வியாழன், 4 ஜூன், 2009

2009-06-04

விடுதலைப்புலிகள்சர்வ தேச பொறுப்பாளர் பத்மநாதன் ஆஸ்திரேலிய ரேடியோ தமிழ் ஒலிபரப்புக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசுடன் நாம் பேசினோம். இலங்கை முக்கிய அமைச்சர் ஒருவரின் வழியாக இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புதலின்படி நடேசன், புலித்தேவன் ஆகியோர் ராணுவ முகாமுக்கு சென்று பேசுவதற்காக வெள்ளை கொடியுடன் சென்றனர். அப்போது இலங்கை ராணு வம் அவர்களை சுட்டு கொன்றது. இதே வெள்ளை கொடி பிடித்து சென்ற பொது மக்களையும் சுட்டு கொன்றனர்.

நான் இந்திய உளவுத்துறை ரா உத்தரவுப்படி நடந்து கொள்வதாக கூறப்படுவது தவறானது. பிரபாகரனுடன் நான் 30 வருடங்களுக்கு மேலாக ஆத்ம ரீதியாக கலந்து கொண்டவன். போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும். மேலும் படிக்க
“இனவாத பயங்கரவாதிகளை தோற்கடிப்பது என்றால் நாட்டு மக்கள் பக்குவப்படவேண்டும். மக்களின் பக்குவத்தன்மையே ஒரு தேசத்தின் அதிர்ஷ்டமாகும். இதேநேரம், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக சுமார் 24 ஆயிரம் படையினர் உயிர்த்தியாகம் செய்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் அங்க வீனர்களாகியுள்ளனர். எனவே இவ்வளவு அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் இந்த வெற்றி பெறப்பட்டுள்ள நிலையில், நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் இடமளிக்கப்படாது என்பதுடன், பிரிவினைவாதத்தின் நிழலுக்குக் கூட இனி எமது நாட்டில் இடங்கிடையாது. இராணுவ வெற்றியைக் கௌரவிக்கும் முகமாக கொழும்பு காலி முகத்திடலில் [...]
வடபகுதியில் நடந்து முடிந்துள்ள யுத்தத்திற்கென இலங்கை அரசுக்கு பெருமளவிலான உதவிகளை வழங்கியது இந்திய அரசாங்கமே என்பது தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது. வடபகுதியில் பெருமளவிலான அப்பாவித் தமிழ் மக்கள் அழிவதற்கும் பாதிப்புறுவதற்கும் இந்தியாவே காரணமாயிருப்பதால் நாம் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் என்று சொல்வதற்கே வெட்கப்பட வேண்டியுள்ளது. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் வேலையையே இந்தியா செய்து வருகின்றது. இலங்கைத் தமிழ் மக்களின் விடயத்தில் இந்திய அரசின் செயற்பாடானது மிகவும் வேதனைப்பட வேண்டியதாகவே இருக்கிறது. இவ்வாறு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பசறைப் [...]
காலம் சஞ்சிகையின் ஆதரவில் சுடர் ஏந்திய தொடர் ஓட்டம் மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு   2009 ஜூன்-  6 சனிக்கிழமை மாலை3.00 சிறப்புப் பேச்சாளர்கள் பேராசிரியர் எம்.ஏ. நுகுஃமான் பேராசிரியர் சித்திரலேகா, பேராசிரியர் மௌனகுரு,   Scarborough Civic Centre McCowan & Ellesemere 150 Borough Drive, Toronto வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சி காலை 10.00 முதல் மாலை 6.00 வரை நிகழும் தொடர்புகளுக்கு:  416-7311752   நண்பர்களுக்கு இந்தப் பதிவை அனுப்ப...
வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதைகணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு. கோபிசெட்டிபாளையம், மே.29- 2009. செய்தி - தினத்தந்தி

வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.


ஈரோடு மாவட்டம் நம்பினிர் அருகில் உள்ள எலத்தூர் செம்மாண்டம்பதியைச் சேர்ந்தவர் குமார்(வயது28) விவசாயி. அவருடைய மனைவி செல்வி(வயது27). இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது செல்வியின் பெற்றோர் வரதட்சணையாக 7 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.10 ஆயிரம் கொடுத்து உள்ளனர்.


இந்தநிலையில் செல்வி கோபி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்தப்புகாரில், கணவர் குமார் மற்றும் அவருடைய தாய் சரஸ்வதி, தம்பி பிரகாஷ், அக்காள் சத்திய பாமாவாசு மற்றும் உறவினர்கள் பொன்மணி, சம்பூரணம் ஆகியோர் சேர்ந்து தலை பொங்கலுக்கு பெற்றோரின் வீட்டிற்கு சென்ற தன்னை, பெற்றோர் வீட்டில் இருந்து ஏன் மோதிரம் வாங்கி வரவில்லை என்று கூறி சித்ரவதை செய்தனர்.


மேலும் 15 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் வரதட்சணையாக வாங்கி வரும்படி கூறி என்னை கொடுமைப்படுத்தினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்தப்புகார் மனுவில் கூறி இருக்கிறார்.


அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், செல்வியின் கணவர் குமார் மற்றும் மாமியார் சரஸ்வதி, கொழுந்தனார் பிரகாஷ், கொழுந்தியாள் சத்தியபாமாவாசு, பொன்மணி, சம்பூரணம் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


இந்த லிஸ்டில் செந்தழல் ரவி, டோண்டு போன்ற அப்பாவிகள் பெயர்களும் சேர்க்கப்படும் நாள் தொலைவில் இல்லை. அதற்குள் நம் அரசு இந்தப் பொல்லாங்கு சட்டத்தை துஷ்பிரயோகம் (இதற்கு நல்ல தமிழ்ச்சொல் ஒன்று பரிந்துரைத்தால் நன்றியுடையோனாயிருப்பேன்!) பொய் வழக்கு போடமுடியாத வகையில் ஏதேனும் திருத்தம் கொண்டுவந்தால் நல்லது. இல்லையெனில் சீக்கிறமே தமிழ்மணத் திரட்டி முழுதும் 498A ஒப்பாரிதான் கேட்கும்!

கருத்துகள் இல்லை: