வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-16

போர் நடைபெறும் பகுதிகளில் தொற்றுநோய் பரவும் அபாயம் செஞ்சிலுவைக் குழு எச்சரிக்கிறது. இலங்கை : போர் நடைபெறும் பகுதிகளில் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன எனவும் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது எனவும் செஞ்சிலுவை சர்வதேசக் குழு கூறுகிறது. மோதல் பகுதியில் சிக்கியுள்ள பொது மக்கள் அபாயகரமான நிலையில் இருக்கிறார்கள் என்றும் அங்கு குடிதண்ணீர் பற்றாக்குறை நிலவுகின்றமையாலும் அசுத்தமான நீர் அருகி வருவதாலும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் என்று செஞ்சிலுவை சர்வதேசக் குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மொனறாகலவில் இந்திய வம்சாவழி தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். இச்சம்பவத்தையடுத்து இப்பகுதியில் வாழ்ந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள் அச்சம் காரணமாக தமது வீடுகளை விட்டு வெளியேறி காடுகளுக்குள் சென்று மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: