வியாழன், 4 ஜூன், 2009

2009-06-04




இந்தியா, மதச்சார்பற்ற நாடாம்!

15 நாள்களுக்கு முன்பு ஆந்திரப்பிரதேச முதலமைச்சரான ராஜசேகர ரெட்டி, நேற்று (புதன் கிழமை) தான் அலுவலகப் பொறுப்பை ஏற்றுத் தம் அலுவலகத்தில் நுழைந்தார். காரணம், அந்த நாள் தான் நிர்ஜல ஏகாதசி நாளாம்.

ஜோசியர்கள் குறித்துக் கொடுத்த நல்ல நேரமான காலை 7.15 மணிக்கு அவர் பொறுப் பேற்றார். அந்த நேரத்தில் தான் அவருக்குச் சாதகமான இடங்களில் நட்சத்திரங்கள் இருந்தனவாம்.

இதற்கும் முன்னதாகச் சர்வமதப் பிரார்த்தனைகள் செய்யப்பட்டனவாம். திருப்பதி வெங்கடாசலபதிக்குப் பூஜையாம். கிறித்துவப் பாதிரி ஒருவர் ஜெபம் செய்தாராம். (கத் தோலிக அல்லது புரொடஸ்டன்ட் அல்லது அதில் இருக்கும் 100க்கும்மேற்பட்ட எந்தப் பிரிவு என விவரம் இல்லை) முசுலிம் முல்லா ஒருவர் நமாஸ் செய்தாராம். இவ்வளவும் செய்த காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லையில்லாது 5 ஆண்டுக்காலத்தை ஓட்டவேண்டும் என்பதற்காகவாம். போதாக் குறைக்குப் பக்கத்தில் உள்ள அனுமான் கோயிலுக்கும் போனாராம்.

கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று செயலகத்திற்கு வந்து அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். அன்றைய நாளில் ஜோசியப்படி 8 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர். பூஜை புனஸ்காரச் சடங்குகளுடன் அமளி துமளியுடன் அலுவல்களைச் செய்தனராம்.

காட்டிலாகா அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி மாலை 5.30-க்குப் பூஜை செய்த பின் அலுவல் அறைக்குள் நுழைந்தாராம். சிறிய நீர்ப்பாசன அமைச்சர் சுனிதா லட்சுமண்ரெட்டி மாலை 4.41 க்கு நல்ல நேரத்தில் நுழைந்தாராம்.

இந்தக் கூத்தில், முதலமைச்சர் மருத்துவம் படித்த டாக்டர் படிப்புக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்பது போல நடந்து கொள்கிறார். மேலும் இவர் கிறித்துவர். இன்னும் ஜாதிப்பட்டத்தை விடாமலும் இந்து மத மூடத்தனமான ஜோசியத்தை நம்பியும் எல்லா மதச் சடங்குகளையும் செய்து அனை வரையும் ஏமாற்றுகிறார். அனைத்து மதக் கடவுள்களையும் கூட கேலிக்கு ஆளாக் குகிறார்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை எப்படி நம்புவதாம்?

------------------"விடுதலை"4-6-2009


More than a Blog Aggregator

by சூர்யா ௧ண்ணன்



இதைப்பற்றி எழுதுவதற்கு ஏதுமில்லை

நடிகர் ஜீவா முதல் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடிக்கும் படம் 'சிங்கம் புலி'.  இப்படத்தின் தொடக்க விழா இன்று ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. படத்தை பற்றி ஜீவா குறிப்பிடுகையில், இதுவரை நான் நடித்த படங்களில் இந்த படம் மிக முக்கியமாக பேசப்படும் என்றார்.  பெரிதாக கெட்டப் எதுவும் இல்லை என்றாலும், இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்படும் என்று உறுதியுடன் கூறுகிறார்.
நடிகர் ஜீவா முதல் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடிக்கும் படம் 'சிங்கம் புலி'.  இப்படத்தின் தொடக்க விழா இன்று ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. படத்தை பற்றி ஜீவா குறிப்பிடுகையில், இதுவரை நான் நடித்த படங்களில் இந்த படம் மிக முக்கியமாக பேசப்படும் என்றார்.  பெரிதாக கெட்டப் எதுவும் இல்லை என்றாலும், இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்படும் என்று உறுதியுடன் கூறுகிறார்.

இதயத்தின் வடிவமைப்பு ஆண், பெண் இரு பாலருக்கும் ஒன்று என்றாலும், ஆண்களைவிட பெண்களின் இதயம் சிறியது.

 பெண்ணின் இதயத்தின் எடை 224 கிராம், ஆணின் இதயத்தின் எடை 280 கிராம் ஆகும். மேலும் இதயத் துடிப்புத் திறன் பெண்களுக்கு 10 சதவீதம் அதிகமாகவும், உடற்பயிற்சியின்போது ஆக்ஸிஜன் பயன்படுத்தும் திறன் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு 15 முதல் 20 சதவீதம் குறைவாகவும் உள்ளது.

மாதவிடாய் நின்றவுடன்...:   பொதுவாக பெண்களைவிட ஆண்கள் 10 ஆண்டு முன்னதாகவே இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் நிலை வரும்போது இதயநோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.

  மாதவிடாய் நிற்கும்போது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மேன் சுரப்பது குறைந்து விடுவதால் இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.

  கருத்தடை மாத்திரை: 1960-ல் தரப்பட்ட கருத்தடை மாத்திரைகளில் புரொஜஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருந்தால், அந்தக் காலத்தில் வயது முதிர்ந்த புகை பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருந்தது.

  ஆனால் இப்போது மருத்துவ முன்னேற்றத்தின் காரணாக கருத்தடை மாத்திரைகளில் ஹார்மோன்களின் அளவுகள் மிகவும் குறைவாக உள்ளதால் இதய நோய் வரும் வயாப்பு குறைந்து காணப்படுகிறது.

  உயர் ரத்த அழுத்தம், புகை பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடு எனும் ஒரு வகை கொழுப்புச் சத்தின் அளவு அதிகமானாலும் இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.

  ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போது "எச்டிஎல்' என்ற நல்ல கொழுப்புச் சத்தின் அளவு குறையும். "எல்டிஎல்' என்ற கெட்ட கொழுப்புச் சத்தின் அளவு அதிகமாகும். இந்த நிலையில் இதயநோய் வரும் வாய்ப்பு பெண்களுக்கு அதிகமாகிறது.

  மருத்துவரை ஆலோசிக்காமல் மருந்துகளை நிறுத்தி விடுவதும் தொடர்வதும் சில பிரச்னைகளை உருவாக்கும். தலைவலி, மயக்கம், மூட்டுவலி அல்லது வீக்கம், மூக்கில் ரத்தம் வடிதல், இருமும்போது ரத்தம் வருதல், மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, அஜீரணம், வயிறு எரிச்சல், குறைவான ரத்த அழுத்தம், தூக்கம் அதிகரித்தல் அல்லது குறைதல், வறண்ட இருமல் போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்

சிறிலங்காவின் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களையும், துயரங்களையும் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை என சிறீலங்கா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரத்.என்.சில்லா கூறியுள்ளார்.நீர்கொழும்பின் மரவிலா, எனுமிடத்தில் நீதிமன்ற வளாகம் ஒன்றை திறந்து வைத்து பேசிய சரத்.என்.சில்வா தனது நிவாரண கிராமங்களுக்கான விஜயத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதன் போது அவர் கூறியவை..

மேலும் வாசிக்க...

கருத்துகள் இல்லை: