இந்த தொடர் பதிவுக்கு இப்படி ஒரு சோகமான நெலம வரும்ன்னு நினைக்கவே இல்லைங்க. அதிஷாவுக்கு நன்றி.
சாலமனுக்கு ஒரு கடி தம்:
சாலமனுக்கு ஒரு கடி:
நண்பன் 1: மச்சி குற்றாலத்துல இப்ப நல்ல சீஸன் தொடங்கி இருக்குன்னு சொன்னத ரமேஷ் நம்ப மாட்டறாண்டா
நண்பன் 2: விடு மச்சி. அவன் ஃபால்ஸ் நியூஸ் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டிருப்பான்.
சாலமனுக்கு ஒரு தம்:
டிஸ்கி: திட்டறதுக்கு முன்னால தலைப்ப மறுபடியும் படிச்சிட்டு வாங்க. நான் ஏமாத்தல ஏமாத்தல ஏமாத்தல…
உனது கிசுகிசுப்புகள் இல்லாத
இரவுகள்
வலி மிகுந்ததாய் இருக்கின்றன
உனது துப்பட்டாவை
துணைக்கழைத்துக் கொள்கிறேன்
உன்னை நீங்கி
ஒரு விநாடியும்
தனித்து இருந்துவிட முடியாது இங்கே
வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நீ நிரம்பியிருக்கிறாய்
கண்ணாடியில்
நீ ஒட்டிவைத்துப் போயிருக்கும்
உனது சிவப்பு ஸ்டிக்கர் பொட்டு
நாள் தவறாது என்னை ஏளனம் செய்கிறது
உனது தடயங்களாலோ
இந்தக் கவிதைகளாலோ
இந்நேரத்துக்கான ஆறுதலை
எப்போதுமே தரமுடிவதில்லை.!
(யூத்ஃபுல்விகடனில் வெளியானது)
.
"அண்ணே சேட்டுகிட்ட இருக்க ஆளு ஒரு கூமுட்டைண்ணே"
"ஏம்ப்பா?"
"போன மாசம் பண்ணுன இன்வாய்ஸ் காப்பிய அனுப்பிச்சு அப்பா சாமி இதுக்குப் பதிலா நீங்க கேட்ட மாதிரி இந்த மாசம் இன்வாய்ஸ் பன்ணியிருக்கேன் . புதுசுல கையெழுத்துப் போட்டு சீல் வச்சு அனுப்புங்க, பழசக் கிழிச்சிருங்கன்னு சொல்லியிருந்தேன்"
"சரி அதுக்கென்ன?"
"அவன் பழசு புதுசு ரெண்டுலயும் சீல் வச்சு கையெழுத்துப் போட்டுப் பக்காவா அனுப்பியிருக்கான். ஒரு சப்ளைக்கு ரெண்டு இன்வாய்ஸ். நமக்கு நல்ல சான்ஸ்ணே. எத்தனை தடவ சேட் நமக்கு டெபிட் நோட் அனுப்ச்சிருக்கான். இப்ப அந்த லாஸையெல்லாம் சரி பண்ணிடலாம்ணே"
"அந்த மாதிரியெல்லாம் எதையும் பண்ணிடாதே. ஊருக்குப் போனதும் முதல் காரியமா பழைய இன்வாய்ஸ கிழிச்சுப் போடு"
"என்னண்ணே, இதுவே நான் முன்னாடி வேலை செஞ்ச கம்பெனியா இருந்தா இன்னேரம் எனக்கு இன்செண்டிவ் கொடுத்திருப்பாரு, நீங்க என்னடான்னா நீதி நேர்மைன்னுட்டு"
" சேட்டு டெபிட் நோட்டு போடுறது சரக்குல இருக்க குறைபாட்டுக்குத்தான். நம்ம மேல கடுப்புல இல்ல. எத்தன தடவ அவசரமாப் பணம் வேணும்னு சேட்டுகிட்ட வாங்கியிருக்கோம் சேட்டு அதுக்கு வட்டியோ இல்ல வரவேண்டிய பேமெண்டுல கழிக்கவோ செஞ்சாரா? கைமாத்து வேற, வரவு செலவு வேறன்னு தெளிவா இருக்காரு. கார்த்தி ரெண்டு விஷயம். ஒன்னு இது நம்பிக்கைத் துரோகம். ரெண்டு என்னைக்கிருந்தாலும் ஷூவுக்குள்ள சிக்குன கல்லு மாதிரி என்னை உறுத்திக்கிட்டே இருக்கும். கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் செய்ய மாட்டேன்"
காரருகில் கடலை விற்கும் சிறுமி, "அண்ணே அவிச்ச கல்லைண்ணே, ரெண்டு ரூவாதான்னே",
" சரி ஆளுக்கு ரெண்டு கொடு" என்று பத்து ரூபாயை நீட்டினேன்.
"அண்ணே சில்லறை இல்லண்ணே இன்னொரு பொட்டலம் தரவா?"
"வேண்டாம்மா, பாக்கிய நீயே வச்சிக்க"
ரயில் கடந்திருக்கவே கேட் திறக்கப்பட்டு வாகனங்கள நகரலாயிற்று. ஸ்பீடு பிரேக் அருகில் வேகத்தைக் குறைத்த போது கடலை விற்கும் சிறுமி வேகமாக ஓடி வந்து, " அண்ணே உழைக்காம வந்த காசு நிக்காதாம்ணே எங்காத்தா சொல்லிச்சு. இந்தாங்க பாக்கிக்காசு" என்று என் ஜன்னல் வழியாக வீசி எறிந்தாள்
தன் காலடியில் விழுந்த இரண்டு ரூபாய் நாணயத்தை எடுத்த கார்த்தி நாணயத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்
டிஸ்கி : முதல் பகுதி என்னோட கற்பனை. இரண்டாம் பகுதி சென்ற வாரம் சிவகாசி செல்லும் போது நடந்தது.
.
அன்பின் வலை மக்களே!! நம்ம கஷ்டம் நமக்குத்தான் தெரியும்!! நாம் ருசியான பதார்த்தங்களை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போய், சரி வந்து சாப்பிடலாம் என்று வேலை முடித்து வந்து பார்த்தால் சட்டி காலி!!
நாமும் சரி குழந்தைகள் சாப்பிட்டு இருப்பார்கள் என்று விட்டுவிடுவோம்.
ஆனால் குழந்தைகளோ ஒருபுறம் அப்படியே உடல் பெருக்காமல் இருக்க நாம் எதிர்பாராத விதமாக எதிபாராத நபர் உடல் எடை கூடிக்கொண்டே போவது நமக்கு பெரிய அதிர்ச்சி அளிப்பது உண்மை!!
நடந்தது என்ன? ரேஞ்சில் துப்பறியப்போனால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்!!
சரி சொன்னாலும் குற்றம்!! மனசுக்குள்ள வைத்து இருக்கவும் முடியாமல் நாம் படும் அவதிக்கு வழிதான் என்ன?
பல வகையில் ஆராய்ந்ததில் பல அரிய அருமையான வழிகள் கிடைத்தன!! இவற்றைப் பயன்படுத்தி உடல் எடையை நாசூக்காக சொல்வது எப்படி என்று பார்ப்போம்!!
1.அம்மணியை வெளியே அழைத்துக்கொண்டு போவீர்கள்தானே? நீச்சல் குளம், பீச், மால் என்று கொடியிடை மகளிர் உலாவும் இடங்களுக்காக அழைத்துச் செல்லவும்!! அம்மணிக்கு நாளைடைவில் நல்ல மாற்றம் தெரியும்!!( கூட்டிக்கொண்டுதான் போகனும்!! நீங்க பாட்டுக்கு ஓவரா லுக் விட்டுக்கிட்டு இருந்தீங்க வீட்டுக்குப்போனவுடனேயே எதிர் விளைவுகளை சந்திக்க நேரும்!! அதற்கு நான் பொருப்பல்ல!!...)
2. நிச்சயதார்த்த போட்டோ, கல்யாண போட்டோக்களில் அம்மணி கொஞ்சம் ஒல்லியா இருப்பாங்க!! அதையெல்லாம் வெளியே எடுங்க!! அதில் அம்மணி உள்ள போட்டோக்களை மேசைமீது கண்ணில் படுமாறு போடுங்க, அடிக்கடி!! மேடம் கண்ணில் படும். நல்ல பலன் கிட்டும்!!
3.கொஞ்சம் ரிஸ்க் ஆன முறை!! அம்மணி அமரும் நாற்காலி, சோபா போன்றதில் உள்ள ஸ்குரூ, ஆணி போன்றவைகளை சந்தேகம் வராமல் (உங்கள் மேல்) லூஸாக்கி வைங்க! சேர் மெதுவா உடையும்! அம்மணி விழுவாங்க!! ப்ராக்டிகலா எடைகூடிவிட்டது உறைக்கும்!!( நீங்க ஸ்பாட்டில் இருக்கக் கூடாது!! எங்கேயாவது நின்று கொண்டு கெக்கே பிக்கேன்னு உளறினீங்க கதை கந்தல்!!)
4.ஒரு ஜாலி மூட் பார்த்து நீங்கள் முதன் முதலா எடுத்துக் கொடுத்த சுடிதார் , சேலை,ஜாக்கெட்டை போடச்சொல்லுங்க!! அம்மணியால் போடமுடியாது!! பார்த்துக்கொண்டே நீங்க வாயைத் திறக்காமல் இருக்கணும்!! செம எஃபெக்ட் இருக்கும்!
5. மெதுவா அப்படியே நடக்கும் போதெல்லாம் இடுப்பை (டயரை) தட்டி விட்டு செல்லவும்!! வலிக்காமல் கிள்ளவும் செய்யலாம்!! சொல்லாமல் சொல்றதுன்னா இதுதான்!!
6.இது நாம செய்ய வேண்டியது!! வீட்டில் காய்கறி , சாலட், கீரை பழவகைகள் போன்றவற்றை வாங்கி வந்து ஒரு ஆடு ரேஞ்சுக்கு உள்ளே தள்ளுங்க!! சாப்பாடு சிஸ்டமே மாறுது இல்லையா? உங்க பேரைச் சொல்லிதானே அவங்க உள்ளே தள்ளுகிறார்கள்!! இப்ப தன்னால் சமையல் முறையே மாறிவிடும்!!( புடிச்ச அயிட்டங்களை வெளியே ஆபீஸ் போகும்போது ருசிபாருங்க!! இஃகி! இஃகி!!)
7. ஒட்டல் போய் சாப்பிடுகையில் கொஞ்சமா ஆர்டர் பண்ணுங்க! நீங்களும் குறைய சாப்பிட்டு போதும்னு சொல்லுங்க!! அம்மணிக்கு தான் அதிகம் சாப்பிடுவது விளங்கும்!!
8.இது ஒரு முறை. நீங்களே உங்கள் உடலில் கொழுப்பு அதிகமாகிவிட்டது, தொப்பை போடுதுன்னு உடற்பயிற்சிகளில் இறங்குங்க!! உங்களுக்கும் பயன்! அம்மணியும் வாக்கிங்,பயிற்சின்னு ஆரம்பித்து விடுவாங்க!( குரங்கு தொப்பி கதைதானே!!)
9. யோகா பண்ணினா மனசு டென்ஷனில்லாமல் இருக்கும் என்று அம்மணிகளுக்கு எப்போதும் ஒரு எண்ணம் உண்டு!! யோகாங்கிற போர்வையைப் பயன்படுத்தி யோகாவுக்கு அனுப்புங்க!!நம்ம சொல்வதைவிட அங்கே சொல்றதை நல்லா கேப்பாங்க!! உங்களுக்கே சொல்லித்தர ஆரம்பித்து விடுவாங்க!
10.அம்மணியோட அளவைத்தெரிந்து கொள்ளுங்க!! அகஸ்மாத்தா வாங்கிவருவது போல அதைவிட ஒரு சைஸ் குறைவா ட்ரெஸ் வாங்கிக்கிட்டு வாங்க!! அதைப்போட்டுப்பார்த்தா நிச்சயம் சேராது. ஓ! இதுதானே உன் அளவுன்னு நினைத்தேன்னு ஒரு பீலா விடுங்க! இப்போ குண்டாயிட்டேன்னு அவுங்களே சொல்லுவாங்க!!
என்ன எல்லா முறைகளையும் சொல்லியாச்சு!! மிகச்சரியா செயல் படுத்தனும்!! கொஞ்சம் தப்பினாலும் உடம்பு ரணகளமாகி விடும்!! அதுக்கு நான் பொறுப்பல்ல!!
குத்துங்க தமிலிஷிலும் தமிழ்மணத்திலும்!!
17.04.02009(வெள்ளி)
அமெரிக்காவில் பல DATAக்கள் எதிர்பாத்ததை விட சிறப்பாக இருந்ததால் தன்னை பச்சை நிறத்தில் தக்க வைத்துக்கொண்டது ...
ஆசியாக்கள் அண்ணாச்சி வழியிலேயே சென்று கொண்டிருக்கிறார்கள்...
சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது அதிகபட்சமாக 3450 வரை சென்றுள்ளார் ...
நேத்து நம்ம உள்ளூருக்காரன்வோ லாபத்தை வெளிய எடுத்துட்டாங்க ... அசலூர்க்காரங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் சந்தயை காப்பாத்த முடியல !!!
அதனால அசலூர்க்காரங்க நம்ம லோக்கல் பயலுக மேல காண்டாத்தான் இருக்காங்க !!! அவுக எவ்வளவு கோவப்பட்டாலும் தாக்கு பிடிக்க முடியுமா நம்ம பயளுகளால !!!
நேற்று நமது சந்தையின் TURNOVER ரொம்ப நன்னா இருந்துச்சுன்னு பேசிக்கிறாங்க !!! சும்மாவா நம்மாளுங்க எனக்கு இன்னொரு முகம் இருக்குனுல்லா காமிச்சிருக்காங்க !!!
நேத்து SUZLON பங்கை சும்மா 19 சதவீதம் இறக்கி இருக்கானுங்க ... இன்னான்னு கேட்டா BLADE SUPPLY PROBLEM ன்னு சொல்றாங்க !!! துவைக்கனும்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் சோப்பு போட்டு துவைச்சா என்ன , சும்மா கல்லுல போட்டு குமுறுனா என்ன !!!(காரணம் தேடுறாங்களாம் …)
இன்னிக்கு ரெண்டு GATE PASS இருக்குதுங்க !!! 3310 க்கு கீழே முடிச்சா ...3480 நெருங்க முயற்சி பண்ணினா …
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ...,
பிவோட் புள்ளி : 3410
தடை நிலைகள் : 3470,3565,3625
தாங்கு நிலைகள் : 3310,3255,3155
"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக