கடந்த 24 நாளாக பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் "தமிழ் மறவன்"; பரமேஸ்வரனால் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் பிரித்தானியா அரசாங்கத்தின் உறுதி மொழியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் Simon Huges பழச்சாறு கொடுக்க தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியா அரசு தனக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் தற்காலிகமாக உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தியுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் தன்னுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரித்தார்.இன்று மதியம் 12 மணியளவில் ஊடகங்களுக்கு உரை வழங்கும் போது பரமேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார்.
பரமேஸ்வரனின் உடல்நிலை மிகவும் தளர்ந்த நிலையில் அவரை பிரித்தானியா அவசர சிகிச்சை பிரிவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அதன் பின் நாடாளுமன்றத்தில் அவர் சில சந்திப்புகளை தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மாணவர்களால் சுழற்சி முறையிலான உண்ணாநிலை போராட்டம் தொடர்கின்றது. பரமேஸ்வரனின் உண்ணாநிலை இடை நிறுத்தப்பட்டாலும் தங்களுடைய போராட்டம் மக்களின் ஆதரவுடன் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.அத்துடன் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் மக்களால் பரமேஸ்வரனின் கூடாரத்தில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை பரமேஸ்வரனின் 5 அம்ச கோரிக்கையை முன் வைத்து ஸ்கொட்லாண்டின் எடின்பறோ நகரத்தில் மக்களால் போராட்டம் நடாத்தப்படுகின்றது.
செய்திகள்: தமிழ்வின்

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் நியூயார்க் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர், "இலங்கையில் தற்போது பாதுகாப்பு வலயம், தாக்குதல் இல்லாத பகுதிகள் என்ற ஒன்றே இல்லை'' என்று தெரிவித்தார். அவர் மேலும், ''இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்தை அறிவித்தால் விடுதலைப்புலிகள் மீண்டு எழுந்து விடுவர் என்ற அச்சத்தில் இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்காமல் இருக்கிறது. TNC
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக