பூவுலகின் நண்பர்கள் சார்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த
"பூவுலகு" சுற்றுச்சூழல் இதழ்
சூழல் ஆர்வலர்களின் பெரும் ஆதரவை பெற்றது.
தற்போது மீண்டும் "பூவுலகு" இதழ் வெளிவருகிறது.
நமது சூழலை காக்கும் இதழ் வெளியீட்டு விழாவிற்கு தமிழ் மக்கள் பெரும் திரளாக வந்து இதழ் வளர்ச்சிக்கு ஆதரவளி்கக வேண்டும் என்று
"பூவுலகின் நண்பர்கள்" சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

தனித்துப் போனவர்களின் துயரம் அவர்களோடு இணைந்திருக்கையில் மட்டுமே நம்மால் உணரப்படுகிறது. விலகிவந்தபின் நம் வேலைகளுக்குள், வீட்டுப் பிரச்சனைகளுக்குள் சுலபமாக அவர்தம் நினைவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.
மறந்திருக்கும் ஓர்நாளில் ஏதோ காரணங்களால் சட்டென்று மீளுயிர்க்கும் அவலம் நிறைந்த அவர்களது ஞாபகங்கள் நம் எண்ணங்களைச் சுட்டெரிக்கிறது.
அண்மையில் நான் சந்தித்த, தன் சொந்தபந்தங்களில் இருந்து திடீரென தனித்து விடப்பட்ட நபர், நீண்ட நேரமாக என்னுடன் பேசமுடியாது தவித்தார். அவர் எண்ணங்கள் மு்ழுவதும் இழந்துபோனவர்களால் நிறைந்திருந்தது.

சிறிது நேரத்தின்பின் என்னிரு கைகளையும் திடீரென்று அவர் இறுகப் பற்றிக் கொண்டார். சந்திப்பின் இறுதிவரை எண்ணி ஓரிரு வார்த்தைகள் மட்டுமே இருவரும் பேசி இருந்தோம். அவருக்கான ஒருவர் என்பது தவிர்த்து தேவையற்றதாய் இருந்தது வார்த்தைகளின் ஆலாபனை.
பற்றி இருந்த என் கரம் வழி அவரது உறவுகள் பற்றிய நினைவுகளை ஓருவித நடுக்கத்துடன் அவர் மீள அசைபோட்டபடி இருந்திருக்கக்கூடும். பிரிதலுக்கான நேரம் வந்து என்கரம் தளர்ந்தபோது அவரும் ,நானும் அனுபவித்தது நரகவேதனை.
அவசரம் நிறைந்த இந்த உலகில் பிறப்பில் இருந்தோ அல்லது இடையிலோ தனித்து விடப்பட்டவர்களை நாளும் நாம் சந்தித்தவண்ணம் இருக்கிறோம்.
தனித்துவிடப்பட்டவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஏக்கங்களால் நிறைந்திருக்கும் இடைவெளிகளில் ஒருசிறு பகுதியையாவது நிரப்ப வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பதோடு, அதற்குரிய தேவை நிறைந்த காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதனையும் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.
பெரியவர்களின் உணர்வுகளே இப்படி இருக்கையில் திடீரென தனித்துவிடப்பட்ட குழந்தைகளைப்பற்றி எண்ணிப் பார்க்கையில் தொண்டைக்குழி வரண்டுகொள்கிறது.


வேக வைத்த உருளைக்கிழங்கு - 4
பச்சைப் பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
கொத்தமல்லித் தழை - சிறிது
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
நசுக்க வேண்டியவை:
இஞ்சி - சிறு துண்டு
பூண்டுப்பல் - 7
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை:
*வெங்காயம்,தக்காளியை அரியவும்,உருளையை பெரியதுண்டுகளாக கட் செய்யவும்.
*நசுக்க வேண்டிய பொருட்களை நன்கு நசுக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு வெங்காயம்+நசுக்கிய இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
*பச்சை வாசனை போனதும் தக்காளியை போட்டு நன்கு மசிக்க வதக்கி மிளகாய்த்தூளைப் போட்டு எண்ணெயிலேயே வதக்கவும்.
*தூள் வாசனை போனதும் உப்பு+உருளைக்கிழங்கு+பட்டாணியைப் போட்டு நன்கு வதக்கவும்.
*எண்ணெய் லேசாக பிரிந்து வரும் போது கொத்தமல்லித் தூவி இறக்கவும்.
பி.கு:
ப்ரெஷ் பட்டாணி இல்லையெனில் காய்ந்த பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் வேக வைத்து செய்யலாம்.குக்கரில் வேக வைக்ககூடாது குழைந்து விடும்.
மும்பை, ஜுன் 3 : மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு எதிரான வழக்கு, நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அஜ்மலுக்காக வாதாடுவதற்காக, அப்பாஸ் கஸ்மி என்ற வக்கீல் நியமிக்கப்பட்டு இருக்கிறார். பொதுவாக, குற்றவாளிகள் தரப்பில் ஆஜராவதற்கு இலவச சட்ட உதவி மையம் மூலம் மூலம் நியமிக்கப்படும் வக்கீல்களுக்கு, மொத்தத்தில் ரூ.900 அளவில்தான் வழங்கப்படுவது வழக்கம். அதனால், அப்படிப்பட்ட வழக்குகளில் ஆஜராக வக்கீல்கள் விரும்புவது இல்லை.
மும்பை, ஜுன் 3 : மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு எதிரான வழக்கு, நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அஜ்மலுக்காக வாதாடுவதற்காக, அப்பாஸ் கஸ்மி என்ற வக்கீல் நியமிக்கப்பட்டு இருக்கிறார். பொதுவாக, குற்றவாளிகள் தரப்பில் ஆஜராவதற்கு இலவச சட்ட உதவி மையம் மூலம் மூலம் நியமிக்கப்படும் வக்கீல்களுக்கு, மொத்தத்தில் ரூ.900 அளவில்தான் வழங்கப்படுவது வழக்கம். அதனால், அப்படிப்பட்ட வழக்குகளில் ஆஜராக வக்கீல்கள் விரும்புவது இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக