வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-16



More than a Blog Aggregator

by T.V.Radhakrishnan


More than a Blog Aggregator

by ஆர். முத்துக்குமார்
நிற்பதற்கு ஆள்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக காங்கிரஸ் கட்சிக்கு பதினாறு தொகுதிகள் வாரி வழங்கப்பட்டது அநியாயத்தின் உச்சம். தற்போது மீண்டும் ஒரு அநியாயம் நிகழ்ந்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய நாளுக்குள் வேட்பாளர்களை அறிவித்து விட்டால் யதேஷ்டம் என்றுதான் எல்லோருமே நினைத்தனர். இதோ பட்டியல்.

1. சேலம் - கே.வி. தங்கபாலு.
2. சிவகங்கை - ப.சிதம்பரம்.
3. ஈரோடு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
4. திண்டுக்கல் - என்.எஸ்.வி.சித்தன்.
5. கோவை - ஆர்.பிரபு.
6. திருப்பூர் - கார்வேந்தன்.
7. ஆரணி- எம். கிருஷ்ணசாமி.
8. திருச்சி - சாருபாலா தொண்டைமான்.
9. தேனி - ஜே.எம். ஆரூண்.
10. மயிலாடுதுறை - மணிசங்கர அய்யர்.
11 நெல்லை - ராமசுப்பு.
12 விருதுநகர் - சுந்தர வடிவேல்.
13 தென்காசி - வெள்ளைப்பாண்டி.
14. கடலூர் - கே.எஸ்.அழகிரி.
15.புதுச்சேரி - நாராயணசாமி.

(காஞ்சிபுரத்துக்கு அநேகமாக பத்து பதினைந்து தினங்களில் வேட்பாளர் யாரென்று அறிவிக்கப்படலாம்)

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் பழமை வாடை அளவுக்கு மீறி வீசுகிறது. சேலத்துக்கு தங்கபாலு, சிவகங்கைக்கு சிதம்பரம் என்று அதே பழைய ஆசாமிகள். என்னை மிகவும் வெறுப்படையச் செய்த வேட்பாளர்கள் இருவர். ஒருவர், திண்டுக்கல் வேட்பாளர் என்.எஸ்.வி. சித்தன். காமராஜர் காலத்தில் இருந்து இவரைத் தவிர யாரையுமே வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தயாராக இல்லை. இது ஏனென்று தெரியவில்லை. அத்தனை இளைஞர் பஞ்சமா திண்டுக்கல் காங்கிரஸில்.

அடுத்தவர், மணிசங்கர் அய்யர். 1991ல் அவரைத் தொகுதிக்குள் யாரென்றே தெரியாது. ராஜிவின் நண்பர், காருகுடி பூர்விகம். இந்த இரண்டு சங்கதிகளை வைத்துத் தேர்தலில் போட்டியிட்டார். ராஜிவ் கொலைக்குப் பிறகு வெற்றி சுலபமானது. பிறகு 1996ல் த.மா.கா வேட்பாளர் பி.வி. ராஜேந்திரனிடம் தோற்றார். 1998ல் மீண்டும் த.மா.கா வேட்பாளரிடம் தோற்றார். அதன்பிறகு 1999, 2004ல் தொடர்ந்து வெற்றி பெற்றார். (இடையில் சீட் கொடுக்க காங்கிரஸ் மேலிடம் மறுத்தபோது சுயேட்சையாக மணி சின்னத்தில் நின்று தோற்றிருந்தார்.) இந்த தேர்தலிலும் இவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனில், தேர்தலில் போட்டியிட உள்ளூரில் ஒரு காங்கிரஸ்காரர்கூட இல்லையோ?

ஹைதராபாத்: சாலை விபத்தில் காயமடைந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஸ்டிரெச்சரில் வந்து ஓட்டுப் போட்டார்.

அவருடன் அவரது தாயாரும் உடன் வந்தார். தெலுங்கு தேசம் கட்சிக்காக தீவிரமாக பிரசாரம் செய்தவர் ஜூனியர் என்.டி.ஆர். அப்போது சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

இருப்பினும் கண்டிப்பாக தான் ஓட்டுப் போடுவேன் என கூறியிருந்தார்.

அதன்படி மெகதிப்பட்டனத்தில் உள்ள செயின் ஆன் பள்ளிக்கு அவர் ஸ்டிரெச்சரில் வந்தார். பின்னர் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட அவர் ஸ்டிரெச்சரில் படுத்தபடியே வாக்களித்தார்.

மார்ச் 26ம்தேதி ஜூனியர் என்.டி.ஆர். விபத்தில் சிக்கினார். அதன் பின்னர் 15 நாட்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர் படுக்கையில் படுத்தபடியே தெலுங்கு தேசம் கட்சிக்காக பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்திரன் படத்துக்காக ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, ஒரு தெலுங்குப் படத்தை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார்.

'சைத்ரம் - த சீஸன் ஆப் லவ்' எனும் அந்த தெலுங்குப் படத்தை ராஜு உபதி இயக்குகிறார். விஜய் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் சூர்யா எனும் புதிய ஹீரோ அறிமுகமாகிறார்.

ரஜினியுடன் இந்த விழாவுக்கு வந்த இயக்குநர் ஷங்கர், படத்தின் முதல் காட்சியை இயக்கினார்.

இந்தப் படத்தின் இயக்குநர் ராஜு ஏற்கெனவே இரு படங்களை இயக்கியுள்ளார். இந்த விழா குறித்து நிருபர்களிடம் தயாரிப்பாளர் விஜய் கூறியதாவது:

"சூப்பர் ஸ்டார் ரஜினி வந்ததால் பிரமாண்ட படத்துக்கு இணையான பெருமையைப் பெற்றுள்ளது. அவர் தமிழுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. தென்னிந்திய சினிமாவுக்கே அவரால் பெருமை", என்றார்.

ஒரே அரங்கில் ரஜினி, கமல் மோகன்லால்!

இதற்கிடையே, ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி இப்போது சூப்பர் ஸ்டார்கள் மையம் கொண்டுள்ள இடமாகிவிட்டது.

எந்திரன் படத்துக்காக ஒரு பக்கம் ரஜினி, உன்னைப் போல் ஒருவன் படத்துக்காக மறுபக்கம் கமல், மோகன் லால் என உச்ச நட்சத்திரங்கள் குவிந்திருப்பதால், அவர்களைக் காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளார்களாம். ரஜினி, கமல், மோகன்லால் மூவருக்குமே ஹைதராபாதில் பெரும் ரசிகர் கூட்டம் இருப்பதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் செக்யூரிட்டிகள் திணறுகிறார்களாம்.

ரசிகர்கள் தவிர, திரையுலக, அரசியல் பிரபலங்கள் பலரும் ரஜினியைக் காண வந்தவண்ணம் உள்ளார்களாம்.

ஆனால் இதை ஒரு சலிப்புக்குரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல், நல்ல சகுனமாகப் பார்க்கிறார்கள் ஸ்டுடியோ நிர்வாகத்தினர்.

"இது நிச்சயம் சந்தோஷமான விஷயமே. கலைஞர்கள் மொழிகளைத் தாண்டியவர்கள் என்பது ஒருபுறமிருக்க, மக்களின் இந்த ஆர்வம்தான் சினிமா தொழிலை நீண்ட நாளைக்கு வாழ வைக்கும். மக்கள் வருவதை நாங்கள் தடுக்கவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் பலப்படுத்தி வைத்துள்ளோம். மக்களை விரட்டிவிட்டு வெறும் கொட்டகையிலா படம் ஓட்டுவார்கள்", என்றார் ஸ்டுடியோ நிர்வாகி ஒருவர்.

வாஸ்தவமான பேச்சு!
நக்சல் இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகமுள்ள ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா மாநிலங்களில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவு மாலை 3 மணியுடன் முடிவுக்கு வந்தது.

மதியம் 1 மணி அளவில் சட்டீஸ்கர் மாநிலத்தில் 25 சதவீத வாக்குகளே பதிவு செய்யப் பட்டிருந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் மதியம் 12 மணி வரை 28.5 சதவீத வாக்குகள் பதிவ செய்யப் பட்டிருந்தன. ஒரிசாவில் மதியம் 1.30 மணி அளவில் 40 சதவீத வாக்குகளும் ஆந்திராவில் 25.67 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

மகாராஷ்டிரா மாநிலம் ராஜனன்ட்காவ்ன் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். ஜாமுஇ மாவட்டத்தில் கன்னி வெடியை வெடிக்கச் செய்தனர்.

பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற வன்முறைகளில் 9 பாதுகாப்பு அதிகாரிகள், இரு பொதுமக்கள் உள்பட 16 பேர் கொல்லப் பட்டனர்.

பல்வேறு இடங்களில் கன்னிவெடிகள் வெடிக்கச் செய்யப்பட்டன. லடேகர் மாவட்டத்தில் 4 தேர்தல் அதிகாரிகளை நக்சல்கள் கடத்திச் சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பீகாரில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். இரு பெண்கள் உள்பட ஆறுபேர் காயமுற்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கோடாபனூர் மற்றும் நராயண்பூர் ஆகிய இடங்களில் வாக்குச் சாவடிகளில் குண்டுகள் வெடித்தன.

ஒரிசாவில் மல்காங்கிரி மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்கள் எரியூட்டப்பட்டன. வாக்குச் சாவடிகள் மீதும் தாக்குதல் நடைபெற்றன.

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் தங்கும் விடுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
இலங்கை அரசு புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களைக் கைப்பற்றி, போரில் வெற்றி பெற்று வருகிறது.புலிகள் இலங்கை அரசிடம் தமது பிரதேசங்களை இழந்து சிறிய நிலப்பரப்பில முடக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள்  இந்த இரு யுத்த முனைகளுக்கும் இடையில் அகப்பட்டுள்ளனர்.

1. இனவாத சிறீலங்கா அரசின் அடக்குமுறை இன்று மிகவும் மூர்க்கமடைந்துள்ளது.   மகிந்த சிந்தனை இன்று சிங்கள மக்கள் உட்பட இலங்கையின் அனைத்து மக்கள் மீதும் பாய்ந்துள்ளது.  செய்தி ஊடகங்களை அடக்குதல்/அழித்தல், அரசியல் எதிரிகளை கொலைசெய்தல், ஏனைய அமைப்புகளை தடை செய்தல், இனவாத அழிப்புக்குத் ஆதரவாக இல்லாதவர்களை துரோகிகளாக்குதல், யுத்த கருவிகளில் ஒன்றாக பிரச்சார ஊடகங்களை முக்கியமாக்குதல்…. என்று பிரபாகர சிந்தனை மகிந்த சிந்தனையாகி வெற்றி பெற்று வருகிறது. இனவாத அரசின் இன்றைய யுத்த வெற்றி அமெரிக்க இரட்டைக்கோபுரங்கள் மீதான தாக்குதல்களின் பின்னான பயங்கரவாத  வகைப்படுத்தல், இந்திய அரசின் இராணுவ/அரசியல் ஒத்துழைப்பு/வழிகாட்டல் என்ற புறச்சூழல் காரணிகளைக் கொண்டிருந்தாலும் புலிகளின் பலவீனத்திலேயே தனது பலத்தைக் கொண்டுள்ளது.

புலிகளைத் தோற்கடிப்பதில் அடைந்துள்ள வெற்றி மகிந்த அரசு தனக்கு எதிரான சிங்கள அரசியல் சக்திகளை அழிப்பதிலும் வெறிபிடித்துள்ளது. புலிகள் என்ற பெயரில் தமிழ்மக்களை அடக்குவதற்கும்/அழிப்பதற்கும் துணை நிற்கும் சிங்கள அரசியல் சக்திகள்மீது மகிந்த அரசு பாயப் போவதை இன்னும் இவர்கள் அறியாமலிருக்கலாம். ஆனால் பிரபாகர சிந்தனை தமிழீழவிடுதலை என்ற பெயரில் தமிழ்மக்களை எப்படி நடத்தியதோ அதேபோல பயங்கரவாத அழிப்பு என்ற பெயரில் மகிந்த சிந்தனை சிங்கள மக்களை எப்படி நடத்தும் என்பது வரலாறு/இயங்கியல்.

தமிழீழ விடுதலையின் பேரில் இன்று தமிழ்மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டு  பிரபாகர சிந்தனைக்கு விலை கொடுத்து வருகின்றனர். புலி அழிப்பு பெயரில் தமது தேசத்தை அந்நியநாடுக்களுக்கு விற்கின்ற/தமது பொருளாதாரத்தை அழிக்கின்ற/தமது அடிப்படை மனித உரிமைகளை இழக்கின்ற விலையை சிங்கள மக்கள் மகிந்த சிந்தனைக்கு விலையாகக் கொடுக்கின்றனர்.

2. பிரபாகர சிந்தனை ஆயுதங்களின் மேல் நம்பிக்கை கொண்டது. புலிகளின் இருப்புக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் தன்னைத் தவிர்ந்த மற்ற அனைத்தையும் சந்தேகிப்பது. தனது இருப்பு குறித்த பயத்தின் அடிப்படையிலேயே தனது எதிரி/நண்பரை வரையறுக்கிறது. இந்த வரையறையே புலிகளின் பலவீனமாகி இலங்கை அரசைப் பலப்படுத்தியுள்ளது. விமானம்/நீர்மூழ்கி/ஏவுகணை/பீரங்கி/ஆட்டிலறி என்று ஆயுத வளங்களை வகைதொகையின்றி வாங்கி/தயாரித்துக் குவித்து வைத்திருந்தும் இவை தமிழ்மக்களை மட்டுமல்ல, புலிகளையும் இலங்கை அரசிடமிருந்து பாதுகாக்கவில்லை.  மாறாக அவர்களுடன் விரும்பியும்/நிர்ப்பந்தத்திலும் கூட இருக்கின்ற மக்களே இன்னமும் புலிகளின் அழிவைப் பின் தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.  தியாகமும்/வீரமும் கொண்ட பல போராளிகளைக் கொண்டிருந்தும் புலிகள் தோற்கடிக்கப்படுள்ளனர். இங்கே யுத்த தளவாடங்கள்/போராளிகளின் தியாகங்களைத் தாண்டி பிரபாகர சிந்தனை நம்பாத முக்கியமான காரணி ஒன்றுள்ளது - அதுதான் மக்கள்.  இந்தக் காரணிதான் புலிகளின் ஆயுத/நிதி/சர்வதேச வலைப்பின்னல்கள்/வளங்களையும் தாண்டி புலிகளைத் தோற்கடித்துள்ளது.

3. சிங்கள அரசாலும், புலிகளாலும் பணயமாக்கப்படுள்ளவர்கள் சாதாரண பொதுமக்கள்.  இவர்களின் குரல்கள் என்றோ அடக்கப்பட்டுவிட்டன. இந்த மக்களின் வாழ்வு கொதிக்கும் சட்டியையும் தகிக்கும் நெருப்பையும் மட்டுமே தேர்வாகக் கொண்டுள்ளது. புலிகளின் தமிழீழ விடுதலையின் பேராலும், அரசு/அரசு சார் குழுக்களின் சனனாயக மீட்டெடுப்பாலும் இந்த மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது. ஏகபிரதிநிதிகளும், சனாயக மீட்பர்களும், புலம்பெயர் போராளிகளும்/மாற்றுக் கருத்தாளர்களுமே இந்த மக்களின் குரலாக தாம் மட்டுமே இருப்பதாக மார்தட்டுகிறார்கள்.

புலிகளின் போராளிகளாக/துரோகிகளாக/அப்பாவி பொதுமக்களாக - எந்தப் பெயரில் கொல்லப்பட்டாலும் அழிக்கப்பட்டது இதே மக்கள்தான். இந்த மக்கள் யுத்த பிரதேசத்தை விட்டு வேறு பிரதேசங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டவர்கள். இந்த மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடி அங்கிருந்து வீ வோன்ற் தமிழீழம் என்று வீரம் காட்ட வசதியற்ற ஏழை/கூலி மக்கள். இந்த மக்கள் புலி அழிப்பு என்ற பெயரில் இலங்கை அரசால் வதைக்கப்படும் மக்கள். இந்த மக்கள் புலி எதிர்ப்பு என்ற பெயரில் துரோகக்குழுக்களால் வதைக்கப்படும் மக்கள். இந்த மக்கள் தமிழீழ விடுதலை என்ற பெயரில் புலிகளிடம் பிள்ளைகளை இழக்கும் மக்கள்.

4. இவ்வளவுகால இழப்புகளையும், இத்தனை இழப்புகளையும் முகம்கொடுத்து மிஞ்சியிருக்கும்  மக்களையும் அழிக்கவும்/சிதைக்கவும்  இலங்கையிலும், வெளிநாடுகளிலும் சதிகள் தொடர்கின்றன.

வறுத்தெடுக்கும் சட்டிதான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு என்கின்றனர் புலிகளும், புலி ஆதரவாளர்களும்.

சட்டிக்குள்ளிருந்து நெருப்புக்குள் குதித்துவிடுவதுதான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு என்கின்றனர் இலங்கை அரசும், புலி எதிர்ப்பாளர்களும்.

சர்வதேச அரசுகளோ சட்டியை குறை சொல்லிக்கொண்டு நெருப்புக்கு எண்ணை வார்த்துக்கொண்டிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டம்/சர்வதேசம்/புலிகளின் தவறுகள்/மாற்றுவழி ….. என்றெல்லாம் தொடர்ந்து உரையாடலாம்.  உண்மையான விடுதலைக்கு இவை உதவலாம்.

ஆனால் இந்த விடுதலைக்குரிய மக்களின் உயிரைக் காப்பாற்றுவதுதான் இன்றைய முதன்மைப் பிரச்சினை.  இந்த அடிப்படையில்தான் மக்களை நேசிக்கும் உரையாடல்கள் அமைய முடியும்.

இதற்கான நிபந்தனை போர் நிறுத்தம்.

போர் நிறுத்தம் புலிகளைக் காப்பாற்றும் என்ற புலி எதிர்ப்புக்குழுக்களின் வாதம் மக்களுக்கு எதிரானது.

வீ வோன்ற் தமிழீழம்/ அவர் லீடர் பிரபாகரன் என்று இன்று சர்வதேசங்களில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மக்களுக்கு எதிரானது.

புலிகளின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று சர்வதேசங்கள் சுலபமாக தப்பிக்கொள்கின்றன. புலிகள் அல்லாது மக்கள் சார்ந்து/மக்களை - மக்களை மட்டுமே - முதன்மைப்படுத்தி முன்வைக்கப்படும் போர்நிறுத்தக் கோரிக்கை மட்டுமே ஆகக் குறைந்தபட்சம் பொதுமக்க்கள் அழிவு குறித்து சர்வதேசத்திற்கு குற்ற உணர்வைத் தோற்றுவிக்கும். சர்வதேச பொதுமக்களின் உணர்வைத் தூண்டும். இந்த உணர்வுமட்டுமே சர்வதேச அரசுகளுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும்.

இன்றைய உடனடித் தேவை - போர்நிறுத்தம்.

மக்களுக்காக!

குறிச்சொற்கள்: , , , , , , , ,

பகிர்ந்து கொள்ள...

கருத்துகள் இல்லை: