மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்கள் எவ்வித நம்பிக்கையையும் கொண்டிருக்கவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த மேல் மாகாணசபைத் தேர்தல்களின் போது தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை தெளிவாக வெளிப்படுத்தியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் முயற்சிகளை பிரிட்டன் பிரான்ஸ் மற்றும் சுவீடன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் 5 சதுரக் கிலோ மீற்றர் நிலப்பரப்பை மட்டுமே கைப்பற்ற வேண்டிய நிலையில் ஐரோப்பிய நாடுகளது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து மக்கள் உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
|
thiruma
தமிழ் தேசிய ஊடகங்களான சங்கதி, தமிழ்க்கதிர் இணையத்தளங்கள் குறிவைத்து அழிக்கும் கூட்டுச்சதி : தமிழ்த் தேசிய ஊடகங்களை குறிவைத்து கூட்டுச் சதி நடவடிக்கையால் சங்கதி, தமிழ்க்கதிர் இணையத்தள ஊடகங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பு நடவடிக்கையை பல்வேறு ஆதாரங்களுடன் உடனுக்குடன் வெளியிட்டு வந்த இந்த ஊடகங்கள் சிறீலங்கா - இந்தியாவின் கூட்டுச் சதியில் சிதைக்கப்பட்டுள்ளதாக சங்கதி, தமிழ்க்கதிர் பொறுப்பாளர்கள் வாசகர்களுக்கு தெரிவிக்கின்றனர்.
1500 பேர் கொல்லப்பட்டதால் கொசோவா தனிநாடு; 3 மாதத்தில் 7000 பேர் கொல்லப்பட்டும் தமிழருக்கு முடிவு என்ன? மிலிபான்டிடம் த.தே.கூ. கேள்வி : '1,500 மக்கள் கொல்லப்பட்டமைக்காக கொசோவாவை தனிநாடாக்கிய அனைத்துலக சமூகம், இப்போது வன்னியில் மூன்று மாதங்களில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் கைகட்டி பார்த்து நிற்பது ஏன்?" என்று கொழும்பு சென்ற பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியிருக்கின்றது.
ஆரம்பம் முதலே 2006ம் ஆண்டில் இருந்து சிறீலங்கா அரசு யுத்தத்துக்கான முஸ்தீபுகளில் ஈடுபடுவதற்கு இந்தியாவே காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தன. அதற்கு முன்னரும் பின்னரும் விடுதலைப்புலிகளின் கப்பல் அழிக்கப்பட்டதில் இந்தியாவின் பங்களிப்புக்கள் பற்றிப் பேசப்பட்டு வந்தன.
ஆனால் இப்போதுதான் உண்மை வெளிவருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தமிழீழத்தை விட்டு தப்பிக்கவில்லை என்றும் அவர் நீர்மூழ்கி மூலமோ அல்லது வேறு வழியிலோ தப்பிக்க முனைந்திருப்பின் இந்திய ரடார்களும் உளவு விமானங்களும் அவற்றை இனங்கண்டிருக்கும் என்று இந்திய கடற்படையும் கரையோரக் காவற்படையும் தெரிவித்திருக்கின்றன.
விடுதலைப்புலிகளின் நடமாட்டங்களை தொடர்ந்து கண்காணித்து சிறீலங்காவுடன் கூட்டுச் சேர்ந்து ஆயுத ஆளணிப் பங்களிப்புக்களுடன் தமிழர்கள் மீது போர் தொடுத்திருப்பது இந்தியா என்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Prabhakaran could not have escaped from Sri Lanka
Rameshwaram (Tamil Nadu), April 30 (IANS) Banned Liberation Tigers of Tamil Eelam (LTTE) chief V. Prabhakaran could not have escaped from Sri Lanka, an Indian Coast Guard official said here Thursday.
"There is no way Prabhakaran or his aides could have escaped Sri Lanka in a submarine or otherwise because the attempt would have been clearly spotted on our land-based and offshore radars," Coast Guard Commanding Officer S. Janarthanam told reporters at this minor port on the southeast coast, 600 km south of state capital Chennai.
"Moreover with intensified patrolling by our Dornier aircraft, helicopters and fast-moving naval patrol boats… the escape would have been impossible in the past and would be so in the future as well," Janarthanam added.
Reports of Prabhakaran's alleged escape have appeared in the media since January this year.
dailymirror.lk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக