ்ச் ஓபன் கனவு காலிறுதியுடன் கரைந்து போனது.  (டிஎன்எஸ்)  

கருத்துகள் இல்லை: