சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். இது தொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெ.மோகனசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
புதுவை, ஜூன் 3 : இலக்கணக் கடல் எனப் புகழ் பெற்ற புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது, 80. 03.06.2009 மாலை 4 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது. புதுச்சேரியில் உள்ள பாவலர் பண்ணை, 62, மறைமலையடிகள் சாலையில் உள்ள (புதுவைப் பேருந்து நிலையம் அருகில்) அவர் தம் இல்லத்தில் மக்களின் வணக்கத்திற்காக அன்னாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்குக் காண்க : http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_03.html இரா.திருமுருகனார் வாழ்க்கைக் குறிப்பு: http://muelangovan.blogspot.com/2008/09/blog-post_21.html (டிஎன்எஸ்)
சென்னை, ஜுன் 3 : திமுக-வின் ஐம்பெரும் கொள்கைகளில் ஒன்றான மாநில சுயாட்சி அடைவதற்கான சூளுரையை மேற்கொள்வோம் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு கருணாநிதி இன்று (ஜுன் 3) தமது பிறந்தநாள் செய்தியாக கூறியுள்ளார். முதலமைச்சரின் 86ஆவது பிறந்தநாளை திமுக-வினர் இன்று மாநிலம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். முதல்வர் தமது 86ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
சென்னை, ஜுன் 3 : பிரதமர் மன்மோகன்சிங் இன்று காலை முதலமைச்சர் மு கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அவர் கூறியதாவது : நல்ல உடல் நலத்துடனும், ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். நாட்டுக்கும், மக்களுக்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங் பேசுகையில் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக