அப்பாடா ஒரு வழியாக நானும் விகடனில் வந்தாச்சு... பல பேர் இதேபோல பதிவை போட்டிருப்பாங்க அதை எல்லம் படிக்கும் போது என்னடா நம்ம பதிவு எப்படா விகடன்ல வரும்னு நினைப்பேன். வந்துருச்சு... ரொம்ப நன்றி விகடன் தாத்தா. எனக்கு ஆதரவு அளித்த உங்களுக்கும் கோடானகோடி நன்றிகள்.
யூத்ஃபுல் விகடன் பக்கம் செல்ல கிளிக்குங்கள்

மேகம்
உள்வாங்கிச் சேகரித்த நீரும்
செலவழித்த சில்லறை மழையும்
கடல்
கொண்டு சேர்க்கும் அலையும்
திருப்பி எடுத்துப் போகும் அலையும்
பேசிச் சேகரித்த நேரமும்
சண்டையில் தொலைத்த நேரமும்
தூங்கிச் சேகரித்த கனவுகளும்
தூங்காமல் தொலைத்த இரவுகளும்
சிரித்துச் சேகரித்த நட்புகளும்
அழுது தொலைத்த உறவுகளும்
மனம்
அள்ளிச் சேகரித்த அன்பும்
துள்ளிச் செலவழித்த அன்பும்
கடந்து போன பகல்களும்
கரைந்து போன இரவுகளும் போல்
எப்போதும் சமன்பாடு சரியாகுவதில்லை
ஆனாலும்
எப்போதும் போல் மீண்டும்
செலவழிக்கவும் சேகரிக்கவும்
தயாராகினேன்......
ஐ.நா சபையில் இலங்கை பற்றிய உரையாடல் இன்று நடைபெறுவதால், சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா சபையின் முன்றலில் முன்பாக சுமார் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடி, ஜஅடங்காப்பற்று' எனும் குறியீட்டுப் பெயருடன், கவனயீர்ப்பு நிகழ்வொன்றினை நடாத்திக்கொண்டிருக்கின்றனர். இலங்கையில் உடனடி யுத்த நிறுத்தினை வலியுறுத்தி ஐ.நா நடவடிக்கை எடுக்குமாறு, கோரிக்கையினை முன்வைத்து இக் கண்ணடன கவனயீர்ப்ப ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
- இன்று பழைய படங்கள் பலவற்றை ரீமேக் செய்வதைப் பார்க்கிறோம். சில படங்களை இன்ஸ்பிரேசன் என்று கூறுவார்கள். ஆனால் 80 களில் வெளீயான சில திரைப் படங்கள் அதற்கு முந்தைய கால படங்களீன் ரீமேக், ஆனால் புதிதாக வந்தது போல் வந்தன்.
1.புதுமைப் பித்தன் VS நானும் ஒரு தொழிலாளி- MGRன் படத்தில் தந்தை மன்னர். மகன் வெளி நாடு சுற்றுப் பயணத்தில் இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக கதைகட்டி அவரை மறைத்து வைத்து பத்திரத்தில் கையொப்பம் கேட்டு கொடுமைப் படுத்துகின்றனர். மகன் வந்து மாறுவேடத்தில் மறைந்திருந்து உண்மைக் கண்டறிகிறார்.
- நானும் ஒரு தொழிலாளீயில் தந்தை முதலாளி. மகன் வெளி நாடு சுற்றுப் பயணத்தில் இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக கதைகட்டி அவரை மறைத்து வைத்து பத்திரத்தில் கையொப்பம் கேட்டு கொடுமைப் படுத்துகின்றனர். மகன் வந்து மாறுவேடத்தில் மறைந்திருந்து உண்மைக் கண்டறிகிறார்.
- 2.பெரிய இடத்துப் பெண் & சகலகலாவல்லவன்
பெ. இ. பெ.வில் நாயகன் கிராமத்தான்.குடுமிக்காரன், பட்டணத்துக் குடும்பம் வருகிற்து. அவரது முறைப் பெண்ணை ஏமாற்றி கல்யாணம் செய்கிறார்கள். அக்காவை சீரழித்து விடுகிறார்கள். நாயகன் குடுமை வெட்டி ஸ்டைலாக நகரத்திற்கு சென்று அந்த்க் குடும்பப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு உண்மைகளை கண்டறிந்து ஊருக்கு உணர்த்துகிறார் - ச.க.வ..வில் நாயகன் கிராமத்தான்.குடுமிக்காரன், பட்டணத்துக் குடும்பம் வருகிற்து. அவரது சொத்தை ஏமாற்றி விடுகிறார்கள். தங்கைவயை சீரழித்து விடுகிறார்கள். நாயகன் குடுமை வெட்டி ஸ்டைலாக நகரத்திற்கு சென்று அந்த்க் குடும்பப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு த்ங்கைக்கும் வாழ்க்கைக்கும் உறுதி செய்து உண்மைகளை கண்டறிந்து ஊருக்கு உணர்த்துகிறார்.
- அன்று வந்ததும் அதே நிலா பாடல் இன்று வந்தபோது இளமை இதோ, இதோ
- 3.படிக்காத மேதை & பேர் சொல்லும் பிள்ளை
இதனைப் பற்றி பலரும் பேசிவிட்டதால் ரீமேக் ஒரளவு வெளியே தெரிந்து விட்டது. - 4.உத்தம புத்திரன் & 23ம் புலிகேசி
அதே இரட்டை பிள்ளைகள், அதே மாமன், அதே போல் ஒரு குழந்தை கடத்தப் படுகிறது. ஒரு பிள்ளை மாமன் சொல் கேட்டு வளர்ந்து யாரடி நீ மோகினி பாடுகிறார். இதில் ஆடிவா தேடிவா பாடுகிறார். இன்னொரு பிள்ளை சொந்த புத்தியுடன் வளர்ந்து தம்பியை சிறையில் தள்ளி மாமணைத்திருத்தி நாட்டை மீட்டு தம்பியைத்திருத்தி கடைசியில் சுபம். - இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷ்யம். முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையும் சமுதாய சீர்திருத்த கருத்துக்களும் இது கண்டிப்பாக வர வேற்கத்தகுந்த ஒன்று.
- எங்க வீட்டுப் பிள்ளை கூட மேலே சொன்ன கதைதான் அது முற்றிலும் கண்ணாடி பிம்மம் போல் ரீமேக் செய்யப் பட்டுக் கொண்டேஏஏஏ இருக்கிறது
from Mathan V
to charunivedita@charuonline.com
date Fri, Feb 20, 2009 at 8:49 AM
subject ப்ரிய சாருவுக்கு..
ப்ரிய சாருவுக்கு,
ஒரு வாசகன் எழுதிக்கொள்வது.
தங்கள் நேரத்தை வீணாக்காமல் விஷயத்தை சொல்லிவிடுகிறேன்.
நான் முன்பே ஓரிரு முறை தங்களுடன் மின்னஞ்சலில் தொடர்பிலிருந்துள்ளேன்.
நான் முதன்முதல் எழுதிய கதைக்கு 'beautiful story' என்று நீங்கள் அனுப்பிய Reply எனக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருந்தது என்று உங்களுக்கு நான் எழுதிய நன்றிக் கடிதத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.
என் சில கவிதைகள் மற்றும் ஒரு சிறுகதை ஆகியன உயிரோசையில் பிரசுரமாகியுள்ளன. தங்கள் நேரம் அனுமதியாது என்று தெரிந்தும், லிங்க் அனுப்புகிறேன். ஒருவேளை தாங்கள் படித்து உங்கள் கருத்தைத் தெரிவித்தால், உருப்படியான எழுத்தை நோக்கி நகர எனக்கது உதவியாயிருக்கும் என்ற ஒரு நப்பாசையில்.
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=866
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=816
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=787
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=726
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=897
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=956
அன்புடன்,
மதன்
பதில் கடிதம்:
அன்புள்ள மதன்,
படித்தேன். இந்த முறையும் உங்கள் சிறுகதை பிடித்திருந்தது. கவிதைகளில் பயணச் சிதைப்பு, நான் ரௌத்திரன், பிரிதலின் வன்பிடியுள் மூன்றும் பிடித்திருந்தன. முகம் மாற்றல்கள், குழப்பத் தீர்வுகள் இரண்டும் பிடிக்கவில்லை. பிடித்தது, பிடிக்காதது இரண்டுக்குமே காரணம் தெரியவில்லை.
கவிதைகளில் அக நானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், சித்தர் பாடல்கள், பாரதி போன்றவைகளைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கம்ப ராமாயணம் படித்திருந்தால் இன்னும் உத்தமம். நவ கவிதையில் தேவதச்சன், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், அபி, பிரம்மராஜன், தேவதேவன், தர்மு சிவராமு, நகுலன், கலாப்ரியா, எஸ். வைதீஸ்வரன், சேரன், மனுஷ்ய புத்திரன் போன்றவர்களைப் படிக்கலாம்; படிக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் அநேகம் பேர் உண்டு. என்றாலும் பாப்லோ நெரூதா, ரில்கே, ஒக்தாவியோ பாஸ், ஆலன் கின்ஸ்பெர்க் ஆகியோரைப் படிக்க வேண்டியது கட்டாயம். அதிலும் ஆலன் கின்ஸ்பெர்கின் ஹௌல் என்ற கவிதையைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்ல வேண்டும்.
இவற்றையெல்லாம் ஏற்கனவே படித்திருந்தால் கோபித்துக் கொள்ளாதீர்கள் மதன். சில நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கட்டுமே என்றுதான் எழுதியிருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
20.2.2009.
2.45 p.m.
from Mathan V
to charunivedita@charuonline.com
date Sat, Feb 21, 2009 at 6:04 PM
subject Re: ப்ரிய சாருவுக்கு..
சாருவுக்கு,
தங்கள் நேரம் செலவழித்து, அனுப்பியவற்றைப் படித்துவிட்டு, கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நீங்கள் பட்டியலிட்டவைகளுள் பாரதியும், மனுஷ்யபுத்திரனையும் தவிர வேறு எதையும் மற்றும் யாரையுமே படித்ததில்லை. கண்டிப்பாகப் படிக்கிறேன். அப்படியே படித்திருந்தாலும், எதற்காகக் கோபப்பட வேண்டும்?
என் பொருட்டு நீங்கள் பகிர்ந்துகொண்டவைகள், என்னைப் போன்ற இன்னும் சில நூறு பேருக்கும் உபயோகப்படும் என்பதில் எனக்கு சந்தோஷம் கூடுகிறது.
உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி.
ப்ரியத்துடன்,

பொய் என்பது கள்ளம் என்பதோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் அதுவே பொய் என்று நான் கொள்வேன்.
அன்பே உன் நாணம்
கோடி நிலாக்களின்
ஊர்வலம்
என்று காதலன் காதலியைப் பார்த்துச் சொல்லும்போது அது பொய்யல்ல. அவன் மன உணர்வுகளின் இலக்கிய வடிவம்.
ஒரு ஊரில் ஒரு ராஜ குமாரி இருந்தாளாம் என்று ஆரம்பித்து கற்பனையின் உச்சம்வரை செல்லும் கதாசிரியன் பொய் சொல்லவில்லை. தன் கற்பனையை இலக்கியமாக்குகிறான்.
நீ ஒரு வாய் வாங்கிக்கலேன்னா நான் அந்த நிலாவுக்குக் கொடுத்துடுவேன் என்று ஒரு தாய் சொல்வது பொய்யல்ல. உணவு ஊட்டுவதற்கான அளவற்ற பாசம்.
காந்தியின் கதை முழுவதையும் மூன்று மணி நேரத்தில் ஒரு படமாக எடுத்துக் காட்டியது பொய்யல்ல. திரைக்கலை. காந்தி தூங்கி எழுந்திருக்கவே குறைந்தது ஆறு மணி நேரம் ஆகும், பிறகு எப்படி அவர் கதையை மூன்றுமணி நேரத்தில் சொல்லமுடியும்?
இதுபோன்ற பொய்கள் ஏராளம். அவை யாவுமே பொய்களல்ல.
உண்மையான பொய் என்பது கள்ளம் நிறைந்தது.
அதே காதலியிடம் கள்ளன், உன்னை கல்யாணம் செய்துகொள்கிறேன் இது உன் மீது சத்தியம் ஆகவே இப்போ.... அவசரமா.... என்று கள்ள உள்ளத்தோடு காமம் தேடுகிறவன் சொல்வது பொய். சொல்லும்போதே அவன் அறிவான் அது பொய் என்று.
ஆகவே நோக்கமே ஒரு விசயத்தை பொய்யாக மாற்றுகிறது.
பெண்டாட்டியை ஏமாற்றுவதற்காக, அலுவலகத்தில் இன்று ஆடிட் என்று கூறுவது பொய்தான்.
இலக்கியர்களும் கலைஞர்களும் சொல்வதும் செய்வதும் பொய்யெனக்கொள்வது கற்பனையையும் உணர்வுகளையும் அவமதிப்பதென நான் நினைக்கிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக