என்னை அடக்கிவிட்டு
நான் மறந்த நிலையில்
என்னயே ஆட்சி செய்கிறது.
சில உணர்வுகளை
மூளை சரி செய்யமுன்
முந்திக்கொள்கிறது
அந்த நச்சுப் பிசாசு.
காறித் துப்பும் அளவிற்கு
காழ்ப்பு வார்த்தைகள்.
எங்குதான் கற்றுக்கொண்டதோ !
மின்னலின் வேகத்தோடு
மனக் கதவை மூடிவிட்டு
அள்ளிக் கொட்டிவிட்டு
ஆசுவாசமாய் மூச்சுவிடுகிறது.
அறுத்து எறிதலே நல்லதோ !
பார்வைகளில்
பட்டு எரிவது நானல்லவா.
கட்டித்தான் வைக்கிறேன்.
பட்டென்று கட்டவிழ்த்து,
மண்டியிட்டாலும்
மீண்டும் பொறுக்கமுடியா
பித்தப் பேச்சால் பச்சை குத்திவிட்டு,
மனதை முறித்துவிட்டு
முழுசுகிறது என்னைப் பார்த்து.
பசப்பிப் பம்முகிறது !
சொந்தங்களை...நட்புக்களை
பிளந்த பூமியாய், உடைந்த வானமாய்
கசப்பு வார்த்தைகளால் கீறி
உப்பும் தேய்க்கிறது.
நினைக்கவே நெஞ்சு வலிக்க
எத்தனை உறவுகள் தூரமாகிப் போனது.
இடியும் விழாதோ தலையில் !
தூக்கத்திலும் விழித்துக்கொண்டு
காவல் இருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை
மனதைக் குதறும் அந்தக் குரங்கு
எழும்பி எகிறாதபடிக்கு.
கறையான் கூடு கட்ட
பாழாய்ப்போன அந்த நாக்கில் !!!
ஹேமா(சுவிஸ்)
தேவையானவை:
சேமியா 2 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 2
தக்காளி 3
பீன்ஸ் 15
காரட் 3
பச்சை பட்டாணி 1/2 கப்
-----
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:
பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை .
----
எண்ணைய்,உப்பு தேவையான அளவு
செய்முறை:
வெறும் வாணலியில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்
வெங்காயம்,பீன்ஸ்,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் நன்றாக பேஸ்டு மாதிரி வதக்கிக்கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பச்சைமிளகாய்,துருவிய காரட்,பீன்ஸ்,பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்க்கவும் காய்கறிகள்நன்றாக வதங்கியவுடன் தக்காளி பேஸ்டு
சேர்க்கவும்.தேவையான அளவு உப்புடன்,இஞ்சிபூண்டு விழுது,மஞ்சள் தூள்,தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து 4 கப் தண்ணீர் விடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும்.
பொல பொல வென்று வந்ததும் இறக்கவும்.
வேணாம் பாஸ்..!
சொன்னாக் கேளுங்க...!
இதை தயவு செஞ்சி பாக்க வேண்டாம்...!
சொன்னாக் கேக்க மாட்டீங்க..!
சரி..! OK..! பாத்துக்கங்க..!
நாம சின்ன வயசுல இருந்தே, "இதைச் செய்ய்யாதே..! அதைச் செய்ய்யாதேன்னு..!"
"இங்க போகாதே..! அங்க போகாதேன்னு..!"
எப்படியெல்லாம்... எதிர் மறைக் (Negative) கட்டளைகளால் சூழப்படுகிறோம்...
அதை நாம எப்படி எதிர்கொள்கிறோம்ங்கறதை விளக்குவதற்க்காக மனோதத்துவ நிபுணர் "டெரன் பிரவுன்"- ங்கறவரு நடத்திக் காட்டிய பரிசோதனையின் வீடியோக் காட்சிதான் அது.
அந்த சின்னப்பசங்க கிட்ட ஒரு பெட்டியக் காட்டி...
இது்லக் கைய வச்சிராதீங்கன்னு... திரும்பத் திரும்ப சொன்னப்பறம் அவங்க என்ன பண்ணினாங்க...?
அப்புறம் என்ன நடந்திச்சு..?-ங்கறதைத்தான் நீங்க வீடியோவுல பாத்தீங்க.
சரி...! நான் ஒண்ணு சொல்றேன்.
"இப்ப நீங்க நீல நிறத்தைப் பத்தி நினைக்கக் கூடாது-ன்னு" நான் சொன்னா...
முதல்ல உங்க மனசுல நீல நிறத்தை நினைச்சுப் பாத்துட்டுத்தான், அதை நினைக்காம இருக்க முயறசி பண்ணுவீங்க.
சரியா..?
இன்னொரு உதாரணம்:
"நான சிகரெட் பிடிக்கக் கூடாது-ன்னு நீங்க நினைச்சீங்க-ன்னா...,"
முதல்ல உங்களுக்கு சிகரெட் நினைப்பு வந்து... அப்புறம்தான் அது வேணாம்-ன்னு நினைப்பீங்க.
இப்ப என்ன ஆகும்- ன்னா... ஆல்ரெடி உங்களுக்கு நீங்களே சிகரெட்டை நினைவுபடுத்திட்டீங்க.
அப்புறமென்ன..?
இன்னேரம் புகை பிடிக்கறதுக்கான முஸ்தீபுல இறங்கியிருப்பீங்க. (புகைப் பழக்கம் உள்ளவர்கள் மட்டும்.)
பைக்ல வெளிய கிளம்பறீங்க.
"இன்னிக்கு எந்த விபத்தும் நிகழக் கூடாதுன்னு" நினைச்சிட்டே போனீங்கன்னா...
கண்டிப்பா ஒரு சின்ன சிராய்ப்போடயாவது வீடு திரும்புவீங்க.
(ஏன்னா நீங்கதானே விபத்தை உங்க நினைப்புலயே கொண்டு போறீங்க?)
ஆக நம்ம மனசை...
நமக்கு எது தேவையோ... அதை நினைக்க பழக்கணும்.
தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை விலக்கி...
அங்கே நமக்குத் தேவையான நேர்மறைச் சிந்தனைகளை நிரப்ப வேண்டும்.
"இன்னிக்கி நான் பாதுகாப்பாய் பைக்ல போய் வருவேன்-ன்னு நினைச்சுட்டே வண்டிய எடுங்க."
Relace your Negative thoughts by Positive thoughts.
எப்படி...?
அடுத்த பதிவுல இன்னும் விரிவா பாப்போம்.
"நன்றி: இங்க இருந்துதாங்க பாஸ...,் இந்த வீடியோவைச்் சுட்டேன்.
ஹி..! ஹி..! ஹி..!"
பதிவப்படிச்சுட்டு நல்லா இருந்திச்சுன்னா... பின்னூட்டம் போட்டே ஆக வேண்டிய கட்டாயமில்லை பாஸ். ஜஸ்ட்... மேல தமிழ்மண கருவிப்பட்டைல கட்டைவிரல் மேல இருக்க இடத்துல ஒரு தடவை க்ளிக் பண்ணுங்க. போதும். (அதுக்காக பின்னூட்டமே வாணாம்-னு அர்த்தமில்லை. விரும்பினால் போடுங்க. சரியா..?)
"அப்படியே இங்க க்ளிக் பண்ணி இந்த பதிவையும் படிச்சுப்பாருங்களேன். (விரும்பினால்)"
Even though government and the local and International NGOs are trying there maximum to cater this people,
It has gone beyond the control and people are dying of starvation.
To get to know the real picture of this situation, Log On:
http://www.inllanka.com/infonation/news/more_news.asp?ty=lo&id=6538
Please spread this message to maximum people as possible and get their attention to safeguard these people from dying of starvation.
We are now trying our best to collect dry food items, water bottles and money to buy those items in large scale. Those things will be sent through Lion's Club, Sevalanka NGO & Social Service Ministry and we will make sure the distribution.
If anyone interested to feed this people to prevent them from dying of starvation, please contact me asap.
Its an urgent help in need
Rgds
K.Rushangan
Director
KISS
Knowledge Information & Skills Sharing
Journalists - LankaEwatch
www.lankaewatch.com
தொடர்ச்சியாக உயிரோசை, நவீன விருட்சம், மற்றும் சில வலைத்தளங்கள் அவர்களாகவே விரும்பிக் கேட்டுப் பிரசுரம் செய்வது என துவக்க நிலையிலேயே பிரமிப்பூட்டுகிறார். இவர் அடையக் காத்திருக்கும் வெற்றிகள், உச்சம் வெகு தொலைவிலில்லை. அனேகமாக, வருகிற புத்தகக் கண்காட்சியில், இவரின் தொகுப்பு கிடைக்கப் பெறலாம்.
அசந்து போனாலும்
நீட்ட முடிவதில்லை
எனது அறையில்.
புத்தகங்களாலும்
தாள்களாலும்,எழுத்துக்களாலும்
நிறைந்தது எனது அறை.
பள்ளிப் பருவத்தில்
விமலாவுக்கு
செய்து தந்த சத்தியம்
இப்படி என்னைத் தடுக்கிறது.
புத்தகங்களை,எழுத்துக்களை
மிதிக்கக் கூடாதாம்
அவைகளை நோக்கி
கால்களை நீட்டக் கூடாதாம்
சரசுவதியாம்
படிப்பு ஏறாதாம்
இன்று இவைகளை
நம்ப மறுத்தாலும்
விமலாவின் நினைவு
நெருடுகிறது.
கால்களைத் தூக்கி
தலைமேல் வைத்துக்கொள்ளுங்கள்
என்கிறாள் என் மனைவி
என் தலையெழுத்தை
அறியாமல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக