புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29

கவிதை என்ற பெயரில் உயிரெடுப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் கவிதையின் மீதான காதலை இன்னும் கைவிடாமல் இருக்கச் செய்வதற்காகவேனும் கவிதை எழுதுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். மிக எளிய மொழியில் பூடகமோ இசங்களின் அவஸ்தையோ இல்லாமல் நேர்பொருளில் இயல்பாக சொல்ல வந்ததைச் சொல்வது கூட ந்ல்ல கவிதையாக இருக்க முடியுமென்பதற்கு விகடனில் வெளியான செல்வேந்திரனின் இந்தக் கவிதை ஒரு சான்று.


பிரபஞ்ச புரட்சியின் திறவுகோலை தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் இந்த யுக கவிஞன் இத்தகைய சிறப்பைப் பெறுவதற்கு அதி முக்கியமான காரணமென்னவென்று யோசித்துப் பார்த்தால்.. அடடா! செல்வேந்திரனும் நான் பிறந்த அதே சாத்தான்குள்த்தில் பிறந்திருப்பதுதான் காரணம். எல்லாம் சரிதான்! ஆனால் 'என்னைப் புகழ்ந்து ஒரு பதிவைப் போடுங்க அண்ணாச்சி'ன்னு ஒரு நாளைக்கு நூறு கடுதாசி எழுதுறதுதான் எனக்குப் புடிக்கலை.

[] [] [] [] [] []

சமீபத்தில் நடந்த ஒன்று கூடல் நிகழ்ச்சி ஒன்றில் தமிழகத்திலேயே மிகக் குறைந்த வயது சட்டமன்ற உறுப்பினரான 'குத்தாலம்' அன்பழகன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. 28 வயதாகும் அவரிடம் அவருக்குத் தர்மசங்கடமேற்படும் வகையில் பல கேள்விகளைக் கேட்டேன். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அன்பழகன் அதனால் கோபப்படவோ அல்லது முகம் சுருங்கவோ இல்லை. மாறாக மிகுந்த அமைதியோடும் பொறுமையோடும் புன்னகை மாறாமலும் பதில் அளித்தார். இந்த வயதிலேயே அவருக்கிருக்கும் அந்த மனப்பக்குவமும் எதிர் கருத்துக்களைச் சமாளிக்கும் திறனும் பெரும் வியப்பைத் தந்தது. அரசியல்வாதிகள் என்றாலே ஒதுக்கப்பட வேன்டியவரக்ள் என்ற எண்ணத்தைத் திருத்திக் கொள்ளக் கிடைத்த அரிய சந்தர்ப்பம். வாழ்க அன்பழகன்! இவரைப் போன்ற இளைய தலைமுறையினர் வந்தால் நாடு நலம் பெறக்கூடுமென்ற நம்பிக்கை பிறக்கிறது.

[] [] [] [] [] []

வேலூர் தொகுதியில் முஸ்லீம் லீக் சார்பாக எங்கள் துபாயைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார். நிர்வாகத் திறமையும் சொல்லாற்றலும் கொண்ட இவர் வெற்றி பெற வேண்டுமென்பதுதான் எனது அவாவும். ஆனாலும், இன்னமும் முஸ்லீம் லீக் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதுதான் பெரும் உறுத்தல்.

[] [] [] [] [] []

அன்றாடம் எனக்கு வரும் குழும கடிதங்கள் தவிர இன பிற அஞ்சல்களில் பெரும்பான்மையானவற்ரை நான் படிப்பதே இல்லை. குறிப்பாக இதை நீ அவனுக்கு அனுப்பினால் சொர்க்கத்துக்கு நேரடி பயணம்' போன்றவைகளாக இருந்தால் உடனே அனுப்பி விடுவேன் - குப்பைக் கூடைக்கு. இருந்தும் சில மின்னஞ்சல்கள் சுவையாக அமைந்து விடுகின்றன - தற்செயலாகவேனும்.

'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' புதிய பதிப்பை 'அலிபாபாவும் முப்பது திருடர்களும்' என்று கொண்டு வரப் போகிறார்கள். கேட்டால்.. பொருளாதார மந்த நிலை என்கிறார்கள்.

"அமெரிக்கனுக்கும் ஸிம்பாப்வேயபனுக்கும் என்ன வித்தியாசம்?"
"இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் ஒரு வித்தியாசமும் இருக்காது"

[] [] [] [] [] []
இதற்கு முன் போட்ட பதிவில் படம் பெரிதாகாமையால் பலர் ஏப்ரல் 1 என நினைத்துவிட்டனர். இப்போது படங்களின் லின்க்கைத் தருகிறேன்.

தமிழில் வெளிவரும் ஏடுகளில் நடுநிலையான ஒரே ஏடு துக்ளக்தான் என்பது பெரும்பான்மையானோரின் நம்பிக்கை. ஆனால், விகடன் குமுதம் போன்ற விற்பனை உத்திகள் கைவராததால் வெளிநாடுகளில் இந்த ஏடு கிடைப்பது அபூர்வமே.

சென்ற சில வருடங்களாக துக்ளக் இணையத்தில் கிடைத்தாலும், இணையதள சந்தா அதிகமாக (20$ வருடத்திற்கு) இருப்பதால் படிப்பது கஷ்டமாகவே இருந்துவந்தது.

இந்நிலையில் தெரிந்தவர் ஒருவர் ஒரு சுட்டி கொடுத்தார். இலவச தளம்தான். ரெஜிஸ்ட்ரேஷன் கூட தேவையில்லை.. எல்லாவற்றையும்விட, இந்தத் தளத்தின் வேகம் ஆச்சரியப்படவைத்தது. சில வேளைகளில் அதிகாரபூர்வ வலைத்தளத்தைவிடவும் முன்னரே இங்கே அட்டைப்படங்கள் கிடைத்துவிடுகின்றன.

இந்த சுட்டியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு முன் தார்மீகரீதியாக இது சரிதானா என நிறையவே யோசித்தேன். கடைசியில் குடும்பத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்வது தவறாகாது என்பதால் வலைக்குடும்பத்துடன் சில அட்டைப்படங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.
ஏப்ரல் ஒன்றாம் தேதியில் முட்டாள் ஆனது நான் தான் :-( படங்கள் பெரிதாகாத முதல் பதிவினால் சொதப்பிவிட்டது.
துக்ளக் வெவ்வேறு நிலைமாற்றங்களுக்கு எப்படி அட்டைப்படம் போடும் என்பதுதான் கான்செப்ட்!
படம் 1 - 15/05/09, ஜ மு கூ வென்றால்:


படம் 2 : மூன்றாம் அணி வென்றால்:

படம் 3 : தே ஜ கூ வென்றால்:




- செல்லமுத்து குப்புசாமி



























































சித்த மருத்துவம் பற்றிய அருமையானதொரு பதிவு...இங்கே க்ளிக்


சில கயவாளிகள் அநாகரீக கமெண்டுகளை போடுவது போல் தெரிகிறது. அண்ணன் உண்மைத்தமிழனில் இருந்து பரிசல்காரன் வரை இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

என்னுடைய எண்ணம், பழைய நபர்கள் இந்த செயலை செய்ய துணியமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். தமிழக போலீசாரின் திறமை பற்றி...

நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால்...பழைய தமிழ் இணைய வரலாறு தெரியாமல் தேன் கூடுகளில் கை வைக்கிறீர்கள். தமிழக சைபர் க்ரைம் சிறப்பாக செயல்படுகிறது.

கூகிளில் நிறுவனத்தில் இருந்து ஸ்கைப் நிறுவனம் வரை தமிழக போலீஸ் கேட்கும் தகவல்களை உடனே தர தயாராக உள்ளது.

போலீசார் கேட்கும் தகவல்கள் உடனுக்குடன் மின்னஞ்சலில் ஓடிவருகிறது. இந்த நிறுவனங்களில் இதற்கென தனி குழு பணியாற்றுகிறது.

நீங்கள் ப்ராக்ஸி உபயோகப்படுத்தினாலும் சரி, ப்ரவுசிங் செண்டர் கணிப்பொறியில் இருந்து திருட்டுத்தனம் செய்தாலும் சரி, கண்டிப்பாக மாட்டிக்கொள்வீர்கள்.

ஆர்க்குட்டில் ஏற்கனவே இதுபோன்ற பல விஷயங்கள் நடந்தாலும், தமிழ் இணைய உலகில் இருப்பவர்கள் இந்த விஷயங்களை ஏற்கனவே வெற்றிகரமாக முறியடித்துள்ளார்கள்.

சிறைத்துறை ஐ.ஜியில் இருந்து ஐ.ஏ.எஸ் ஆபீஸர் வரை தமிழ் இணைய தளங்களை பார்வையிடுகிறார்கள். அரசியல்வாதிகளில் இருந்து பெரிய மனிதர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் குழுமும் இடமாக இணைய உலகு மாறிவிட்டது.

அதனால் உங்கள் சில்லுண்டித்தனங்களை விட்டுவிட்டு மாறிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் மாற்றப்படுவீர்கள். மீண்டும் சொல்கிறேன், எந்த இணையம் 100 சதவீதம் பாதுகாப்பில்லை என்று நினைத்து இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகிறீர்களோ, அதே இணையம் உங்களுக்கும் 100 சதவீதம் பாதுகாப்பில்லை.

இது இருபுறமும் கூரான கத்தி என்பதை உணருங்கள். ஒரே நாளில் உங்கள் வீடு தேடி போலீஸ் வரும். தயவுசெய்து திருந்திக்கொள்ளுங்கள் என்று சொல்லி முடிக்கிறேன்...


More than a Blog Aggregator

by செந்தழல் ரவி

இனி அந்த காங்கிரஸ் கட்சியோடு ஒருநாளும் கூட்டணியில்லை என்று உண்ணாவிரத மேடையில் நீ முழங்கியபோது...

அட...இவனல்லவா என் தலைவன்...என்று இதயத்தில் உன்னை வைத்தேன்...

ஆனால் இன்றைக்கு...

மிஸ்டர் தங்கபாலு, ஐயாம் Sorry...

காங்கிரசோடு என்றைக்கும் எனக்கு மோதல் இல்லை..

மூப்பனார்தான் என்னை அரசியலுக்கு அழைத்துவந்தார்...

காங்கிரசு உதவியோடு மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்...

என்றெல்லாம் சொல்கிறாயே ?

நீயும் சராசரி அரசியல்வாதிகளில் ஒருவன் தானோ ??

ஆகட்டும்...

ரத்தம் தோய்ந்த அந்த "கை" உன்னை எவ்வளவு தூரம் கூட்டிச்சென்றாலும் பரவாயில்லை...

இனி அரசியல் ஸ்டேட்மெண்டுகள் விடுவதை நிறுத்திக்கொள்..!!!

கருத்துகள் இல்லை: