
பாதுகாப்பினை எந்த வழிகளிலெல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பல வகைகளில் பல்வேறு வயதினருக்கு என குழு பிரித்து ஒரு தளம் அறிவுரை கூறுகிறது. இதில் காணப்படும் தகவல்களை அவசியம் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்திடும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதில் சிறப்பான தகவல் என்னவெனில் பாதுகாப்பு வழிகள் அனைத்தும் வயது வாரியாகத் தரப்பட்டிருப்பதுதான்.
அந்த அந்த வயதில் எத்தகைய தளங்களைப் பார்வையிடுவார்கள் என்று கணக்கிட்டு அதில் எத்தகைய ஆபத்து இருக்கலாம் என்ற எச்சரிக்கையுடன் பாதுகாப்பு வழிகள் தரப்பட்டுள்ளன.
1. இளம் வயதினர் (Teenagers)
இந்த பிரிவில் இளம் வயதினர் எவ்வாறு பொறுப்பாக இணையத்தில் வலம் வர வேண்டும் என்பதில் தொடங்கி மியூசிக் மற்றும் வீடியோ டவுண்லோடிங், ஆன் லைனில் வருபவர்களிடம் சில்மிஷம் செய்தல் போன்றவை குறித்து அறிவுரை வழங்கப்படுகிறது. இளம் வயதினர் ஒவ்வொருவருக்கும் ஒரு அறிவுரை கிடைக்கிறது. இளம் வயதினர்கள் சிலர் இணையத்தில் பாதுகாப்பு குறித்து எடுத்த வீடியோ காட்சிகளும் இதில் பார்ப்பதற்கு உள்ளன.
2. பெற்றோர்கள் (Parents)
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை வழி நடத்தும் பொறுப்பு உள்ளதைச் சுட்டிக் காட்டி இணையத்தில் குழந்தைகளை எவ்வாறு வழி நடத்த வேண்டும் என்பது குறித்தும் அதற்கான தளங்கள் குறித்தும் அறிவுரை தரப்படுகிறது. அத்துடன் ஆண்டி வைரஸ் புரோகிராம், பயர்வால், ஸ்பைவேருக்கு எதிரான பாதுகாப்பினை எப்படி ஏற்படுத்துவது என்பது குறித்த வழிகளும் உள்ளன.
3. ஐம்பது வயதிற்கு மேல் (50+)
ஐம்பதிலும் ஆசை வரும் என்ற பாடல் கேட்டதுண்டா? இந்த பிரிவில் கம்ப்யூட்டரில் எப்படி பெர்சனல் தகவல்களை ஐம்பது வயதிற்கு மேலே உள்ளவர்களைக் குறி வைத்து பிடிக்கின்றனர் என்று காட்டப்பட்டுள்ளது.
4. கல்வியாளர்கள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கென ஒரு தனிப் பிரிவினை உண்டாக்கி அவர்கள் மாணவர்களுக்கு பிரவுசிங் பாதுகாப்பு குறித்து என்ன என்ன சொல்லித் தர வேண்டும் என்று பட்டியலிடுகிறது இந்த தளம்.மாணவர்களுக்குக் கம்ப்யூட்டர் பயன்பாட்டினைக் கற்றுக் கொடுத்து அவர்களைக் கம்ப்யூட்டர் பயன்படுத்தும்படி ஈடுபடுத்துவது நல்லதுதான். அதே நேரத்தில் இன்டர்நெட்டின் தன்மை மற்றும் ஆபத்துக்களையும் சொல்லி வைக்க வேண்டியதுள்ளது. இதை எல்லாம் இந்த பிரிவு தருகிறது.
5. இந்த பிரிவுகளோடு The Toolbox என்று ஒரு பிரிவு உள்ளது. இதில் பாதுகாப்பிற்கான சாதனங்களையும் புரோகிராம்களையும் எப்படி பயன்படுத்துவது எனக் காட்டப்படுகிறது. Firewalls, Antivirus, Parental controls, Networking மற்றும் External storage devices ஆகியன குறித்து விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிகள் அனைத்தும் கொண்டுள்ள இந்த தளத்திற்குக் கட்டாயம் நீங்கள் செல்ல வேண்டும்.
தள முகவரி : இங்கே கிளிக் செய்யுங்கள்
சென்னை, ஜுன் 3 : திரைப்படங்களை காண திரையரங்குகளுக்குச் செல்வார்கள். ஆனால் திரையாரங்கையே காண மக்கள் செல்வார்கள் என்றால், அது சத்யம் திரையார்காகத்தான் இருக்கும். சென்னையின் ஒரு அடையாளமாகவே மாறிய சத்யம் சினிமாஸ் ரியல் இமேஜ் நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் தமிழ் திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. 'திரு திரு துறு துறு' படத்தின் தலைப்பு வித்யாசமாக உள்ளதுபோல், படமும் வித்யாசமான திரைக்கதையாக இருக்கும் என்கிறார், பிலிம் இன்ஸ்டியூட்டில் கோல்ட் மெடலிஸ்ட்டான படத்தின் இயக்குநர் நந்தினி.
சென்னை, ஜுன் 3. 'அசின் வித் டின்னர்' என்ற டாடா ஸ்கை நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற டாடா ஸ்கை வாடிக்கையாளர்களுடன் நடிகை அசின் பங்குகொண்ட நிகழ்ச்சி நேற்று சென்னை தாஜ் ஓட்டலில் நடந்தது. அசின் இதில் கலந்து கொண்ட வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
புதுதில்லி, ஜுன் 3 (டிஎன்எஸ்) ஜுலை மாதம் 8ஆம் தேதி அன்று, ரயில்வே பட்ஜெட்டை மந்திரி மம்தா பானர்ஜி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் ரயில் பெட்டிகள் கொள்முதல், மீட்டர்கேஜில் இருந்து அகல ரயில்பாதையாக மாற்றம், இரட்டை ரயில்பாதை, புதிய ரெயில்பாதை அமைப்பது போன்ற திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதுதில்லி, ஜுன் 3 : பாராளுமன்ற எம்.பி.க்களாக ராகுல் காந்தி, வருண் காந்தி ஆகியோர் நேற்று (ஜுன் 2) பதவியேற்றுக் கொண்டனர். 15ஆவது மக்களவைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 335 பேர் நேற்று முன்தினம் பதவியேற்றனர். நேற்று பாராளுமன்றம் கூடியதும், 2-வது நாளாக பதவியேற்பு எம்.பி.க்கள் நிகழ்ச்சி தொடர்ந்தது. முதலில் டாக்டர் ஜோதி மிர்தா பதவியேற்றார். இதனையடுத்து சந்திர குமாரி, முன்னாள் மத்திய மந்திரி கிரிஜா வியாஸ் ஆகியோர் பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து சிக்கிம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக