வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-16

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பீகார், ஜார்கண்ட், ஒரிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியானார்கள். இவர்களில் 9 பேர் காவல்துறையினர் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஜார்கண்ட் மாநிலத்தின் லேடேஹர் மாவட்டத்தில் கன்னிவெடிகளை வெடிக்கச் செய்தபோது, வாக்குச்சாவடியின் பாதுகாப்புக்காக அவ்வழியே சென்று கொண்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையைச் சார்ந்த 7 பேர் கொல்லப் பட்டனர். அவர்கள் சென்ற வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளரும் இதில் கொல்லப் பட்டனர்.

பீகாரில் கயா மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடி மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு காவலர்கள் கொல்லப் பட்டனர்.

ஒரிசாவில் மல்கான்கிரி மற்றும் சுந்தர்கர் மாவட்டங்களில் வாக்கு இயந்திரத்தையும் ஒரு வாகனத்தையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
நாடாளுமன்றத் தேர்தல் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கவுள்ளது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆட்சி புரிந்த காங்கிரசும், ஆட்சியை இழந்த பா.ஜ.க.வும் - இரண்டையும் நிராகரித்து மக்களுக்கான மாற்றை முன்வைக்கும் இடதுசாரி - ஜனநாயக சக்திகளும் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் முக்கோணமாய் மோதிக் கொண்டிருக்கின்றன.தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எதற்காக வாக்களிக்க வேண்டும்? என்று வாக்காளர்களை சிந்திக்க
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கியான யு பி எஸ், அதன் ஊழியர்களில் 8,700 பேரை வேலையில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அடுத்த வருடத்தில் இந்த ஆட்குறைப்பு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. செலவை குறைக்கும் நடவடிக்கையாக இந்த ஆட்குறைப்பு செய்யப்படுகிறது என்று அந்த வங்கி தெரிவித்திருக்கிறது. 2009 ம் வருடத்தின் மூன்று மாதங்களில் மட்டும், அந்த வங்கி 2 பில்லியன் சுவிஸ் ஃபிராங்குகள் ( சுமார் 8,750 கோடி ரூபாய் ) நஷ்டமடைந்திருக்கிறது. அதன் எதிரொலியாகத்தான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட சப் - பிரைம் லோன் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டது யு பி எஸ் வங்கிதான் என்கிறார்கள். ஆட்குறைப்பு குறித்து அதன் பங்குதாரர்களிடையே பேசிய யு பி எஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஆஸ்வால்ட் குருபெல், என்னால் இதற்கு மேல் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்ல முடியாத நிலையில் நான் இப்போது இருக்கிறேன் என்றார். இது குறித்து பி பி சி செய்தி நிறுவனத்திடம் பேசிய யு பி எஸ் வங்கியின் தலைவர், இதற்கு முன் இந்த வங்கியில் இருந்த நிர்வாகம் பல சிக்கல்களை ஏற்படுத்தி விட்டது. இப்போதுள்ள நிர்வாகம், ஒரளவு வங்கியை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது. சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற வங்கி துறையை, மீண்டும் சிறப்புடையதாக ஆக்க புது நிர்வாகம் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது என்றார். யு எஸ் பி வங்கியின் சேர்மன் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் சமீபத்தில்தான் மாற்றப்பட்டறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ; தினமலர்

கருத்துகள் இல்லை: