
உலகளவில் தனி ஈழ விடுதலை வேண்டி நமது உறவுகள் பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் இவ் வேளையில் தமிழ்நாட்டில் உள்ள ஈழத்து உறவுகளும் தமது போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். இதன்படி எதிர்வரும் 30.04.2009 அன்று சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திரு பழ. நெடுமாறன் அவர்களின் தலைமையில் பட்டினிப் போராட்டம் நடைபெற இருக்கின்றது. இதற்கு மேலும் வலு சேர்ப்பதற்காக வெளிநாட்டில் உள்ள நமது உறவுகள் இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பெருமளவு அணிதிரண்டு ஒத்துழைப்பு வழங்குவதற்குமான செய்தியை பரிமாறி இப்போராட்டத்திற்கு ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
கோயிலுக்கு போனா நாம எல்லாரும் " கடவுளே எல்லாரையும் காப்பாத்துப்பா" அப்படின்னு தான் கும்பிடுவோம்.
ஆனா தேர்தல் முடியிறவரை " கடவுளே எல்லாரையும் வோட்டு போட வைப்பா" அப்படின்னுதான் கும்பிடனும்,
வோட்டு போடறது எப்படின்னு உங்களுக்கு எல்லாம் தெரியும்.புதுசா நான் ஒன்னும் சொல்லி தர வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். வோட்டு போட்டதுக்கு அடையாளமாய் கைக்கு மை வைப்பாங்க ...
அன்றைக்கு யார் பார்த்தாலும் வோட்டு போட்டாச்சா ॥ வோட்டு போட்டாச்சா ॥ ன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் விசாரிச்சுக்குவாங்க ॥
அப்பெல்லாம் விரலை நீட்டி அதிலிருக்குற மையை காண்பித்து ( வோட்டு போட்டதற்கு அடையாளமாய் )போட்டாச்சு என்று சொல்வோம்।
(நியாயமா பார்த்தா நெத்தில நாமம் வச்சு விட்டிருக்கணும் ஆன கைல மையை வைக்கிறாங்க....)
இப்ப மேட்டருக்கு வருவோம் ....
யாருக்கு வேண்டுமானாலும் வோட்டு போடலாம் ஆனா இந்த காங்கிரஸ் க்கு மட்டும் வோட்டு போட கூடாது।
ஏன்னா எல்லாரும் வோட்டு போட்டாதான் (காங்கிரசை தவிர்த்து) ......காங்கிரஸ் க்கு தமிழன்னா யாருன்னு ஒரு "காட்டு" காட்ட முடியும்।
அதை எப்படி காட்டறதுன்னு புரியாதவங்க கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ।
அதனால மக்களே ....காங்கிரசை எதிர்த்து தேர்தல்ல வோட்டு போடறதுக்கு ஆட்காட்டி விரலை நீட்டனும் ..மை வைக்க ...வோட்டு போட்டதுக்கு அப்புறம் காங்கிரஸ் க்கு நடு விரலை நீட்டனும்...ஆப்பு வைக்க ॥
இப்ப புரியுதா ...நான் ஏன் இந்த இடுகைக்கு "விரலை நீட்டுங்கள்" அப்படின்னு தலைப்பு வச்சேன்னு!
எனக்கு தெரியும் நீங்க கண்டிப்பா நீட்டுவீங்கன்னு!(!?) ....
.
.
.
.
.
.
.
.
.
.
நகம் வளர்ந்திச்சின்னாகூட வெட்டிக்கலாம்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆனால்,
.
.
.
.
.
.
.
.
.
.
.
அறிவு வளர்ந்திச்சின்னா?!?!?!
.
.
.
.
கவலைப்படாதீங்க! உங்க நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் நடக்காது. தைரியமா இருங்க!!!
அறிவிப்பு: இது வெறும் நகைச்சுவையேயன்றி யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல
முன்ன ஒரு காலத்துல ஆண்டிக்காடு அப்டிங்கிற ஒரு கிராமத்துல முதன்முதலாக அந்த ஊர் மிராசுதாரு ஒரு டூரிங் டாக்கீஸ் ஓப்பன் பண்ணுனாராம். ஒரு வாரம் கழிச்சி இந்த விசயம் கேள்விப்பட்டு பக்கத்து கிராமத்துப் பண்ணையாரு முதன்முதலா சினிமா பார்க்க ஆசைப்பட்டு தன் கணக்குப்பிள்ளையோடு வண்டியக் கட்டிக்கிட்டு ஆண்டிக்காட்டுக்கு பயணமானாராம். அந்த டூரிங்டாக்கீஸ பாத்தவுடன் பண்ணையாருக்கு குஷி தாங்கலயாம். காரணம் அவர் முதன்முதலா சினிமா பாக்க போறாருல்ல. டூரிங் டாக்கீஸூன்னா அந்தக் காலத்துல சேரெல்லாம் கிடையாது. வெறும் மணல் தான். டிக்கெட்ட வாங்கிக்கிட்டு முன்பக்கமா போயி மணல மேடு குமிச்சி உக்காந்தாராம் பண்ணையாரு.
பக்கத்திலேயே பல்ல இளிச்சிக்கிட்டு கணக்குப்பிள்ளையும் உக்காந்தாராம். படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல ஒரு மழைக்காட்சி வந்ததாம். டப்புன்னு பண்ணையாரு, தன் கையில இருந்த குடைய எடுத்து விரிச்சாராம். கணக்குப்பிள்ளை டப்புன்னு தான் தோளில் போட்டிருந்த துண்ட எடுத்து தலையில போட்டுக்கிட்டாராம். கொஞ்ச நேரம் கழிஞ்சி மழை சீன் முடிஞ்சதும் குடையை மடக்கிய பண்ணையாரு பக்கத்தில இருந்த கணக்குப் பிள்ளைகிட்ட,"யோவ் கணக்கு வெளில எப்டி மழை பேஞ்சிருக்குன்னு பாத்திட்டு வாய்யா" அப்டின்னு சொன்னாராம்.வெளிய வந்த கணக்கு நேரே சிறுநீர் கழிப்பிடத்துக்குப் போயி அங்கின ஈரமா இருந்த இடத்துல கைய வச்சி அழுத்திப் பாத்துட்டு வேகமா வந்து பண்ணியாருகிட்ட அய்யா! உள்ள பேஞ்ச மழை வெளிய கம்மி தான்.
வாங்க அடுத்த மழை வருவதற்குள் நாம வண்டியக் கட்டிக்கிட்டு ஊருக்குப் போயிடலாம்னு சொல்லி ரெண்டு பேரும் ஊருக்கு கெளம்புனாங்களாம். வர்ற வழியெல்லாம் மக்களிடம் அங்க நல்ல மழை நம்ம இந்த ஊர்ல மழையே இல்லையே அப்டின்னு சொல்லிக்கிட்டே வந்தாராம். அதக்கேட்ட மக்கள் என்ன நம்ம பண்ணையாரு திடீர்னு என்னமோ சொல்றாரு. சித்திர மாசத்துல எப்படி மழை பேயும் அப்டின்னு கேட்டாங்களாம்.
அதுக்கு ஒருத்தரு ஏ! ஆத்தா சொல்றது யாரு, நம்ம தலைவராச்சே! உண்ணையாத் தான் இருக்கும். நம்மயெல்லாம் அவருக்கு உடன்பிறப்பு தானே! அப்ப இதெல்லாம் நம்பித்தான் ஆவனும்னு சொன்னாராம். இந்த மேட்டரு ஓரளவு புரிஞ்சிருக்கும் நெனக்கிறேன். நீங்க அப்டியே போயி கலைஞரின் உண்ணாவிரதக் காமெடியப் பாருங்க.
நண்பர்களே நாம் அனைவரும் வருடத்திற்கு இரண்டு முறையாவது நமது கணணியை பார்மெட் செய்து இருப்போம் அவ்வாறு செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் நாம் கணணியில் அடிப்படை மென்பொருட்களான யாகூ மெசஞ்சர், ஒபன் ஆபிஸ், கேம் ப்ளேயர், ஸ்கைப், அடோப் ப்ளாஸ் ப்ளேயர், விண்ரேர் போன்ற மென்பொருட்களை தரவிறக்கி பிறகு தனித்தனியாக நிறுவ வேண்டும்.
இவை அனைத்தும் மட்டுமல்லாது இன்னும் பிற சுதந்திர கட்டற்ற மென்பொருட்கள் இணைந்து ஒரே மென்பொருளாக நிறுவ ஒரு மென்பொருள் உள்ளது. அதுதான் சுருக்காமாக் சிப் என்று அழைக்கப்படும் ஸ்மார்டர் இன்ஸ்டாலர் பேக். நான் மேற்கூறிய மென்பொருள் அல்லாது நிறைய மென்பொருட்கள் உள்ளது. இது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மென்பொருளின் இணையதளம் சுட்டி
மென்பொருள் தரவிறக்க சுட்டி
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக