வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-17

சினிமா இயக்குனர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தது செல்லாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இலங்கை போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து சினிமா இயக்குனர் சீமான் பல்வேறு  கூட்ட நிகழ்ச்சிகளில் பேசி வந்தார். பிப்ரவரி 17-ந் தேதி திருநெல்வேலி,  பாளையங்கோட்டை வக்கீல்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்தும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.













மீண்டும் ஒரு மீள்பதிவுதான். முன்பே படித்துவிட்டு பின்னூட்டதவர்களுக்காக இந்த தண்டனை :-)
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்க-பழ.நெடுமாறன் கோரிக்கை - தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் இயக்குநர் சீமானைக் கைது செய்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்ததையடுத்து சீமானை உடனடியாக விடுவிக்கப்பட உள்ளார். இப்படியொரு ஆணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் :
எப்போதோ ஒரு புத்தகத்தில் படித்த மாயஜால கதை. மாயஜால கதைகள் பிடித்தமானது.ரொம்ப பிடித்துப் போய் மனசில் இன்னும் இருக்கிறது.நெடுநாள் மனசில் இருக்க வேண்டும் என்றால் நமக்குப் பிடித்திருக்க வேண்டும்.இது தொடர்கதையாகத்தான் எழுத வேண்டும்.கொஞ்சம் பெரிசு. என்னுடைய முதல் தொடர்கதை முயற்சி

தொடரலாமா? சொல்லுங்கள். Hello! Followers & others..... Please tell me....

இனி கதை.............




                                                           
ரொம்ப தூரத்தில் குதிரைகளின் குளம்பொலி சத்தம் கேட்டது.குதிரைகளின் காலடியில் எழுந்த புழுதிப் படலம் பெரிதாக எழுந்து வானத்தில் படர்ந்தது. குதிரைகள் பேய் வேகத்தில் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு ஒடிக் கொண்டிருந்தது.எதையும் லட்சியம் செய்யாமல் ஒடின.உலகத்தின் கடைசி எல்லைதான் இதன் இலக்கு என்பது மாதிரி.எதிரில் தடுக்கு வந்தால் பிரிந்துச் சிதறின.

மொத்தம் ஏழு குதிரைகள்.

இது பாரி பாண்டியன் ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்கு தினமும் அதிகாலையில் தென்படும் காட்சி. அதே மாதிரி மாலையிலும் இந்த ஏழு குதிரைகள் திரும்பும் காட்சி.
 
இவை அரண்மனை லாயத்திலிருந்து அதிகாலையில் புறப்படுகிறது என்று தெரியும். எங்கு போகின்றன்,இடையில் எங்கு தங்குகின்றன,எதற்கு,ஏன் என்பது யாருக்கும் தெரியாது.சில பேர் கூடவே ஓடி களைத்துத் திரும்பி விட்டார்கள்.மேல் ஏறி உட்கார்ந்தவர்கள் கிழே தள்ளப்பட்டார்கள்.மரம், வீடு இவற்றின் மேல் ஏறி பார்த்தாலும் சிறிது தூரத்திற்க்குப் பிறகு கண்ணுக்கெட்டுவதில்லை.

இது மன்னன் பாரி பாண்டியனுக்குத் தெரியும் என்றும் தெரியாது என்றும் மக்கள் ஊகம். புரியாத புதிர்.


ஒரு நாள்...

"டம்டம்டம்...டம்டம்டம்... இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் தினமும் அதி காலையில் அரண்மனை லாயத்திலிருந்து ஒரு ஏழு குதிரைகள் கயிற்றை முரட்டுத்தனமாக அறுத்துக்கொண்டு அசுர வேகத்தில் பறந்து நம் இடத்தை விட்டு எங்கோ போகின்றன. மாலையானதும் திரும்பி சாதுவாக லாயத்தில் போய் நின்று விடுகின்றன.இடையில் என்ன நடக்கிறது?டம்டம்டம்..இது என்ன தெய்வச்செயலா?...டம்டம்டம்..சூன்யமா?....டம்டம்டம்.."

"இந்த மர்மத்தை கண்டுபிடித்தால், கண்டுபிடிப்பவருக்கு தக்க சன்மானமும் அதோடு பேரழிகியான தன் மகள் சூரியகாந்தியை திருமணம் செய்து வைப்பார் நமது மன்னர்  பாரி பாண்டியன்.டம்டம்டம்.." 

                                            தொடரும் ............


படிக்க கவிதை:-

2.அம்மா....அப்பா..... - கவிதை


http://raviaditya.blogspot.com/feeds/posts/default

பரபரப்பான தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் பம்பரமாய் சுழன்றுகொண்டு இருப்பார்கள். எந்தந்த பகுதிகளில் எப்படியெல்லாம் பொய்சொல்லலாம் வாக்குறுதிகளை அள்ளிவீசலாம் என்று யோசித்து யோசித்தே பெரும்பாலும் அரசியல்வாதிகள் வழுக்கயாகவே காணப்படுகிறார்கள். பாராளுமன்றத்தை தூக்கி நிருத்தும் உருப்பினர்கள் பணத்தாலேயே நிற்னயிக்கப் படுகிறார்கள். சாதியை ஒழிப்போம் சாதி இல்லா தமிழ்நாடு உருவாக்குவோம் என்று முழங்குபர்கள் எல்லாம். அந்த சாதி அங்க வெல்லுமா..?. இந்த சாதி நம்மை ஆதறிக்குமா என்று சாதிக்கொறு சங்கங்களை சேர்த்துக்கொண்டு சகட்டு மேனிக்கு புழுகுவார்கள். இன்னும் சம்பாரிக்க ஏதாவது வழிகிடைக்காதா என்று கூனிக்குறுகி ஓட்டு கேட்கும் அரசியல்வாதிகளும். அவர்களின் இனிப்பான பேச்சைக்கேட்டு விழிபிதுங்கும் வாக்காளர்கலும். தான் இங்கே கதாநாயகர்கள்.

இதெல்லாம் அரசியல்ல சகஜம்பா..!!. ன்னு நீங்க சொல்றது எனக்கு புரியிது. சாக்கடையை நோண்டினா நாரத்தானே செய்யும். பாத்தீங்களா...? நான் சொல்லவந்தது என்ன . இப்ப சொல்றது என்ன . ஒரேயொறு வேண்டுகோள்ங்க..?. அதாவது ஒரு நாட்டினுடைய வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களித்து ஒருவர் வெற்றிபெற்றால் தான் அது முழுமையான வெற்றி. வெரும் 40% முதல் 60% வரை ஓட்டு விழுந்தால் மற்றவர்கள் என்ன ஆனார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களில் லட்சக்கனக்கானவர்கள் வக்களிக்க இயலாமல் போய்விடுகிறது. இதை பயன்படுத்தி கள்ள ஓட்டு போட்டு த்குதியே இல்லாத ஒருவன் வெற்றி பெருகிறான் .

இதற்க்கு வழிதான் என்ன..?. த்மிழர்கள் அதிகமாக பிழைப்பைத் தேடி செல்லும் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன், மேழும் எங்கெல்லாம் இந்திய கடப்பிதழ் உள்ளவர்கள் நிறைந்து இருக்கிறார்களோ அங்கெல்லாம் அந்த அந்த நாட்டு இந்தி தூதரகம் மூலமாக அவர்களும் வாக்களிக்க வழிவகை செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் ஒவ்வொறு இந்திய குடிமகனும் தங்களுடைய வாக்குரிமையை செழுத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுக்களாம். இந்தியாவைவிட வரியநாடான இந்தோனேசியாவில் இம்முறை நடைமுறையில் உள்ளது.

சென்றவாரம் அங்கு நடந்த தேர்த்லில் கூட அண்டை நாடான மலேசியாவி வேலை செய்யும் இந்தோனேசியர்கள் வாக்களிக்க ஏதுவாக ஒவ்வொரு தபால் அலுவலகத்திலும் அதர்க்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு வக்குரிமையை செழுத்தினார்கள். இது போன்ற ஏற்ப்பாடுகளை இந்திய அரசாங்கமும். மேற்கொண்டால். கள்ள ஓட்டை தவிற்த்து நல்ல ஓட்டை பெற்று வெல்லலாம். எந்த ஆட்சியாளர்களாவது முயர்ச்சி செய்வார்களா..?


(என் கூற்றில் உன்மை இருந்தால், உடன்பாடு இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடுங்கள் உங்கள் மனக்கண்னைத் திறந்து.)

கருத்துகள் இல்லை: