வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-16

மாப்பிள்ளை பிடிக்காததால் இளம்பெண் ஓட்டம்!

அம்பத்தூர், ஏப்.16- 2009. தினத்தந்தி

சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அபிராமபுரத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் விஜயலட்சுமி (வயது17). இவருக்கும் திருத்தணியை சேர்ந்த கிரி என்பவருக்கும் மே மாதம் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தநிலையில் விஜய லட்சுமியின் பெற்றோர் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியூர் சென்றிருந்தனர். அப்போது விஜயலட்சுமி வீட்டிலிருந்த தனது தங்கை உமாமகேஸ்வரியிடம் வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது `நிச்சயம் செய்த மாப்பிள்ளை பிடிக்காததால் விஜயலட்சுமி வீட்டை விட்டு ஓடியதாக தெரிய வந்தது. விஜயலட்சுமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

------------

இதுபோல் பல ஓட்டங்களை நீங்கள் இனிமேல் எதிர்பார்க்கலாம். திருமணத்திற்குப் பிறகும், காலணாக் காசு பெறாத சில்லறைக் காரணங்களுக்குக்கூட கோபித்துக் கொண்டு ஓடி விடுவார்கள் மனைவிமார்கள். அதைத் தட்டிக் கேட்க கணவனுக்கோ அவனது பெற்றோருக்கோ உரிமையே கிடையாது. அப்படி ஏதேனும் கேள்வி கேட்டால், ஒரு கிழிந்த காகிதத்தை எடுத்து, "என்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார்கள்" என்று கிறுக்கி காவல் நிலையத்திற்கு அனுப்பினால் உடனே கணவனையும் அவனது பேற்றோரையும், உடன் பிறப்புக்களையும் கைது செய்து விடுவார்கள்.

ரேணுகா சவுத்திரியும் அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியும் இந்தியாவில் திருமணம் என்பதையே ஆண்களைப் பொருத்தவரை ஒரு பாம்புப் புற்றாக மாற்றிவிட்டனர்.

ஆண் குழந்தைகளைப் பெற்றவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது!
மதுரை: கன்னியாகுமரியை சேர்ந்தவருக்கு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இருந்ததற்காக மறுக்கப்பட்ட சிறை வார்டன் பணியை வழங்க சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரியை சேர்ந்த சகுபர் சாதிக் தாக்கல் செய்த ரிட் மனு: நான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக வடக்குசூரங்குடி கிளையில் உறுப்பினராக இருந்தேன். ஒரு வாரஇதழ் ஏஜன்ட்டாகவும் பணிபுரிந்தேன். என் மீது
குசும்பா, உன் வாய்க்கொழுப்பை எல்லாம் வண்டியிலேயே விட்டு விட்டு வீட்டிற்குள் நுழைந்து இப்படி கையைக் கட்டி நடித்தே ஒரு வருடம் கடந்துவிட்டாய். இந்த ஓராண்டை விட இன்னும் அதிக மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீ இன்னும் நூறாண்டுகள் கடக்க எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். குசும்பனுக்கும் சகோதரி மஞ்சுவிற்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்...!
baby paint art



எழுத்துக்களை கண்டேன்
என் எண்ணங்கள் ஆனீர்
நேசம் தந்து என் நெஞ்சுக்குள் நின்றீர்
பாசம் காட்டி என்னை பரிதவிக்கவைத்தீர்

நட்பாக வந்து நல்லதும் கெட்டதும் உணர்த்தினீர்
உறவாக வந்து உண்மையாக இருந்தீர்
இப்போது பிரிவு ஒன்று வரும் போது
உள்ளுணர்வு உணர்த்துகிறது
உயிர் வலியா இது என்று...

எட்டு ஆண்டு தவம் இருந்து
ஈன்று எடுத்த என் செல்வம்
வருவாயா வாப்பா என்று
பார்வை ஒன்றை தூதாய் அனுப்பி
துரத்துகிறாள் நினைவாய் மாறி

அந்த பிஞ்சு விரல் பட்டு விட
ஏங்கி தவிக்குது மனசு
அருகே இருந்து அணு அணுவாய்
ரசிக்க அருளவில்லை எனக்கு

அந்த பொற்தாமரையை ஏந்திக்கொள்ள
வரமாய் கிடைத்தது சில நாட்கள்
அந்த சிலையை
என் அன்பு மழையில் நனைத்து
ஆசை தீர அணைத்து

சுற்றமும் உற்றமும் உடன் சுழ சில நாள் இருந்து
அந்த பாச நெஞ்சம்களின் நேசத்தை சுமந்து
மீண்டும் வருகிறேன் ஒரு திங்கள் இருந்து...

நட்பு நெஞ்சம்களின் நிஜமான நேசம்
விட்டு செல்ல வலிக்கிறது தான்...
விடை கொடுங்கள் விரைந்து வருகிறேன்...
நெல்லால் மட்டுமல்ல. கல்லாலும் சிறந்த ஊர், தஞ்சாவூர். பெரிய கோயில், தஞ்சை சிற்பவளத்துக்குச் சிறந்த சாட்சி.  கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான ஈர்ப்பைத் தருகின்றன சிற்பங்கள். பெரிய கோயில் பற்றி ஏற்கனவே எழுதியாயிற்று. எத்தனை முறை சென்றாலும் அத்தனை அனுபவங்களையும் பதிவு செய்து விட வேண்டும் என்ற ஆவலே  பதிவின் நோக்கம்.

கோயிலின் பிரதான வாயிலைச் சுற்றி அகழி உள்ளது. கல்லணையிலிருந்து அகழிக்குத் தண்ணீர் வருகிறது. விமானக் கலசத்தின் நிழல் தரையில் விழாத வடிவமைப்பு ஒன்றே தஞ்சை சிற்பக்கலைக்குச் சான்று. கோயிலின் முதல் தளத்தில் 108 வகை நடன அமைப்புகளின் சிற்பங்கள் உள்ளன. முன்னால் உள்ள நந்தி ஒரே கல்லால் ஆனது. கோயிலின் சுற்றுச் சுவர்களில் 10 ஆம் நூற்றாண்டு ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

அகழியைக் கடந்ததும் தென்படும் கோபுரத்துக்குக் "கேரளாந்தகன் திருவாயில்" என்று பெயர். இராஜராஜ சோழனின் பெயர்களில் ஒன்று. இந்தக் கோபுரத்தில், இலக்கிய, புராண நிகழ்வுகள் சிற்பங்களாக வடிக்கப்பெற்றுள்ளன. அடுத்தது நந்தி மண்டபம். 11 அடி உயரமுள்ளது. பிற்காலத்தில் நாயக்கர்களால் நிறுவப்பட்ட நந்தி. இராஜராஜன் நிறுவிய நந்தி, கோயிலின் தெற்குத் திருச்சுற்று மாளிகையில் உள்ளது.

கோயிலின் முன்மண்டபத்தை ஒட்டிய மகாமண்டபத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் சிலை உள்ளது. இவை மாமன்னன் இராஜராஜனைப் போன்று அமைக்கப்பட்டுள்ளன. எவ்வளவு எழுதினாலும், இந்தச் சிற்ப அற்புதத்தை விவரிக்கப் போதுமானதாக இல்லை! இன்னும் செய்திகளும், படங்களும் அடுத்த பதிவில். கருத்துக்களை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன்.





'கஜினி படத்தின் வெற்றி மூலம் முதல்நிலைக்கு வந்துவிட்டதால் பொறாமை கொண்ட இந்தி நடிகைகள் சிலர் என்னை ஒழித்துக் கட்ட முயற்சிக்கிறார்கள்', என நடிகை அசின் குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பையில் இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:

பாலிவுட்டில் இப்போது என்னைப் பற்றித்தான் அதிகம் கிசுகிசுக்கள் வருவதாகக் கூறுகிறார்கள். அது உண்மைதான். தென்னிந்தியாவில் மூன்று மொழிகளில் முன்னணி நடிகை நான். ஆனால் ஒருபோதும் என்னைப் பற்றி அங்குள்ளவர்கள் தப்பாக எழுதியதே கிடையாது. இப்போதும் என்னைத் தங்களில் ஒருத்தியாகவே பார்க்கிறார்கள்.

ஆனால் இங்கே நிலைமை வேறாக இருக்கிறது. மும்பை, பாலிவுட் பற்றி வெளியில் பேசுவைதை மெய்ப்பிக்கும் வகையில்தான் உள்ள இங்குள்ளவர்களின் அணுகுமுறை.

கஜினி என்ற ஒரே படத்தில் நான் இந்த அளவு புகழ் பெற்றது பலரது கண்ணையும் உறுத்துகிறது.

அதனால்தான் எனக்கும் சல்மானுக்கும் காதல், கத்தரிக்காய் என்று எழுதி புண்படுத்துகிறார்கள். இதற்குப் பின்னணியில் சில நடிகைகளே இருப்பது எனக்கும் தெரியும். சல்மானுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. லண்டன் ட்ரீம்ஸ் முடிந்தால், அவர் யாரோ, நான் யாரோ. ஆனால் என்னால்தான் அவரும் கத்ரீனாவும் பிரிந்ததாகக் கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய். எனக்கு அப்படி ஒரு அவசியமும் நேரவில்லை.

நான் போராடுவேன். என்னை எப்படியாவது வெறுப்பேற்றி பாலிவுட்டிலிருந்து ஒழித்துவிட வேண்டும் என்ற அவர்களது எண்ணம் நிறைவேறாது, என்றார் அசின்.

இதென்ன கலாட்டா!

கருத்துகள் இல்லை: