வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-18


முன்னெச்சரிக்கை முனுசாமியாக இருக்கிறார்கள். ஏகன், வில்லு என தொடர்ந்து இரண்டு தோல்விகள். இது தொடர்கதையாகிவிடக் கூடாது என்பதற்காக, தயாராக இருந்தும் சர்வம் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறது ஐங்கரன் நிறுவனம்.
ஆர்யா நடிப்பு, விஷ்ணுவர்தன் இயக்கம். இசைக்கு யுவன், கிளாமருக்கு த்ரிஷா என சர்வத்தில் அனைத்தும் உண்டு. போதாதற்கு க்ரைம் த்ரில்லர் வேறு. இம்மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய படம். தேர்தல், ஐபிஎல் கிரிக்கெட் என்ற இரண்டு வில்லன்களுக்குப் பயந்து மே மாதத்துக்கு பட ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறது ஐங்கரன் இன்டர்நே­னல்.

ஐங்கரனின் முந்தைய இரண்டு படங்களான ஏகன், வில்லு இரண்டும் தோல்வியடைந்ததன் எதிரொலிதான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. தற்போது தங்கர்பச்சான் இயக்கும் களவாடிகள் பொழுதுகள் படத்தை மட்டுமே தயாரித்து வருகிறது ஐங்கரன்.

சூடுப்பிடித்திருக்கும் தேர்தல் கூட்டணி பேச்சுகளுக்கு சற்றும் குறைவில்லாமல் அஜித்-சரண் கூட்டணியில் உருவாகும் அசலும் ஹாட் டாபிக்காகியுள்ளது.
ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் சரண், தனது கூட்டணி குறித்த அம்சங்களை அசைபோட்டபோது....... "ஏழு வருஷத்துக்கு முன் எனக்குள் விதைப்போட்ட 'கரு'தான் இப்போ 'அசல்' கதையாக வேர்விட்டு நிற்கிறது. நம்பிக்கை துரோகத்திற்கு எதிரா வெடித்து கிளம்பும் ஒருவனின் கதைதான் இது.

வில்லனை பலிவாங்குறதோட சுபம் போடுற வழக்கமான படமா இது இருக்காது. டான், இண்டர்நேஷனல் சேஸிங்னு இன்ட்ரஸ்டிங்கான திரைக்கதையை ட்ரை பண்ணியிருக்கேன்."

அஜித்தின் கேரக்டர் டானா?

"இல்லைன்னு சொன்னா விடப்போறிங்களா என்ன? பாட்ஷா ரஜினி மாதிரியான கேரக்டர்தான் அஜித்துக்கு. படம் வந்தபிறகு அஜித்தை சூப்பர் ஸ்டாரா கொண்டாடப்போவது நிச்சயம். கெட்டப்,மேனரிசம்,ஸ்டைல்னு புது அஜித்துக்கு நிறையவே தீனி இருக்கு".

இண்டர்நேஷனல் சேஸிங்னா எந்த நாட்டுக்கு போறீங்க?

"நாட்டுக்கு இல்லை, நாடுகளுக்கு. கிரீஸ்,துருக்கி,இத்தாலி,துபாய்,சிங்கப்பூர்னு பல இடங்களில் படமாகிறது. இன்னும் பத்து வருஷத்துக்கு பேசப்படுற ஒரு ஆக்‌ஷன் படமா அசல் இருக்கும்" சரணின் குரலில் அசல் வேகம்.
சென்னை: சரத்குமார், கார்த்தி்க் கட்சிகள் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாகவும் இதனால் 5 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

ஆனால், இன்று எனது நிலையை கூறிவிட்டேன் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் அவர் கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

கூட்டணி குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக், புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மனித நேய மக்கள் கட்சியை சார்ந்தவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.

சரத்குமார், கார்த்திக் ஆகியோர் பாஜகவோடு சேர்ந்து பயணம் செய்ய இருக்கிறார்கள். அதே போல மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை வேறொரு கூட்டணி அமைத்து அவர்கள் தங்கள் பாதையில் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

எனவே நாங்கள் எங்கள் பாதையில் பயணத்தை தொடங்க இருக்கிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்சம் 8 தொகுதிகளில் அல்லது குறைந்தபட்சம் 5 தொகுதிகளிலாவது போட்டியிட இருக்கிறோம்.

கள்ளக்குறிச்சி, திருச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் சில தொகுதிகளில் போட்டியிடுவோர் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்னும் 2 நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவேன். திருச்சியில் மன்சூர் அலிகான் போட்டியிடுவார் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்து வருகிறேன். நான் போட்டியிடவும் வாய்ப்புண்டு.

லட்சிய திமுக தனித்து போட்டியிடும் என்று இன்று எனது நிலையை கூறிவிட்டேன் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பதை பின்னர் அறிவிப்பேன்.

வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி 100க்கு மேற்பட்ட இடங்களில் போட்டியிடும் என்றார்.

ஒரு படத்தின் பாடல்களை வெளியிடுவதற்குள் பல தயாரிப்பாளர்களுக்கு நாக்குத் தள்ளிவிடும். நிலைமை அப்படி. ஆனால் ஒரே நேரத்தி்ல 4 படங்களின் பாடல்களை வெளியிட்டு அசத்தியுள்ளார் நாக் ரவி. இந்த நான்கும் பிரபல நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்களல்ல... சின்ன அல்லது புதுமுகக் கலைஞர்கள் நடித்த சிறிய பட்ஜெட் படங்கள். இன்றை தேதிக்கு 'ஆக்ஸிஜன்' வேண்டி நிற்கும் படங்கள்.

அதுமட்டுமல்ல, தமிழ் சினிமா உலகில் முதல்முறையாக 4 திரைப்படங்களின் பாடல்கள் ஒரே மேடையில் வெளியிடப்படுவதும் இதுவே முதல்முறை.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சுவாமி சின்மயா அரங்கில் நடந்த இந்த விழாவில் பிஞ்சு மனசு, உன்னைக் கண் தேடுதே, திருமண அழைப்பிதழ் மற்றும் கலாச்சாரம் ஆகிய நான்கு படங்களின் இசையையும் உலகம் முழுக்க தனது இன்சைட் மீடியா மூலம் வெளியிட்டு சாதனைப் படைத்தார் நாக்ரவி.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம நாராயணன் இந்த ஆடியோக்களை வெளியிட்டார்.

'சிறிய திரைப்படங்களை இன்று சீண்ட ஆளில்லை. ஆனால் அப்படிப்பட்ட படங்களையே வாங்கி பெரிய அளவில் விழா எடுத்து, பெரிய படங்களாக்கி இருக்கிறார். நாக் ரவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்', என்றார் ராம நாராயணன்.

தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், தயாரிப்பாளர்கள் கோவைத் தம்பி, அழகன் தமிழ்மணி, ஏஎல் அழகப்பன், உள்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிகளை தயாரிப்பாளரும் பிஆர்ஓ சங்கத் தலைவருமான விஜயமுரளி தொகுத்து வழங்கினார். நாக் ரவி அனைவரையும் வரவேற்று தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


More than a Blog Aggregator

by வே.மதிமாறன்
A


More than a Blog Aggregator

by A Blog for Edutainment

கருத்துகள் இல்லை: